“முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சென்றால் வாழ்த்துபவர்கள், பிரதமர் மோடியை விமர்சிக்கிறார்கள்!" – வானதி

பா.ஜ.கவின் தேசிய மகளிரணி கூட்டம் நேற்று புதுச்சேரியில் நடைப்பெற்றது. அனைத்து மாநில மற்றும் தேசிய மகளிரணி நிர்வாகிகள் கலந்துகொண்ட அந்த கூட்டத்தை துவக்கி வைத்த தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், “நான்கு மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் மூலம் பா.ஜ.க-வின் செல்வாக்கு நாடு முழுவதும் அதிகரித்திருப்பதும், நம் வேட்பாளர்களுக்கு பெண்களின் ஆதரவு இருப்பதும் தெளிவாகியிருக்கிறது. குறிப்பாக உத்தப்ரபிரதேச தேர்தல் முடிவுகள் பா.ஜ.க மீது பெண்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது. உத்தரப்பிரதேச தேர்தல் பிரசாரத்தை மாதிரியாகக் கொண்டு அனைத்து மாநிலங்களிலும் பின்பற்ற வேண்டும். வானதி சீனிவாசன் பெண்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக அதிகாரத்தை பா.ஜ.க உறுதி செய்திருக்கிறது. சாதாரண நிலையில் இருக்கும் ஒரு பெண்ணும்

“சுய விளம்பர காரியங்களுக்கு பதில் இல்லை!” – அண்ணாமலை புகாருக்கு செந்தில் பாலாஜி பதில்

கோவை மக்களின் அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்ய அறிமுகப்படுத்தியுள்ள, 24*7 சேவை மையத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கோவை மக்களின் அடிப்படை பிரச்னைகளை நிவர்த்தி செய்ய, 24 மணி நேர உதவி மைய எண் கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. செந்தில் பாலாஜி ஆய்வு ”அமைச்சர் செந்தில் பாலாஜி, ஏன் என்மீது வழக்கு தொடுக்கவில்லை?” – அண்ணாமலை கேள்வி தற்போதுவரை 1,749 அழைப்புகள் வந்துள்ளன. சாலை வசதி, குடிநீர், சாக்கடை, முதியோர், மாற்றுத்திறனாளி உதவித் தொகை என்று பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளன. அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து, அந்த கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும். கோவையில் 2 நாளுக்கு ஒருமுறை சீரான

`டாஸ்மாக் மாதிரி ஜூஸ்மாக்ன்னு ஏன் பேர் வச்சேன்னா..?!' – லாஜிக் சொல்லும் கும்பகோணம் இளைஞர்

எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் வியாபாரம் பெருகுவதற்கு விளம்பரம் என்பது அவசியமான ஒன்றாக இருந்து வருகிறது. மக்கள் மனதில் பதிந்த ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு விளம்பரம் செய்தால் சீக்கிரமே ரீச் ஆகும். அந்த வகையில், கும்பகோணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், டாஸ்மாக் கடை செட்டப்பில் `ஜூஸ்மாக்’ எனப் பெயரிட்டு பழரச பானக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். நெகட்டிவ் கமென்ட்கள், காமெடி கலாய்கள், பாராட்டுகள் எனப் பல விதமான கருத்துகளை எதிர்கொண்டாலும், `டாஸ்மாக் போனா உயிருக்கு, குடும்பத்துக்குக் கேடு. ஜுஸ்மாக் வந்தா நீங்களும் நல்லா இருப்பீங்க, குடும்பமும் நல்லா இருக்கும்’ என வித்தியாசமான முறையில் வியாபாரம் செய்து வருகிறார். கும்பகோணம் மகாமகம் குளக்கரையில் உள்ள ஜூஸ் கடை

கடலூர்: “அமைச்சர்தான் இனி அந்த தொகுதிக்கு பொறுப்பு எம்.எல்.ஏ” -சர்ச்சையை ஏற்படுத்திய மேயரின் பேச்சு | In cuddalore a controversial speech by the mayor of the municipality over MLA

