Twisted device investigates fusion alternatives

German stellarator revamped to run longer, hotter, compete with tokamaks Tokamaks have dominated the seek for fusion power for many years. Simply as ITER, the world’s largest and most costly tokamak, nears completion in southern France, a smaller, twistier testbed will begin up in Germany. If the 16-meter-wide stellarator can match or outperform similar-size tokamaks, fusion specialists might rethink their future. Stellarators can hold their superhot gases steady sufficient to fuse nuclei and produce power.

“என் வாழ்நாள் வரை காட்பாடிக்கு நான்தான் எம்எல்ஏ-வாக இருப்பேன்!’’ – துரைமுருகன்

வேலூர், காட்பாடி அருகேயுள்ள பிரம்மபுரத்தில் கூட்டுறவுத்துறையின் மூலம் பொது நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தி.மு.க பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாட்டில் ஏழைக் குடும்பங்கள்தான் அதிகம். அந்த குடும்பங்களின் மேம்பாட்டுக்காகத்தான் திட்டங்களைக் கொண்டுவருகிறோம். சான்றிதழ் வழங்கிய துரைமுருகன் நான்கைந்து முறை அமைச்சராக என்னைப் பார்த்திருக்கிறீர்கள். இப்போதும் அமைச்சராகப் பார்க்கிறீர்கள். ஸ்டாலினுக்கு அடுத்து நான்தான். இவ்வளவு பவர்ஃபுல் அமைச்சராக இருந்தும், எதையும் செய்யாவிட்டால் தொகுதி பின்னோக்கிப் போய்விடும். என் தொகுதியை என் வாழ்நாள் முழுவதும் கட்டிக் காப்பேன். நான் இருக்கிற வரை காட்பாடிக்கு நான்தான் எம்.எல்.ஏ-வாக இருப்பேன். தமிழ்நாடு சட்டசபையில் 234

வேலூர்: 2 மாதங்களில் சாராயம் விற்ற 691 பேர், மணல் கடத்திய 28 பேர் கைது! – எச்சரிக்கும் போலீஸ்

வேலூர் மாவட்டத்தில், மதுபானங்களைப் பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது, கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது, கள்ளத்தனமாக மணல் கடத்துவது போன்ற சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுவோர்மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்துவருகிறார்கள். அதன்படி, கள்ளச் சாராயம் மற்றும் மதுவிற்பனை தொடர்பாக மட்டும் கடந்த 2 மாதங்களில் 765 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அந்த வழக்குகளில் 691 குற்றவாளிகளைப் போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். அவர்களில், 6 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 6,594 லிட்டர் கள்ளச்சாராயமும், அதனை காய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்பட்ட 45 கிலோ கிராம் வெல்லம் மற்றும் 36,500 லிட்டர் சாராய ஊறல்களையும் போலீஸார் அழித்துள்ளனர். அதோடு

ஒரு ஒன்றியம்; இரண்டு மாவட்டம்; 50 வருடப் போராட்டத்துக்கு தீர்வே கிடையாதா? -தவிக்கும் 12 ஊராட்சிகள் | One panchayat union .. two districts; Is there no solution to our 50 year struggle?

ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டம் (தற்போது தென்காசி மாவட்டம்) சங்கரன்கோவில் தாலுகாவில் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள முக்கூட்டுமலை, நக்கலமுத்தன்பட்டி, வடக்குப்பட்டி, பிச்சைத்தலைவன்பட்டி, புளியங்குளம், அப்பனேரி, அய்யனேரி, சித்திரம்பட்டி, பிள்ளையார்நத்தம், இளையரசனேந்தல், வெங்கடாசலபுரம், கழுகுமலை குறுவட்டத்திற்கு உட்பட்ட ஜமீன்தேவர்குளம் ஆகிய 12 ஊராட்சிகளையும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைத்திட வேண்டும் என, 12 ஊராட்சிகளிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. `இந்த 12 ஊராட்சிகளும் தூத்துக்குடி மாவட்டத்திற்குள் அடங்கும்’ என நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்களின் ஒருமித்த கருத்துருவின் அடிப்படையில் முடிவெடுக்கப்பட்டு, கடந்த 20.03.2008-ல் சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. இளையரசனேந்தல் பின்னர், 15.04.2008-ல் இளையரசனேந்தலை தலைமையாகக் கொண்டு 12 ஊராட்சிகளை உள்ளடக்கி குறுவட்டமாக அறிவித்து கோவில்பட்டி தாலுகாவுடன் இணைக்கப்பட்டு

