“அன்று அப்படி சொன்னதை இப்ப வாபஸ் வாங்கிக் கொள்கிறேன்..!” – கோவையில் உதயநிதி | udhayanidhi spoke about kovai people after local body election

சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ-வும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கோவை வந்தார். மாணவிகள், பெண்களுக்கு நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உதயநிதி பேசியதாவது, “உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு, கோவையில் நடந்த முகவர்கள் கூட்டத்தில், உதயநிதி ஸ்டாலின் ‘கோவை மக்கள் குசும்பு பிடித்தவர்கள். சொன்ன சொல்லை காப்பாற்ற மாட்டாங்க. நான் நம்பவே மாட்டேன்.’ என சொன்னேன். அப்படி சொன்னதை இப்ப வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். மிகப்பெரிய வெற்றியை கிடைத்துள்ளது. கோவை மக்களுக்கும், தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நன்றி. Source link

“எங்களைவிட்டுப் போகாதீங்க சார்..!” – ஆசிரியரைக் கண்ணீருடன் சுற்றிவளைத்த மாணவர்கள் | govt school students in kallakuruchi urges cancellation of the transfer of their teacher

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தை அடுத்த வடதொரசலூர் கிராமத்தில் இயங்கிவருகிறது அரசு உயர்நிலைப்பள்ளி. அங்கு ஆங்கிலப் பாட ஆசிரியராக பணிபுரிந்துவந்தவர் ஆனந்த கண்ணன். அந்தப் பள்ளியில் படித்த மாணவ, மாணவியர்களின் குடும்பச் சூழலையும், கிராமத்துப் பின்னணியையும் உணர்ந்துகொண்ட ஆசிரியர் ஆனந்த கண்ணன், அவர்களுடன் அன்பாகப் பழகியிருக்கிறார். மேலும், தனியார் பள்ளிகளில் படித்தால் மட்டுமே ஆங்கிலத்தில் பேச முடியும், எழுத முடியும் என்ற நிலையை மாற்றி நவீன தொழில்நுட்பத்துடன்கூடிய கல்வி முறையில் ஆங்கிலத்தை எளிமையாகக் கற்றுக்கொடுத்திருக்கிறார். மாணவ, மாணவியருடன் ஆசிரியர் ஆனந்த கண்னன் ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் பேசுவதற்குத் தயக்கம் காட்டிய மாணவர்கள் ஆசிரியர் ஆனந்த மோகன் கொடுத்த தன்னம்பிக்கையில், ஆங்கிலத்தில் சரளமாகப் பேசத் தொடங்கினர். இந்நிலையில் ஆனந்த கண்ணனுக்கு

உர மானியம் நிறுத்தம்; கொள்ளையடிக்கும் தனியார் உரக்கடைகள்; நடவடிக்கை எடுக்குமா அரசு? | private fertiliser shops increases price as govt stops subsidy

இதுகுறித்து நம்மிடம் பேசிய திருவாரூர் மாவட்டம் அரித்துவாரமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி சசிகுமார், “ரசாயன உர நிறுவனங்களுக்கு கொடுத்துக்கிட்டு இருக்குற மானியத்தை மத்திய அரசு நிறுத்தப்போறதா, கடந்த வருஷம் பேச்சு கிளம்பினுச்சி. அதோட தொடர்ச்சியாகதான் கடந்த அக்டோபர் மாசம் பொட்டாஷ் உரத்தோட விலை, 1,000 ரூபாயில இருந்து 1,700 ரூபாயும், காம்ப்ளக்ஸ் உரத்தோட விலை, 1,000 ரூபாயில இருந்து 1,400 ரூபாயும் விலை உயர்ந்துச்சு. இந்த நிலையிலதான் இப்ப கோடை சாகுபடிக்காக, அடிவுரம் போட, யூரியா, டிஏபி தேவைப்படும்போது, இதோட விலையை உரக்கடைக்காரங்க, ஒரு மூட்டைக்கு 200-500 ரூபாய் வரைக்கும் விலையை உயர்த்தி விக்கிறாங்க. சசிகுமார் மத்திய அரசு, ரசாயனம் உரம் தயாரிக்கும் நிறுவனங்களுக்குக் கொடுத்துக்கிட்டு இருக்குற

