`தாய், தந்தைக்கு சல்யூட் அடித்து பதவியேற்ற கன்னியாகுமரி எஸ்.பி’ – போலீஸார் நெகிழ்ச்சி! | Kanyakumari new sp takes oath after hit a salute to his parents

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக செயல்பட்டு வந்த பத்ரி நாராயணன், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். அதையடுத்து, சென்னை தி.நகர் துணை கமிஷனராக இருந்த ஹரி கிரன் பிரசாத் கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி-யாக நியமிக்கப்பட்டார். ஹரி கிரன் பிரசாத் நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தின் 52-வது எஸ்.பி-யாக பொறுப்பேற்றுக்கொண்டார். நாகர்கோவில் எஸ்.பி அலுவலகத்தில் நடந்த பதவியேற்பு நிகழ்ச்சிக்கு அவரின் தந்தை நரசிம்மலு, தாய் கஸ்தூரி ஆகியோரும் வந்திருந்தனர். பதவியேற்புக்கு முன்னதாக ஹரிகிரன் பிரசாத் தன் தாய் தந்தையருக்கு சல்யூட் அடித்து பெற்றோருக்கு மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வு அங்கிருந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாரை நெகிழ்ச்சியடைய செய்தது. குமரி எஸ்.பி ஹரிகிரன் பிரசாத் குமரி

ஆபாசமாக மிரட்டிய கடன் ஆப் நிறுவனம் – கோவை ஐ.டி ஊழியர் தற்கொலை! | Coimbatore IT employee suicide over loan app issue

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் ஏத்தக்குடி பகுதியைச் சேர்ந்தவர் பாரதிராஜா (25). இவர் தனது சகோதரர்களுடன் கோவை கணபதி பகுதியில் தங்கி, ஓர் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ஆப் மூலம் ரூ.12,108 கடன் வாங்கியிருந்தார். கடன் தொகையை சரியாக செலுத்தாத காரணத்தால், அந்த கடன் ஆப் நிறுவனத்திலிருந்து, பாரதிராஜாவை அழைத்து தொடர்ந்து மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. மிரட்டல்சித்தரிப்புப் படம் ஒருகட்டத்தில் அவரின் போட்டோவை ஆபாசமாக மார்ஃப் செய்து, அதை அவரின் கான்டாக்டில் உள்ள அனைவருக்கும் அனுப்பியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, பாரதிராஜா மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். Source link

கோகுல்ராஜ் கொலை வழக்கு: `தண்டனையை ரத்து செய்க’ – யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் மேல்முறையீடு!

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் அளிக்கப்பட்ட சாகும்வரை ஆயுள் தண்டணையை எதிர்த்து யுவராஜ் தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில், சிபிசிஐடி-யும், கோகுல்ராஜின் தாயாரும் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யுவராஜ் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் கோகுல்ராஜ், தங்கள் சமூகத்து பெண்ணை காதலித்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல், அவரை கடத்தி சென்று ஆணவக்கொலை செய்த யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு கடந்த 8-ம் தேதி மதுரையிலுள்ள தீண்டாமை வன்கொடுமைக்கான சிறப்பு நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தண்டனை, தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. தீர்ப்பில் கூறப்பட்டுள்ள பல விஷயங்கள் மக்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு இந்த வழக்கில் சிசிடிவி பதிவின் உண்மைத்தன்மை,

`அம்மாவின் புட்டு உறவுகளை உடைக்கிறது!' – வைரலான 3-ம் வகுப்பு மாணவனின் தேர்வு பதில்