IIT-Madras: மனித மூளை குறித்தான அதிதொழில்நுட்ப ஆராய்ச்சி மையம், சென்னை ஐஐடி-யில் திறப்பு! | IIT-M opens new research center to study brain cells

இங்கு நடத்தப்படக்கூடிய ஆராய்ச்சிகள் இந்தியாவில் மட்டுமல்லாது உலக அளவில் செயல்படக்கூடிய சிறந்த ஆய்வகங்களால் கண்காணிக்கப்பட இருக்கிறது. இதன் மூலம் இன்று தொடங்கப்பட்டுள்ள ஆய்வகம் உலகின் முக்கிய ‘Neuroanatomy analysis’ சென்டர்களில் ஒன்றாக உயரக்கூடும். Sudha Gopalakrishnan Mind Centre இதுகுறித்து இம்மையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஐஐடி மெட்ராஸின் மின்னணு பொறியியல் துறை தலைவரான பேராசிரியர். மோகனசங்கர் சிவப்பிரகாசம், “இந்தத் தொழில்நுட்பம் அறிவியல் உடனான மருத்துவத் துறையின் பிடிப்பை அதிக அளவில் ஏற்படுத்தும்” என்று நம்பிக்கை தெரிவித்தார். நியூயார்க்கில் அமைந்துள்ள ‘கோல்ட் ஸ்ப்ரிங் ஹார்பர் ஆராய்ச்சி நிலையத்தின்’ விஞ்ஞானியான பார்தா மித்ரா, ஐஐடி மெட்ராஸின் இயக்குனரான பேராசிரியர் காமகோடி மற்றும் வேலூர் சி.எம்.ஸி கல்லூரியின் பேராசிரியர் மருத்துவர்

சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம்! – புதுச்சேரி நகராட்சி குறிப்பிடும் இடங்கள் எவை? | Puducherry municipality levy tolls on the vehicles parked on the road

1. புராவிடன்ஸ் மால் எதிரில் உள்ள சிங்கார வேலர் திடல். 2. புதிய பேருந்து நிலையத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள். 3. பழைய சிறை வளாகப் பகுதி. 4. நேரு வீதியில் ராஜா தியேட்டர் முதல் போக்குவரத்து காவல் நிலையம் வரை. 5. அண்ணா சிலை சதுக்கம் முதல் ராஜா தியேட்டர் சிக்னல் வரை. 6. ராஜா தியேட்டர் சிக்னல் முதல் அதிதி ஹோட்டல் சிக்னல் வரை. 7. அரவிந்தர் ஆசிரமத்தை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் மணக்குள விநாயகர் கோயில் சுற்றியுள்ள பகுதிகள். 8. பாரதி பூங்கா மற்றும் அரசு பொது மருத்துவமனை சுற்றியுள்ள பகுதிகள். 9. துய்மா வீதி மற்றும் ரோமன் ரோலண்ட்

"என்னுடன் வாக்கிங் வந்தவர்கள் வீட்டில்கூட ரெய்டு நடத்துகின்றனர்" – எஸ்.பி.வேலுமணி

முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி சம்பந்தப்பட்ட இடங்களில் இரண்டாவது முறையாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் ரெய்டு நடத்தினர். ஏற்கெனவே கடந்த ஆண்டு வழக்கு பதிவு செய்து ரெய்டு நடத்திய நிலையில், நேற்று புதிததாக வழக்கு பதிவு செய்து அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். வேலுமணி ரெய்டு ‘தம்பி இளநீர் சொல்லியிருக்கேன்’-ரெய்டிலும் கைநிறைய மோதிரங்களுடன் கவனம் ஈர்த்த வேலுமணி குடும்ப நண்பர் கோவை சுகுணாபுரம் பகுதியிலுள்ள வேலுமணி வீட்டில் சுமார் 13 மணி நேரத்துக்கும் மேல் ரெய்டு நடத்தப்பட்டது. முன்னாள் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் வேலுமணி வீட்டின் முன்பு திரண்டு ஆதரவு தெரிவித்தனர். ரெய்டு முடிந்த பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது வேலுமணி

பெற்றோர் மரணம்; உணவுக்காக ஏங்கிய 3 குழந்தைகள்! – துயர்த் துடைத்த திருவண்ணாமலை ஆட்சியர் | Tiruvannamalai collector helped children who lost their parents

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகேயுள்ள ஆவணியாபுரத்தைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர் மனைவி வேண்டா. கூலி வேலை செய்துவந்த இந்த தம்பதியருக்கு 15 வயது மற்றும் 10 வயதில் இரண்டு மகள்களும், 14 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள். அந்த கிராமத்திலிருக்கும் அரசுப் பள்ளியில் மூத்த மகள் பத்தாம் வகுப்பும், மகன் ஒன்பதாம் வகுப்பும், இளைய மகள் ஆறாம் வகுப்பும் படிக்கிறார்கள். இந்த நிலையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு லோகநாதன் உடல்நிலைப் பாதிப்பால் மரணமடைந்துவிட்டார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் மனைவி வேண்டா, சிரமப்பட்டு 100 நாள் வேலைக்குச் சென்றுதான் தனது மூன்று பிள்ளைகளையும் காப்பாற்றிவந்தார். குழந்தைகள் இதனிடையே, 3 மாதங்களுக்கு முன்பு வேண்டாவும் இறந்துவிட்டார். பெற்றோரை

“சந்தோஷத்துல என்னையே கிள்ளிப் பார்த்தேன்!” – ஒருநாள் போலீஸ் அதிகாரியாகப் பதவியேற்ற கல்லூரி மாணவி | puducherry college student nivetha shares her experience of becoming one day police

மாணவி நிவேதாவுக்கு பூங்கொத்துக் கொடுத்து வாழ்த்து தெரிவித்த ஏ.டி.ஜி.பி ஆனந்தமோகன், “படிப்பு, விளையாட்டு போன்றவற்றில் சிறந்து விளங்கும் மாணவி நிவேதா, என்.சி.சி-யில் கேடட் சார்ஜென்ட்டாக இருக்கிறார். இவருக்கு இந்த கௌரவ நிலைய அதிகாரி பதவியை அளித்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்தப் புதிய முயற்சியானது நாளைய இந்தியாவின் தலைமைப் பொறுப்பை ஏற்க இருக்கும் பெண்களை ஊக்குவிப்பதுடன் பெண்களுக்கான அதிகாரத்தையும் வழங்கும். பெண்கள் காவல் அதிகாரியாகப் பொறுப்பெடுக்கும்போது, பெண்களின் பாதுகாப்பு, அதற்கு உண்டான நடவடிக்கைகள், மாற்றங்கள் ஆகியவற்றை அதிகமாகக் கொண்டுவரலாம். அதற்கு, நிவேதாவுக்கும், மற்ற இளம் பெண்களுக்கும் இந்த ஒரு நாள் முயற்சி ஊக்குவிப்பாக அமையும். வரும் காலங்களில் பெண்கள் அதிகாரத்துக்கு வந்து மேலும் முன்னேற, இது

100 ஏக்கரில் தனி மனிதன் உருவாக்கிய காடு – Part-2 | Aranya forest | Pasumai Vikatan | villupuram man shares his experience of creating aranya forest – part -2

விழுப்புரம் மாவட்டம் பூத்துறை கிராமத்தில் சரவணன் என்ற தனி ஒரு மனிதர் உலர் வெப்பமண்டல காட்டினை உருவாக்கி அங்கேயே வசிக்கிறார். தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism Source link

1 2 3 15
Live Updates COVID-19