'தம்பி இளநீர் சொல்லியிருக்கேன்'-ரெய்டிலும் கைநிறைய மோதிரங்களுடன் கவனம் ஈர்த்த வேலுமணி குடும்ப நண்பர்

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி சம்பந்தப்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் ரெய்டு நடத்திவரும் நிலையில், கோவைப்புதூர் பகுதியிலுள்ள பிரபல தொழிலதிபர் ஜே.ஆர்.டி.ராஜேந்திரன் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். வேலுமணி சகோதரர் அன்பரசனும், ராஜேந்திரனும் மிகவும் நெருக்கமானவர்கள் என்று சொல்லப்படுகிறது. கோவைப்புதூர் பகுதியிலுள்ள ராஜேந்திரன் வீட்டுக்குச் சென்றோம். வீட்டுக்கு நேர் எதிரில்தான் அவர்களின் அலுவலகமும் உள்ளது. எஸ்.பி.வேலுமணி நாம் அங்கே சென்றபோது கறுப்புச் சட்டையுடன், கைகளில் ஒரு டஜன் மோதிரங்கள், பிரமாண்ட பிரேஸ்லெட், செயின், காதில் கம்மல் என ஒருவர் கேட் முன்பு நின்று ஊடகங்களுக்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார். ‘சார் யாரு..?’ என நாம் விசாரித்தபோது, ‘இவர்தான் ராஜேந்திரன்’

உக்ரைன் போரை நிறுத்த மலை உச்சியில் அமர்ந்து பூஜை செய்த மடாதிபதி! என்ன நடந்தது?

உக்ரைன்மீது ரஷ்யா நடத்தும் போரை நிறுத்தி அங்கு அமைதி நிலவ வேண்டி புவனேஸ்வரி மடாதிபதி பரத்வாஜ் சுவாமிகள் மதுரை திருப்பரங்குன்றம் மலைமீது அமர்ந்து மந்திர பூஜை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. பரத்வாஜ் சுவாமிகள் சென்னையிலுள்ள யோகமாயா ஸ்ரீ புவனேஸ்வரி பரமஹம்ச ஸ்ரீ பரத்வாஜ் சுவாமிகள் என்று அழைக்கப்படும் மடாதிபதி பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மதுரை வந்திருந்தார். இந்த நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு காலையில் சென்றவர், உக்கிரமான வெயிலைப் பொருட்படுத்தாது சுடும் பாறையில் அமர்ந்து மந்திரங்களை உச்சரிக்கத் தொடங்கினார். பரத்வாஜ் சுவாமிகள் உக்ரைன் நாட்டில் நடைபெறும் யுத்தம் நிறுத்தப்படவும் சமாதானம் உண்டாகவும் உயிர்சேதம் ஏற்படாமல் இருக்கவும், உலக மக்களின் அமைதிக்காகவும் மந்திரங்களைச் சொல்ல ஆரம்பித்தார்.

1250 சதுர அடியில் பிரமாண்ட மாடித்தோட்டம்; அசத்தும் சென்னை பெண்! | Pasumai Vikatan

1250 சதுர அடியில் பிரமாண்ட மாடித்தோட்டம்; அசத்தும் சென்னை பெண்! | Pasumai Vikatan தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism Source link

கொட்டிக்கிடக்கும் நெல் மூட்டைகள்; நேரடி கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டதால் விவசாயிகள் சாலை மறியல்! | tiruvarur farmers staged protest to open paddy DPC

இதுகுறித்து நம்மிடம் பேசிய இப்பகுதியைச் சேர்ந்த விவசாயி திருமாவளவன், “இந்த கொள்முதல் நிலையத்துல மட்டுமே 10,000 நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்குது. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை சேமிப்புக் கிடங்குகளுக்கு உடனடியாக கொண்டு போயிருந்தால், இந்த இக்கட்டான நிலை ஏற்பட்டிருக்காது. சேமிப்பு கிடங்குல, சாரம் கட்டி, நெல் மூட்டைகளை அடக்கி வைக்க, சவுக்கு கழி இல்லை. மூடி வைக்க படுதா இல்லைனு காரணம் சொல்றாங்க. இதெல்லாம் ஒரு காரணமா? இதையெல்லாம் முன் கூட்டியே தயார் செஞ்சி வைக்க வேண்டியது அதிகாரிகளோட கடமை. சேமிப்புக் கிடங்குகளுக்கு உரிய நேரத்துல, நெல் மூட்டைகளை கொண்டு போகாததுனால கொள்முதல் நிலையங்கள்ல ஏற்கெனவே விவசாயிகள்கிட்ட கொள்முதல் செஞ்ச நெல் மூட்டைகள் தேங்கிக்

