“அரசு அலுவலகங்களில் புரோக்கர்கள் மிதக்கிறார்கள்!" – புதுச்சேரி அமைச்சர்கள் மீது பாயும் நாராயணசாமி

புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, “காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கே தாட்டூ அணை கட்டுவதற்காக கர்நாடக அரசு பட்ஜெட்டில் முதற்கட்டமாக ரூ.1,000 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. அதனால் தமிழக அரசு மேக்கே தாட்டூ அணை கட்ட கூடாது என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஆனால், கர்நாடக அரசு சட்டவிதிகளை மீறி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. மாநில உரிமைகள் மற்றும் உறவுகளை மிகவும் சங்கடப்படுத்தும் வகையில் கர்நாடக அரசு இதை செய்துள்ளது. அதை என்.ஆர் காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. மேக்கே தாட்டூவில் அணை கட்டினால் தமிழ்நாடும், காரைக்காலும்

நெல் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி நூதன முறையில் கோரிக்கை; தஞ்சாவூரில் என்ன நடந்தது? | farmers requested tn govt to increase the procurement price of paddy

அப்போது ஏராளமான ஆரஞ்சு, பேரீச்சை, சப்போட்டா பழங்களை கொண்டு வந்த தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன், அவற்றை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு வழங்கினார். அதனை அனைவரும் பெற்றுக் கொண்ட பின்னர், எதற்காக, இவற்றை வழங்கினோம் என விளக்கமளித்து பேசிய சுவாமிமலை சுந்தர விமல்நாதன், “கேரள மாநில அரசு, அங்குள்ள உழவர்களின் நலன் கருதி, ஒரு குவிண்டால் நெல்லுக்கு 2830 ரூபாய் விலை நிர்ணயம் செய்து, ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்துவதாக அறிவித்துள்ளது. கேரள முதல்வரை பாராட்டி மகிழும் விதமாகத்தான் ஆரஞ்சு, பேரீச்சை பழங்களை வழங்கினோம். சுந்தர விமலநாதன் இனிப்புகளுக்கு மாற்றாக,

கோவை: லஞ்சம் வாங்கிய வருமான வரித்துறை அதிகாரி… கையும் களவுமாகப் பிடித்த சி.பி.ஐ! | Coimbatore CBI arrested Income tax official for bribe

ஆனால், பாலதண்டபாணி தான் முறைப்படிதான் வரி செலுத்தியதாக பதில் அளித்துள்ளார். டேனியல் ராஜ் அவரைத் தன் அலுலகத்துக்கு வரவழைத்து, “முறையாக வரிகட்டுங்கள். இல்லையேல் எனக்கு ரூ.5 லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். இரண்டு தரப்பினரும் பேசி, ரூ.2.5 லட்சத்துக்கு உடன்பாடு ஆகியுள்ளனர். வருமான வரித்துறை இதற்கு ஆடிட்டர் ஶ்ரீதரன் என்பவர் இடைத்தரகராகச் செயல்பட்டுள்ளார். இது குறித்து பாலதண்டபானி சி.பி.ஐ அதிகாரிகளிடம் புகார் அளித்தார். சி.பி.ஐ அறிவுறுத்தலின்பேரில் வருமான வரித்துறை அலுவலகத்துக்குச் சென்றார் பாலதண்டபாணி. Source link

இரண்டு மாணவிகள்… தமிழ்நாடு டு ஆந்திரா… கோவை போலீஸில் சிக்கிய `மாயாவி’ மணிமாறன்!

சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன். அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த மணிமாறன் மீது மோசடி, பாலியல் என்று ஏராளமான புகார்கள் உள்ளன. ஏற்கெனவே செய்த காதல் திருமணம் விவாகரத்து ஆக, இரண்டாவதாக ஒரு திருமணம் செய்தார். மணிமாறன் மூன்று பெண்களை ஏமாற்றி… இரண்டு மாணவிகளைக் கடத்தி… போலீஸில் சிக்காத ‘மாயாவி’ மணிமாறன்! பள்ளியில் இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு நடுவே ஒரு சிட் பண்ட் நிறுவனம் நடத்தி மோசடி செய்தப் புகாரில் சிக்கினார். அங்கு பணியாற்றி வந்த ஓர் பெண்ணை அழைத்துக் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் வெடிக்கவே, கொரோனா காலகட்டத்தில் அவர் கோவை சரவணம்பட்டியில் வாடகைக்கு வீடு

மதிமுக: வாரிசு அரசியலை எதிர்த்து கட்சிக்குள் கலகம் – வைகோவுக்கு அதிர்ச்சிக் கொடுத்த நிர்வாகிகள்

மதிமுக மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் சிலர் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவுக்கு எதிராக சிவகங்கையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புலவர் செவந்தியப்பன் மதிமுகவின் சிவகங்கை மாவட்ட செயலாளர் புலவர் செவந்தியப்பன் தலைமையில் விருதுநகர் மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம், திருவாரூர் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன், உயர்மட்ட குழு உறுப்பினர் மதுரை அழகுசுந்தரம் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் இன்று சிவகங்கையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்கள். இந்த கூட்டம் நடைபெறும் தகவலால் சிவகங்கை நகரம் பரபரப்பானது. செய்தியாளர்கள் அங்கு விரைந்தனர். நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், ‘மதிமுகவில் இணைந்து கொள்கைக்காக 30 ஆண்டுகளாக கட்டி காத்து கட்சியை நடத்தி வந்த தலைமை, குறுகிய மனப்பான்மையில் உள் நோக்கத்தோடு

பெட்ரோல் ஊற்றி மகன் குடும்பத்தை எரித்துக் கொன்றது எப்படி? – முதியவர் அதிர்ச்சி வாக்குமூலம் | police arrested father who sets son family fire alive when they sleep

