ஆம்பூர்: இன்ஸ்டாகிராமில் மூழ்கிக்கிடந்த பள்ளி மாணவி! – பெற்றோர் கண்டித்ததால் தற்கொலை | school girl in Ambur commits suicide after her parents scold over mobile overuse

ஷார்ட் வீடியோ பிளாட்ஃபார்ம்கள் நிறைய வந்துவிட்டதால், செல்போன்களிலேயே பலரும் மூழ்கிக் கிடக்கிறார்கள். அதிலும், இந்தியாவில் டிக்டாக் செயலி முடக்கப்பட்ட பின்பு, அங்கிருந்த கிரியேட்டர்களும், பார்வையாளர்களும் இன்ஸ்டா ‘ரீல்ஸ்’ பக்கம் திரும்பிவிட்டார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரீல் வீடியோக்களைப் பதிவிடுகிறார்கள். இப்படியான சமூக வலைதளப் பொழுதுபோக்கு அம்சங்களால், நிறைய ஆபத்துகளும் இருக்கத்தான் செய்கின்றன. அந்த வகையில், இன்ஸ்டாகிராமில் மூழ்கிக் கிடந்த மாணவியைக் கண்டிக்கும் வகையில் பெற்றோர் செல்போனைப் பிடுங்கியதால், மனமுடைந்த அந்த மாணவி தற்கொலைச் செய்துகொண்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகேயுள்ள உடையராஜபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன், ஆட்டோ ஓட்டுநர். இவர் மகள் மாதனூர் பகுதியிலிருக்கும் அரசு நிதியுதவிப் பெறும் பள்ளியில்

இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 4100 பேர் பலி! திடீர் உயர்வுக்கு காரணம் என்ன?

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,660 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், 4,100 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,660 பேருக்கு கொரோனோ தொற்று உறுதியாகியுள்ளது. இந்தியாவின் மொத்த கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4,30,18,032 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 4,100 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதனால் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,20,855 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பில் திடீர் உயர்வுக்கு காரணம் என்ன என்பதையும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கியுள்ளது. இதுநாள்வரை , மகாராஷ்டிரா மாநிலத்தில்

வேலூர்: பாலியல் தொல்லை… 7-ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி! – 55 வயது ஆசிரியர் சிறையிலடைப்பு | school student attempted suicide due to sexual harassment by the teacher

வேலூர் மாவட்டம், காட்பாடி அருகேயுள்ள திருவலம் பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைந்திருக்கிறது. இந்தப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மொத்தம் 561 மாணவிகள் படிக்கிறார்கள். இவர்களுக்கு பாடம் நடத்துவதற்காக 25 இருபால் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பள்ளியில், கடந்த 9 ஆண்டுகளாக ஆங்கில பாட ஆசிரியராகப் பணியாற்றிவரும் முரளி கிருஷ்ணன் என்பவருக்கு 55 வயது ஆகிறது. இவருக்கு ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள். அவர்கள் திருமணமாகி தங்கள் குழந்தைகளுடன் வசித்துவருகிறார்கள். பேரக் குழந்தைகளை எடுத்துவிட்ட ஆசிரியர் முரளி கிருஷ்ணன், பேத்தி வயதாகும் மாணவிகளிடம் அநாகரிகமான முறையில் நடந்துகொள்வார் எனக் கூறப்படுகிறது. மாணவிகளைக் கன்னத்தைப் பிடித்து கிள்ளுவது, ஜடையைப்

கொரோனா 4ஆவது அலை எப்போது வரும்? – அமைச்சர் சொன்ன தகவல்

தமிழகத்தில் கொரோனா 4ஆவது அலை வராமல் தடுக்க அனைவரும் தடுப்பூசி செலுத்துவது அவசியம் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ஆலந்தூர் மாநகராட்சி அலுவலகத்தில் 26ஆவது மெகா தடுப்பூசி முகாமை அமைச்சர் தொடங்கி வைத்தார். கடலூர், கோவை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், வேலூர் ஆகிய 7 மாவட்டங்களில் 100% பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். தமிழகத்தில் 50 லட்சத்து 61ஆயிரத்து 287 பேருக்கு முதல் தவணையும், ஒரு கோடியே 34 லட்சத்து 97ஆயிரத்து 690 பேருக்கு இரண்டாவது தவணையும் தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளதாக அவர் கூறினார். தமிழகத்திலுள்ள 22 லட்சம் தகுதியான சிறார்களில் 10 லட்சம் பேருக்கு