“உள்ளாட்சி முதல் அமைச்சர்கள் வரை, சிறு தவறு நடந்தாலும்…" – திமுக-வினரை எச்சரித்த மு.க.ஸ்டாலின்

தூத்துக்குடியிலுள்ள வடக்கு மாவட்ட தி.மு.க அலுவலகமான கலைஞர் அரங்கத்தின் வாசலில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வெண்கல உருவச் சிலையை தி.மு.க தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் திறந்துவைத்தார். அதைத் தொடர்ந்து கட்சியின் முன்னோடிகள், 300 பேருக்கு பொற்கிழி வழங்கினார். தொடர்ந்து பேசிய அவர், “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்த பிறகு முதன்முறையாக இங்கு வந்திருக்கிறேன். நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க பெற்றுள்ள வெற்றி சாதாரணமானது அல்ல. இதுவரை இந்தக் கட்சி கண்டிராத ஒரு மாபெரும் வெற்றி. இந்த வெற்றியைக் காண கலைஞர் இல்லையே என்ற வருத்தம் என எனக்குள் இருந்தது. கலைஞரின் வெண்கலச்சிலை ஆனால், அவரின் உருவச்சிலையை இந்த வெற்றி

கோவை: `வெளியூர் ஆள்களை இறக்கி அதிமுக கவுன்சிலர்களை தாக்குகின்றனர்!’ – எஸ்.பி. வேலுமணி காட்டம் | ADMK Ex minister S.P. Velumani complaint against DMK in Coimbatore

கோவை வெள்ளலூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் அ.தி.மு.க 8 இடங்களிலும், தி.மு.க 7 இடங்களிலும் வெற்றி பெற்றது. பெரும்பான்மை இருப்பதால் அ.தி.மு.க பேரூராட்சியைக் கைப்பற்றியது. இதனிடையே, மறைமுக தேர்தலான இன்று அ.தி.மு.க, தி.மு.க இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து சட்டம் ஒழுங்கு பிரச்னை காரணமாக மறைமுக தேர்தலை ஒத்திவைத்தனர். தேர்தல் தள்ளி வைத்ததற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தேர்தலை நியாயமாக நடத்தக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். எஸ்.பி வேலுமணிகே.அருண் அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.பி வேலுமணி , “கோவையில் மிகப்பெரிய வன்முறையை திமுக நடத்தியுள்ளது. திட்டம்போட்டு முறைகேடு செய்து அதிமுகவின் வெற்றியைப்

`சட்டசபை தேர்தல் நேர்காணலை மறக்காத ஸ்டாலின்!’ – நாகர்கோவில் மேயர் வேட்பாளர் மகேஷ் தேர்வானதன் பின்னணி

நாகர்கோவில் மாநகராட்சி ஆக்கப்பட்ட பிறகு நடந்த முதல் தேர்தலில் தி.மு.க 24 வார்டுகளையும், காங்கிரஸ் 7, ம.தி.மு.க ஒரு வார்டையும் கைப்பற்றின. 52 வார்டுகளில் ஆட்சியமைக்க 27 கவுன்சிலர்களின் ஆதரவு தேவை. தி.மு.க கூட்டணியில் 32 கவுன்சிலர்கள் உள்ளனர். இந்த நிலையில் தி.மு.க சார்பில் மேயர் வேட்பாளராக மகேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். நாகர்கோவில் மாநகர திமுக செயலாளராக இருக்கும் மகேஷுக்கு இப்போது 57 வயது ஆகிறது. மகேஷ் நாகர்கோவிலை அடுத்த புத்தளம் கல்லடிவிளையைச் சேர்ந்தவர். தந்தை ரெங்கசுவாமி, தாய் காசித்தங்கம். மனைவி மேகலை, ஒரே மகள் சவிதாவுக்குத் திருமணம் ஆகிவிட்டது. நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகம் மணவாளபுரம் அரசு தொடக்கப்பள்ளியில் தொடக்கப்பள்ளி பயின்றவர், புத்தளம் எல்.எம்.பி.சி பள்ளியில் 10-ம்

1 2 3 6
Live Updates COVID-19