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், தொடுபுழ அருகே உள்ள சீனிக்குழி பகுதியைச் சேர்ந்தவர் ஹமீது (79). ஹமீதுக்கு இரண்டு மகன்கள். அதில் இரண்டாவது முகமது பைசல் (45), மருமகள் ஷீபா (40), பேத்திகள் மெஹரா (17), அஸ்னா(13) ஆகியோர் ஒரு வீட்டில் வசித்து வந்தனர். ஹமீதுக்கும் அவர் மகன் முகமது பைசலுக்கும் சொத்து சம்பந்தமாக சில ஆண்டுகளாக பிரச்னை இருந்து வந்துள்ளது. இதையடுத்து முகமது பைசல் புதிதாக ஒரு வீடு கட்டி வந்துள்ளார். அந்த வீடு பணி முடிந்து விரைவில் அங்கு குடியேற இருந்தனர். இந்த நிலையில், முகமது பைசலின் மனைவி, மகள்கள் என 4 பேரையும் ஹமீது தீவைத்து எரித்து கொலை செய்துள்ளார். கொலை

நம்மாழ்வார் Technology-யில் அசத்தும் விவசாயி! | Pasumai Vikatan | virudhunagar farmer shares his integrated Farming experience

`நிலத்தடி நீரை உயர்த்தி, களைகளைக் கட்டுப்படுத்தி மகசூலை அதிகரிக்க ஒரே வழி மூடாக்குதான்’ என்கிறார் விருதுநகரைச் சேர்ந்த இயற்கை விவசாயி இசைமணி. அவர் தன் அனுபவம் குறித்து இந்த காணொளியில் விளக்குகிறார். தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism Source link

`எளிதில் பணம் சம்பாதிக்க, படம் பார்த்து பைக்குகளை திருடினோம்’ – கோவையில் சிக்கிய இருவர்

பைக் திருட்டு எல்லா ஊர்களிலும் தடுக்க முடியாத விஷயமாகிவிட்டது. கோவை சுற்றுவட்டாரங்களில் பைக்குகளை திருடி, ஆன்லைன் மூலம் விற்கும் கும்பல் குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிந்தது. ராகுல் கிருஷ்ணா என்ற இளைஞர், கணபதி அருகே வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த யமஹா ஆர்.எக்ஸ் 100 பைக் திருடுபோனது குறித்து போலீஸில் புகார் அளித்திருந்தார். கோவை UPS வெடித்து உயிரிழந்தனரா மூன்று பெண்கள்; கோவை விபத்தில் நடந்தது என்ன? அந்த பைக்கை விற்பது தொடர்பாக பரவிய ஓர் வாட்ஸப் மெசேஜ் அங்கு சுற்றி, இங்கு சுற்றி கடைசியில் சரவணம்பட்டி போலீஸாருக்கு வந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சரவணம்பட்டி போலீஸார், தடாகம் சாலை இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜீவானந்தம்

`ஷூட்டிங் ஸ்பாட் பாலியல் அத்துமீறல்கள்; தனிக் குழு அமைப்பது கட்டாயம்!’ – கேரள நீதிமன்றம் உத்தரவு | kerala HC says malayalam film sets must have sexual harassment panel

`சினிமாவை பொறுத்தவரை படப்பிடிப்பு நடக்கும் ஷூட்டிங் ஸ்பாட்தான் பணியிடம். மலையாள நடிகர்கள் சங்கமான அம்மா, பெப்கா, கேரள பிலிம் சேம்பர் ஆஃப் காமஸ், கேரள பிலிம் புரொடியூசர்ஸ் அசோசியேஷன் போன்ற சினிமா அமைப்புகளை நடிகைகள் மற்றும் கலைஞர்களின் முதலாளிகளாகப் பார்க்க முடியாது. இந்த அமைப்புகளில் பெண்கள் உட்பட பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருந்தால் விசாரணைக் குழு ஏற்படுத்த வேண்டும்’ என கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு சினிமா துறையில் உள்ள பெண்களுக்கு ஆத்மார்த்த நம்பிக்கையை ஏற்படுத்தவும், அவர்களின் சுயமரியாதையையும், உரிமையையும், சுதந்திரத்தையும் பாதுகாக்கும் விதமாகவும் அமையும் எனவும் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. Regulation (Representational Picture)Photograph by Invoice Oxford on Unsplash நடிகைகள் சங்கமான

5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் பாவனா; வாழ்த்தும் திரையுலகம்!|Article about actress bhavana’s re entry in cinema industry

மலையாளம், தமிழ், கன்னடம் என பலமொழி சினிமாக்களில் பிஸியாக நடித்துவந்தவர் கேரள நடிகை பாவனா. பாவனா கடைசியாக 2017-ல் வெளியான ஆதம் ஜாண் சினிமாவில் நடித்திருந்தார். அதன் பிறகு கடந்த ஐந்து ஆண்டுகளாக சினிமாவில் இருந்து ஒதுங்கியே இருந்தார். மீடியாக்களிடமும் வெளிப்படையாக பேசாமல் இருந்தார். இந்த நிலையில், உலக மகளிர் தினத்தில் `வி த வுமன் ஆஃப் ஆசியா’ கூட்டமைப்பு நடத்திய `குளோபல் டெளன்ஹால்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மனம் திறந்தார் பாவனா. சினிமா வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலை ஏற்பட்டதாகவும், அப்போது சிலர் எனக்கு வாய்ப்பு வழங்கியதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் அந்த வாய்ப்புக்களை வேண்டாம் என மறுத்ததாகவும் பேசியிருந்தார். அதன்பிறகு மீடியாக்களிடம் சகஜமாக பேசத்தொடங்கிய பாவனா விரைவில்

1 2 3 14
Live Updates COVID-19