மேக்கேதாட்டூ அணை: `தீர்மானம் மட்டும் போதாது, இதைச் செய்ய வேண்டும்!’ – அரசுக்கு மணியரசன் கோரிக்கை | maniarasan requests tn govt to take immediate action in mekedatu dam issue

இவ்வளவு தீவிரமாகப் பேசி, மேக்கேதாட்டூ தீர்மானத்தை முன்வைத்தனர். அனைத்துக் கட்சிகளும் ஆதரித்த அத்தீர்மானம் மறுபடியும் இந்திய அரசுக்கு வேண்டுகோள் வைத்து, மேக்கேதாட்டூவை அனுமதிக்காதீர் என்ற கோரிக்கையுடன் முடிந்துவிட்டது. தமிழ்நாடு தழுவிய மக்கள் எழுச்சிப் பேரணி, ஆர்ப்பாட்டம் போன்ற எந்த செயல் திட்டத்தையும் அத்தீர்மானம் முன்வைக்கவில்லை. ஐம்பதாண்டுகளுக்கு மேலாகக் காவிரிச் சிக்கலில் எதையும் சாதிக்க முடியவில்லை. தமிழ்நாட்டுக்கு வராமல் காவிரி நீரை தடுக்க கர்நாடக அரசு புதிது புதிதாக கட்டிய அணைகளை தமிழ்நாட்டு ஆட்சியாளர்களாலும், கட்சிகளாலும் தடுக்க முடியவில்லை. இந்திய அரசின் சூழ்ச்சிகளைத் தடுக்க முடியாத தி.மு.க., அ.இ.அ.தி.மு.க ஆட்சிகளையோ, அக்கட்சிகளையோ மீண்டும் எதிர்பார்த்து, செயலற்றுத் தமிழ்நாட்டு மக்கள் இருந்தால், மேக்கேதாட்டூ அணையைக் கர்நாடகம் கட்டி முடித்து

கோவிஷீல்ட் – 2 டோஸ்களின் இடைவெளி குறைகிறது?

கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசிக்கான 2ஆவது தவணை இடைவெளி 3 மாதங்களில் இருந்து 2 மாதங்களாக குறைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளிலும் இந்தியாவில் சில மாநிலங்களிலும் கொரோனா தொற்றுப்பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எனவே தடுப்பூசி செலுத்தும் பணியை வேகப்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் கோவிஷீல்ட் தடுப்பூசியின் 2ஆவது தவணைக்கு 12 முதல் 16 வாரங்களாக உள்ள இடைவெளியை 8 முதல் 12 வாரங்களாக குறைக்க மத்திய அரசுக்கு தேசிய வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது. ஒமைக்ரான் வகை கொரோனாவை தடுப்பதில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி குறிப்பிடத்தக்க பங்கு வகிப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதால் அதனையும் விரைவுபடுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

நூறு நாள் வேலைத் திட்டத்தின்போது கிடைத்த புதையல்; 79 கிராம் ஆபரணங்கள் அரசிடம் ஒப்படைப்பு! I 79 grams jewel treasure found in pudukottai handed over to the government