கதகளி, வெளிர் சந்தன நேரியல் சேலை, செண்டைமேளம், களரி வரிசையில் `புட்டு’ உணவு கேரள பாரம்பர்யத்தை பறைசாற்றும் அடையாளம். புட்டு உடன் பயறு, பப்படம், கூடவே கடலைக்கறி என விதவிதமாகச் சேர்த்து ருசித்து சாப்பிடுவார்கள் கேரளவாசிகள். அசைவ கறிகளை சேர்த்தோ அல்லது பழங்களை சேர்த்தோ புட்டு சாப்பிடுவார்கள். கேரள மாநிலத்தில் பெரும்பாலான ஹோட்டல்களில் புட்டு முக்கியமான உணவாக கிடைக்கும். கேரள வீடுகளில் காலை, இரவு நேரங்களில் சிற்றுண்டியாக புட்டு இடம்பெறுவதை பார்க்க முடியும். புட்டு பற்றி கட்டுரை எடுதிய மாணவன் ஜெயிஸ் ஜோசப் `கிராண்ட் சன் ஆஃப் நாகர்கோவில் எம்.எல்.ஏ ஸ்ரீ எம்.ஆர்.காந்தி’ – இணையத்தில் வைரலாகும் புகைப்படம் கேரளாவின் மாநில உணவு எனச் சொல்லும்

மாற்றுத்திறனாளி போலீஸாரால் தாக்கப்பட்ட விவகாரம்! – இன்ஸ்பெக்டர் மீதும் பாய்ந்தது நடவடிக்கை | departmental action taken against policemen attacked physically disabled man

புதுக்கோட்டை மாவட்டம் கவரப்பட்டியைச் சேர்ந்தவர் சங்கர். மாற்றுத்திறனாளியான இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளி அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்பட்டுவதாக விராலிமலை போலீஸாரிடம் புகார் தெரிவித்திருக்கிறார். ஆனால், சங்கரின் புகார் மீது நடவடிக்கை எடுக்காத விராலிமலை காவலர்கள், மாறாக சங்கரையே அடித்து உதைத்திருக்கின்றனர். இதுகுறித்து சங்கரின் தாயார், வக்கீல் பழனியப்பன் உதவியுடன் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணனின் கவனத்துக்கு இந்தத் தகவலைக் கொண்டு சென்றனர். இதையடுத்து, மாற்றுத்திறனாளியைக் கண்மூடித்தனமாகத் தாக்கிய காவலர்கள் பிரபு, செந்தில், அசோக்குமார் ஆகிய மூன்று பேரையும் சஸ்பெண்ட் செய்ய ஐ.ஜி பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். 3 பேரையும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்பி நிஷாபார்த்திபன் உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் பத்மா

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா; வள்ளி திருக்கல்யாணம்! | Panguni uthiram festival celebrated in grand manner at Tiruchendur

தொடா்ந்து, சுவாமியும் அம்மனும் திருவீதி உலா வந்து, இரவு 10 மணிக்கு மேல் திருக்கோயிலில் 108 மகாதேவா் சந்நிதி முன்பு சுவாமிக்கும் வள்ளியம்பாளுக்கும் திருக்கல்யாணமும் நடைபெற்றது. திருக்கல்யாணம் என்பதால் திருக்கோயிலில் இரவு மூலவர் சுப்பிரமணியருக்கு ‘ராக்கால அபிஷேகம்’ நடைபெறாது என்று கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. திருச்செந்தூர் முருகப்பெருமான் பக்தர்கள், அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் பெற்றனர். அங்கப் பிரதட்சணம், பால்குடம், காவடியாட்டம், பஜனை, கந்த சஷ்டிக் கவசப் பாடல் என முருக பக்தர்களின் ‘அரோகரா’ கோஷம் செந்தூரில் ஓங்கி ஒலிக்கின்றது. திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உபகோயிலான நாலுமூலைக்கிணறு, அருள்மிகு குன்றுமேலய்யன் சாஸ்தா திருக்கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, சுவாமிக்கு

ஜோலார்பேட்டை: நண்பனின் மனைவியுடன் குடும்பம் நடத்திய இளைஞர்-உறவு முறிந்ததால் ரயிலில் பாய்ந்து தற்கொலை