அப்போது வேட்பாளர் பட்டியலை கட்சித் தலைமை அறிவிப்பதற்கு முன்பே தனது மனைவி சுந்தரியை வேட்புமனு தாக்கல் செய்ய வைத்தார் நகரச் செயலாளர் கே.எஸ்.ராஜா. கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய நகரச் செயலாளர் மீது நடவடிக்கை இல்லையா என்று பொங்கித் தீர்த்தனர் நிர்வாகிகள். ஆனால் கணவன், மனைவி இருவருக்கும் சீட் வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். இந்த விவகாரத்தில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்தின் தலையீடு இருப்பதாக கூறப்பட்டது. எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் இதுகுறித்து நம்மிடம் பேசிய கடலூரைச் சேர்ந்த தி.மு.க நிர்வாகிகள் சிலர், “எம்.எல்.ஏ அய்யப்பன் கட்சிப் பொறுப்புகளில் இருந்து மட்டும்தான் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறாரே தவிர, இப்போதும் அவர் எம்.எல்.ஏதான். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ ஒருவர் இருக்கும்போது, அமைச்சர் எம்.ஆர்.கே

வேலூர்: கத்தி முனையில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை – இரண்டு சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது | girl sexual abuse case, 4 people including 2 boys were arrested in vellore

வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் இளம்பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் கடந்த 16-ம் தேதி இரவு காட்பாடியில் இருக்கும் ஒரு திரையரங்கில் படம் பார்க்கச் சென்றார். நள்ளிரவு 1 மணிக்கு படம் முடிந்ததும் தான் பணிபுரியும் மருத்துவமனைப் பகுதிக்குச் செல்வதற்காக திரையரங்கம் முன்பு ஆட்டோவுக்காகக் காத்து நின்றனர். அப்போது வந்த ஒரு ஆட்டோவில் ஓட்டுநருடன் சேர்த்து 5 பேர் இருந்தனர். ‘ஷேர் ஆட்டோ’ என்பதால், அந்தப் பெண்ணுக்கும் அவரின் ஆண் நண்பருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. வேலூர் புதிய பேருந்து நிலையத்தைக் கடந்ததும், ஆட்டோவில் இருந்த நபர்கள் திடீரென கத்தி முனையில் இருவரையும் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள பாலாற்றுப் பகுதிக்குக் கடத்திச்

`என் கிராமத்துக்கு ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும்!’ – 10 சென்ட் நிலத்தை தானமாக கொடுத்த விவசாயி | thirupattur farmer donates his 10 cent land to build primary health centre

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள்ள அம்பலூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாததால், அங்கு வசிக்கும் மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகிறார்கள். உடல்நிலைப் பாதிப்பு, பிரசவம் என்றால் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்குத்தான் செல்ல வேண்டும். பிரசவ வலி ஏற்பட்டுவிட்டால், மருத்துவமனைக்குச் செல்வதற்குள் சிலசமயம் பனிகுடம் உடைந்துவிடுகிறது. ஆபத்தான கட்டத்தில், கர்ப்பிணி பெண்களை மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்ல நேரிடுவதால், தங்களது பகுதியில் அரசு சுகாதார மையம் அமைக்க வேண்டும் என ஆட்சியாளர்களிடம் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்துவந்தார்கள் அம்பலூர் கிராம மக்கள். விவசாயி தினகரமோகன் இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 74 வயதாகும் விவசாயி தினகரமோகன் ஆரம்ப சுகாதார மையம் அமைப்பதற்காக தனக்குச் சொந்தமான

1,000 பேர் அமரும் இடத்தில் 7,000 பேர்?! – கேரள கால்பந்து மைதான கேலரி விபத்து விசாரணையில் அதிர்ச்சி | Football ground stand accident, what police says?

கேரள மாநிலத்தில் கால்பந்து ரசிகர்கள் அதிகம். அதிலும் கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்கள் கால்பந்து விளையாட்டின் தீவிர ரசிகர்கள் நிறைந்துள்ள பகுதிகளில் முக்கியமானவை. கிரிக்கெட் ரசிகர்களைவிட ஃபுட்பால் ரசிகர்களே அதிகம் எனச் சொல்லலாம். கோழிக்கோடு, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அடிக்கடி ஃபுட்பால் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் மலப்புரம் மாவட்டம், வண்டூர் பூங்கோடு பகுதியிலுள்ள மைதானத்தில் ஃபுட்பால் போட்டி கடந்த சில நாள்களாக நடைபெற்றுவந்துள்ளது. தற்காலிக கேலரி பூங்கோடு ஃப்ரெண்ட்ஸ் கிளப் சார்பில் நடத்தப்பட்ட இந்தப் போட்டி, ஒரு அணியில் ஏழு வீரர்கள் கலந்துகொள்ளும் ‘செவன்ஸ் ஃபுட்பால்’ என்ற பெயரில் நடத்தப்பட்டது. கோழிக்கோடு, மலப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கால்பந்து அணியினர் இந்தப் போட்டியில்