இதுபற்றி, ஆபரணங்களைக் கண்டெடுத்த பெண்களிடம் கேட்டோம். “எங்க பகுதியில இருக்க வரத்து வாரியை வெட்டிக்கிட்டு இருந்தோம். அப்ப முடிச்சி மாதிரி ஒண்ணு தட்டுப்பட்டுச்சு. பில்லி, சூனியம் வச்ச பொட்டலமா இருக்குமோன்னு மொதல்ல பயந்தோம். உடனே பணித்தளப் பொறுப்பாளர்கிட்டயும், தலைவர்கிட்டயும் தகவல் சொன்னோம். அப்புறம் அவங்க எல்லாரும் வந்து பார்த்தாங்க. எல்லாரோட முன்னிலையிலயும் பிரிச்சிப் பார்த்தப்போதான், தாலியில கோர்க்கிற 44 குண்டு மணிகள், 10 காசுகள் அதுல இருந்துச்சு. அந்தக் காசுல 22 கேரட் கோல்டு 1996னு அச்சிடப்பட்டிருந்துச்சு. உடனே, அதை தாசில்தார்கிட்ட ஒப்படைச்சிட்டோம்” என்றனர். புதையலில் கிடைத்த ஆபரணங்கள் இதுபற்றி தாசில்தார் செந்தில் நாயகியிடம் கேட்டபோது, “கிராம மக்கள் 79 கிராம் ஆபரணங்களை ஒப்படைத்தனர். அதனை,

கொரோனா பொதுமுடக்கத்தில் மேலும் தளர்வுகளா? முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வுகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. வருகிற 31ஆம் தேதியுடன் கொரோனா பொதுமுடக்க கட்டுப்பாடுகள் தொடர்புடைய விதிமுறைகள் முடிவடைய உள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை ஆலோசனை நடத்தி உள்ளார். இந்நிகழ்வில் தலைமைச் செயலர், மருத்துவத் துறை செயலர், வருவாய் துறை செயலர் உள்ளிட்ட அரசின் உயர் அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்றனர். கொரோனா தடுப்பூசி போடாதவர்களைக் கண்டறிந்து தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்தவும், பூஸ்டர் டோஸ் மற்றும் 12 வயதுக்கு மேற்பட்ட பள்ளிக் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை உறுதிப்படுத்தவும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. <blockquote class=”twitter-tweet”><p lang=”und” dir=”ltr”><a href=”https://twitter.com/hashtag/CMMKSTALIN?src=hash&amp;ref_src=twsrcpercent5Etfw”>#CMMKSTALIN</a> | <a href=”https://twitter.com/hashtag/TNDIPR?src=hash&amp;ref_src=twsrcpercent5Etfw”>#TNDIPR</a> |<a href=”https://twitter.com/CMOTamilnadu?ref_src=twsrcpercent5Etfw”>@CMOTamilnadu</a> <a href=”https://twitter.com/mkstalin?ref_src=twsrcpercent5Etfw”>@mkstalin</a> <a

மாரி பட வசன ஸ்டேட்டஸால் கடுப்பான கோவை எஸ்.ஐ! – வைரல் ஆடியோவின் பின்னணி என்ன? | Coimbatore SI Threatened youngster over whats app status

இந்நிலையில் போலீஸ் மிரட்டியதால், மன உளைச்சலில் இருந்ததாக சொல்லப்படும் நவீன், சாணிப்பவுடரை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். நவீன் ஆக்டிங் டிரைவராக பணியாற்றி வருவதாகவும், இந்து முன்னணி அமைப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக புகார் எதுவும் பதியப்படாத நிலையில், இதுகுறித்து விளக்கம் கேட்க எஸ்.ஐ சையது அலியை தொடர்பு கொண்டோம். அவர் நமது அழைப்பை எடுக்கவில்லை. குறுஞ்செய்தியும் அனுப்பியுள்ளோம். இந்த விவகாரத்தில் அவர் விளக்கம் தரும் பட்சத்தில் அதனை உரிய பரிசீலனைக்குப்பினர் பதிய தயாராக இருக்கிறோம். Source link

'தடுப்பூசியை கட்டாயமாக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது' – தமிழக அரசு வாதம்

தடுப்பூசி போடாதவர்களே வைரஸ்கள் உருமாறுவதற்கு காரணம் என நிபுணர்கள் ஆய்வுகள் செய்து கூறியிருக்கின்றனர் என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது. மேலும் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தடுப்பூசியை கட்டாயமாக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது எனவும்  தமிழக அரசு வாதம்  முன்வைத்துள்ளது. 2021 ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு, பின்னர் படிப்படியாக அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தக்கூடிய பணி தொடங்கிய நிலையில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வதை கட்டாயமாக்கி உள்ளன. தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயம் என பல மாநில அரசுகளின்

1 2 3 31
Live Updates COVID-19