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகேயுள்ள பாரதிதாசன் நகர் தண்டவாளப் பகுதியில் நேற்று முன்தினம் இளைஞர் ஒருவர் ரயிலில் அடிபட்ட நிலையில், இறந்துகிடந்தார். தகவலறிந்து அங்கு சென்ற ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார், உடலை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து இறந்தவர் குறித்து விசாரித்தனர். இறந்த நபர் திருப்பத்தூர் அப்பாய் தெருவைச் சேர்ந்த 25 வயதாகும் சுகவனம் என்ற தேங்காய் உரிக்கும் தொழிலாளி எனத் தெரியவந்தது. சுகவனம் விசாரணையில், சுகவனத்தின் நண்பர் ஓராண்டுக்கு முன்பு இளம்பெண் ஒருவரைக் காதலித்திருக்கிறார். வீட்டைவிட்டு வெளியேறிய அந்தக் காதல் ஜோடிக்கு சுகவனம்தான் திருமணம் செய்துவைத்திருக்கிறார். இல்லற வாழ்க்கையைத் தொடங்கிய அந்தக் காதல் ஜோடி

பக்திப் பரவசம்…கோலாகலம்… பிரமாண்டம்… மெய் சிலிர்க்க வைத்த திருவாரூர் தேர்த் திருவிழா | Thiruvaroor aazhi ther utsavam finished in a grand manor

திருவாரூர் தியாகராஜர் சுவாமி திருக்கோயிலின் பிரமாண்ட தேர்த் திருவிழா, பக்திப் பரவசத்துடனும் மிகுந்த கோலாகலத்துடனும் நடைபெற்றது. இவ்விழாவில் திருவாரூர் மக்கள் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் இருந்தும் வெளிமாநிலங்களிலும் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். திருவாரூர் தேர்த் திருவிழா ஆசியாவிலேயே மிகப் பெரிய தேர் எனப் போற்றப்படக்கூடிய திருவாரூர் தேரின் சிறப்பம்சங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இதன் மொத்த உயரம் 96 அடி. இதன் மரக்கட்டுமானம் மட்டுமே 350 எடை கொண்டது. தேர் திருவிழாவின் போது அலங்கரிக்கப்படும், மலர், காகிதம் உள்ளிட்டவைகளின் எடை 50 டன். இது மட்டுமல்ல, திருவாரூர் ஆழித்தேரின் சிறப்புகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும்

நெல்லை: தாமிரபரணி ஆற்றுக்குச் சென்ற பெண்; கைகள் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூரம்! | a lady was murdered near river thamirabarani in nellai

நெல்லையை அடுத்த திருமலைக்கொழுந்து புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுடலைமுத்து. இவர் மனைவி மாதா. விவசாயத் தொழில் செய்துவரும் இவர்கள் குழந்தைகளுடன் வசித்து வந்தனர். 50 வயது நிரம்பிய மாதா, உறவினர்களுடன் பேசிக் கொண்டிருந்துள்ளார். பின்னர் அருகிலிருக்கும் தாமிரபரணி ஆற்றுக்குச் சென்று குளித்துவிட்டு வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றுள்ளார். கொலை நடந்த புதர் மண்டிய பகுதி ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் உறவினர்கள் அவரை ஆற்றுக்குச் சென்று தேடியிருக்கிறார்கள். அப்போது அங்குள்ள புதர் பகுதியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்துள்ளார். அரை நிர்வாணத்துடன் அவர் உடல் கிடந்ததால் அவரை யாராவது பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தி கொலை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள். Source

விதை உற்பத்தி சான்று பெறுவது எப்படி? முழுமையான விளக்கம் | Explainer | Pasumai Vikatan | how to register for seed production scheme – pasumai vikatan

விதை உற்பத்தி குறித்து முழுமையான விளக்கம் அளிக்கிறார் திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலையத்தில் விதையியல் துறை உதவிப் பேராசிரியரான முனைவர் க.பரமேஸ்வரி. தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism Source link

1 2 3 12
Live Updates COVID-19