தலைமறைவாக இருந்து ஆட்டம் காட்டிய ரௌடி; சேவல் சண்டையைக் காண சென்னை வந்தபோது கைது செய்த தஞ்சை போலீஸ்! | Tanjore special team police arrested absconded rowdy raja in Chennai

தஞ்சாவூர் அருகே உள்ள சூரக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாராமன் என்கிற சூரக்கோட்டை ராஜா (52). முன்னாள் பி.ஜே.பி பிரமுகரான இவர் மீது தஞ்சாவூரில் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, கட்டப் பஞ்சாயத்து, ஆள்கடத்தல், சட்ட விரோதமாக ஆயுதங்களை வைத்திருத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. தலைமறைவாக இருந்த சூரக்கோட்டை ராஜாவை போலீஸார் தேடி வந்தனர். தனிப்படை போலீஸ் டீம் கைது செய்த சூரக்கோட்டை ராஜா ஆனால் அவர் மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கான என ஒவ்வொரு மாநிலமாக மாறி மாறி இருந்து வந்தார். மேலும், தான் இருக்கும் இடத்தை அடிக்கடி மாற்றிக்கொண்டு தலைமறவாக இருந்து வந்துள்ளார். அதனால், ராஜாவைக் கைது செய்வதற்காக தஞ்சாவூர்

“நீதிமன்றமும் அம்மா, அப்பா போலதான்!” – அரசுப் பள்ளி மாணவர்களிடம் விளக்கிய நீதிபதி | sivagangai subordinate court judge murugan talks about law to govt school students

குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்க அதிகமான சட்டங்கள் உள்ளன. வீட்டில் எப்படி அண்ணன், தங்கைக்குள் சண்டை வரும்போது அம்மாவிடம் சென்று நியாயம் கேட்போமோ, அதுபோல் குடும்பங்களுக்கு, இரு ஊர்களுக்கு, மனிதர்களுக்கு இடையில் சண்டை வரும்போது நீதிமன்றத்தைத் தேடி வருகின்றனர். நீதிமன்றமும் அம்மா, அப்பா போலதான்” என்று பேசியவர், பாலியல் கொடுமைகளுக்கு எதிரான சட்டம், குற்றம் மற்றும் சிவில் வழக்கு தொடர்பான தகவல்கள், குழந்தைகள் நலன் சார்ந்த சட்டங்களின் அடிப்படைக் கூறுகளை விரிவாக விளக்கினார். மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதில் அளித்தார். மாணவர்களுக்கு பரிசளித்த நீதிபதி தொடர்ந்து, 2020-ம் ஆண்டு இணைய வழியில் நடைபெற்ற சட்டப் பணிகள் குழு கூட்டத்தில் பங்கேற்று சிறப்பு பரிசுக்குத் தேர்வாகிய இப்பள்ளி மாணவர்கள்

“டி.கே.எம்-9 நெல் கொள்முதலை நிறுத்தாதீங்க; மாறாக இப்படி செய்யுங்க!” – அரசுக்கு விவசாயி அறிவுரை | farmer requests tn govt to arrange alternative ways to sell tkm 9 paddy variety

தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் டி.கே.எம்-9 ரக நெல்லை, விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்வதை கைவிடுவதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த ரக நெல்லை விரும்பாததாலும், பொது விநியோக திட்டத்தில் இதனை விநியோகிக்க முடியாததாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தமிழக அரசின் செய்திக் குறிப்பில், “தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல மாவட்டங்களில், ஒரு சில இடங்களில், டி.கே.எம். 9 ரக நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த வகை நெல்லை அரவை செய்து பெறப்படும் அரிசி, சிவப்பு நிறத்தில் சற்று பருமனாக இருக்கும். இந்த வகை அரிசியை, பொது

1 2 3 16
Live Updates COVID-19