15 செ.மீ உயர்ந்த தென் சீனக்கடல்! ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

1900 ஆம் ஆண்டு முதல் தென் சீனக்கடல் 15 செ.மீ.வரை உயர்ந்துவிட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. தென்சீனக்கடலில் சீன அறிவியல் அகாடமி (CAS) மற்றும் நாட்டின் பிற நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்களால் ஒரு பிரமாண்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு தென் சீனக் கடலில் அதிக வளர்ச்சி விகிதம், தெளிவான வருடாந்திர வளர்ச்சி அடுக்கு மற்றும் பரந்த பரவலான பவளப்பாறையை மையமாகக் கொண்டது. கடல் நீர் சூழலின் மாற்றத்தை கண்டறிய இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆராய்ச்சியாளர்கள் பொரிட்ஸ் பவளம், கடல் மட்டத்தின் ஆக்ஸிஜன் அளவு, நிலையான ஐசோடோப்புகள், கடல் மேற்பரப்பு உப்புத்தன்மை, கடல் மேற்பரப்பு வெப்பநிலை மற்றும் தென் சீனக் கடலின் மழைப்பொழிவு ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு ஆகியவற்றை

“ஜோ பைடனின் ஒரு வார்த்தை கூட உறுதியளிக்கும் வகையில் இல்லை..!” – உக்ரைன் எம்.பி | I’ll be blunt, didn’t feel reassured: Ukrainian MP on Biden’s address in Poland

இன்னா சோவ்சன் (Inna Sovsun) அவர் இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் சுற்றி வளைக்காமல் நேரடியாகக் கூறுகிறேன். அமெரிக்க அதிபரின் பேச்சில் ஒரு வார்த்தை கூட, உக்ரைனுக்கு இப்போது கிடைப்பதை விட இன்னும் கூடுதல் உதவிகள் கிடைக்கும் என உறுதியாகக் கூறும் வகையில் இல்லை. (இப்போது கிடைக்கும் உதவிகளே போதவில்லை) அவர் போலந்தில் இருந்தவர்களுக்கு ஆறுதல் கூறியது மகிழ்ச்சி. ஆனால் உண்மையில் குண்டுகள் வெடித்துக் கொண்டிருப்பது கீவ்(kyiv) மற்றும் கார்கிவில்(kharkiv) தானே தவிர வார்சாவில்(Warsaw) இல்லை.” என்று பதிவிட்டிருக்கிறார். `வார்சா’ நகரம் போலந்து நாட்டின் தலைநகர் என்பது குறிப்பிடத்தக்கது. Source link

Pakistan PM Imran Khan will play till the last ball: Home Minister Sheikh Rashid | கடைசி பந்தில் சிக்சர் அடிக்க முயலும் இம்ரான் கான்; தப்பிக்குமா இம்ரானின் நாற்காலி..!!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் நாற்காலி ஆட்டம் கண்டுள்ளது. இம்ரான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த நிலையில், மார்ச் 28ம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. ஆனால் இதற்கு முன்னதாகவே இம்ரான் பதவியை விட்டு விலகலாம் என கூறப்பட்டு வந்த நிலையில்,  இன்னும் சிறிது நேரத்தில் இஸ்லாமாபாத்தில் இம்ரான் கானின் பேரணி நடக்கவுள்ளது.    பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது வலிமையை காட்டவும், ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளவும் தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளார்.  இதற்கிடையில், பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷித், இம்ரான் கான் களத்தில், கடைசி பந்து வரை அடித்து விளையாடுவார் என்று கூறியுள்ளார். பேரணியில் ராஜினாமா

'ரஷ்யா மீது உக்ரைனியர்கள் ஆழமான வெறுப்பு கொள்ளச் செய்கிறீர்கள்' – புதின் மீது அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

கீவ்: ரஷ்யா மீது எம்மக்களுக்கு வெறுப்பை விதைக்கிறீர்கள் என்று கூறியுள்ளார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி. உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் ஒரு மாதத்தையும் தாண்டி சென்று கொண்டிருக்கும் இவ்வேளையில், நேற்றிரவு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் மாஸ்கோவின் கொள்கைகளை வெகுக் கடுமையாக சாடியுள்ளார். அந்த வீடியோவில் ஜெலன்ஸ்கி, "எங்கள் மக்கள் ரஷ்யாவை வெறுக்கக் கூடிய அத்தனை செயல்களையும் நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள். இனி எம்மக்கள் அவர்களாகவே ரஷ்ய மொழியைப் புறக்கணிப்பார்கள். இதற்கு நீங்கள் நிகழ்த்தும் வெடிகுண்டு தாக்குதலும், அரங்கேற்றும் படுகொலைகளும், குற்றங்களும் தான் காரணமாக இருக்க முடியும். Source link

“இம்ரான் கான் அரசுக்கு விடை கொடுக்க இஸ்லாமாபாத் செல்கிறேன்” – மர்யம் நவாஸ்

பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் இம்ரான் கான், நாளை அந்த நாட்டின் பேரவையில் தனது ஆட்சியின் மீது கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை சந்திக்கிறார். இந்நிலையில் தனது ஆதரவாளர்கள் அனைவரும் இன்று இஸ்லாமாபாத் நகரில் நடைபெறுகின்ற பொதுப் பேரணியில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளார் இம்ரான் கான். அவர் இந்த கூட்டத்தில் தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் பதவி விலகுவார் என சொல்லப்படுகிறது.  இந்த சூழலில் எதிர்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சியின் துணைத் தலைவர் மர்யம் நவாஸ், தான் இஸ்லாமாபாத் விரைவதாக தெரிவித்துள்ளார்.  “பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு அஸ்தமித்து விட்டது. அதனை நேரில் பார்த்து அரசுக்கு விடை கொடுக்க நாங்கள் இஸ்லாமாபாத் செல்கிறோம். மக்களும்

கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணையைச் சோதித்த வடகொரியா – கூடுதல் பொருளாதாரத் தடை விதித்த அமெரிக்கா! U.S. imposes sanctions targeting North Korea’s missile program

அமெரிக்கா ஏற்கெனவே வட கொரியா மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளது. அதன் காரணமாக வட கொரியாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதற்கிடையே கொரோனா தொற்றுப் பரவல் அந்நாட்டின் பொருளாதார நிலையை மேலும் மோசமாக்கியுள்ளது. இந்நிலையில், ‘ஹவாசங்-17’ என்ற கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வட கொரியா வியாழக்கிழமை பரிசோதித்தது. வட கொரியாவின் ஆயுதத்திறனை உலகுக்குக் காட்டவே அடிக்கடி ஏவுகணை பரிசோதனை நடத்துவதாகக் கூறப்படுகிறது. கடந்த 2017-ம் ஆண்டுக்குப் பிறகு வட கொரியா பரிசோதனை நடத்திய மிகவும் சக்திவாய்ந்த ஏவுகணை இது எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வட கொரியாவின் ஏவுகணைத் திட்டத்துக்குத் தேவையான மூலப்பொருள்களை வழங்கிய ஐந்து நிறுவனங்கள், தனிநபா்கள் மீது அமெரிக்கா கூடுதல் பொருளாதாரத்

முடிவுக்கு வருகிறது உக்ரைன் – ரஷ்யா போர் : நாள் குறித்த புதின்! | Putin Has Already Declared May 9 as The END of the War in Ukraine

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை ஒரு மாதத்தை கடந்து நீடித்து வருகிறது. இந்த போரில் ரஷ்யா பெரும் சேதங்களை சந்தித்துள்ளதாகவும் இதுவரை ரஷ்யாவின் 7 ராணுவ தளபதிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக படைகளை முறையாக வழிநடத்தவில்லை என ரஷ்யாவின் 37-வது படைப்பிரிவின் தலைவரை சக வீரர்களே சுட்டுக்கொன்றதாக மேற்குலக நாடுகளின் உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளன.  போரில் தங்கள் தரப்பை சேர்ந்த 300 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக கிரம்ளின் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உண்மையில் இந்த எண்ணிக்கை ஐந்து அல்லது ஆறு மடங்கு அதிகம் இருக்கலாம் என என கூறப்படுகிறது.  மேலும் படிக்க | நேட்டோவை நம்பி தவறு செய்த உக்ரைன்! ரஷ்யாவுக்கு எதிராக உலக நாடுகள்

உக்ரைனில் மருத்துவமனைகள் மீதான தாக்குதல் அதிகரிப்பு: அதிர்ச்சித் தகவல்களுடன் WHO கவலை | Ukraine war: WHO says attacks on health facilities are rising daily

ஜெனிவா: உக்ரைனில் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார அமைப்புகள் மீதான தாக்குதல்கள் தினமும் அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்ய ராணுவப் படைகள் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தத் தாக்குதலில் மரியுபோல். கீவ், கார்கிவ் பகுதிகள் அதிகம் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. இந்தத் தாக்குதல்களின்போது பொதுமக்கள் குறிவைக்கப்படவில்லை என சர்வதேச சமூகத்தின் முன்பாக ரஷ்யா தெரிவித்து வருகிறது. இருந்த போதிலும் உக்ரைனின் போர் முனையில் இருந்துவரும் தகவல்கள் மற்றும் காணொலிகள் நிலைமையின் தீவிரத்தை வெளியுலகிற்கு அறிவித்து வருகின்றன. இந்த நிலையில், உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ள தகவல் மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்குவதாக உள்ளது. உக்ரைன் மீதான

துபாயில் ரூ.1600 கோடி முதலீட்டு ஒப்பந்தம் – தொழில் முதலீட்டார்களுக்கு முதல்வர் அழைப்பு

ஐக்கிய அரபு அமீரக முதலீட்டாளர்கள் மற்றும் முதலமைச்சர் சந்திப்பு நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு – தொழில் நிறுவனங்கள் இடையே 1600 கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 4 நாள் அரசு முறை பயணமாக துபாய் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக நேற்று ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து கண்காட்சியில் தமிழக அரங்கை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து இன்று துபாயில் தொழில் முதலீட்டாளர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். அப்போது தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு ஐக்கிய அரசு அமீரக முதலீட்டாளர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். மேலும், தொழில் முதலீட்டாளர்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க.

உக்ரைன் விவகாரம்: `இந்தியாவின் நிலைப்பாட்டில் திருப்தியில்லை; ஆனால்…'- அமெரிக்கா சொல்வதென்ன?

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த மாதம் 24-ம் தொடங்கிய போர், ஒரு மாதத்தைக் கடந்தும் இன்னும் தொடர்கிறது. ரஷ்யாவின் இத்தகைய ஆக்கிரமிப்பு நடவடிக்கையை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகள் கண்டித்து வருகின்றது. எனினும், இதுவரையில் இந்தியா, ரஷ்யா, உக்ரைன் என எந்த தரப்புக்கும் ஆதரவு தெரிவிக்காமல் நடுநிலை வகித்து வருகிறது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நாவில் 5 முறை வாக்கெடுப்பு நடத்தியும், இந்தியா யாருக்கும் சாதகமாக வாக்களிக்காமல் வாக்கெடுப்பை புறக்கணித்தது. இந்த நிலையில், அமெரிக்க வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் இந்தோ-பசிபிக் இயக்குநரான மீரா ராப்-ஹூப்பர், “ரஷ்யா-உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு திருப்தியானதாக இல்லையென்றாலும், அதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை” என

1 2 3 81
Live Updates COVID-19