“புதுச்சேரி சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்!” – எச்சரிக்கும் திமுக | DMK Warned puducherry speaker over his non confidence decision

பா.ஜக.வின் பினாமி ஆட்சிதான் நடைபெறுகிறது. தினம்தோறும் வட மாநிலங்களில் இருந்து மத்திய அமைச்சரோ, கட்சி நிர்வாகியோ புதுச்சேரி வந்து தனிப்பட்ட குழுக்களை மட்டும் சந்தித்து செல்கின்றனர். அவர்கள் புதுச்சேரி வளர்ச்சிக்கான பணிகள் குறித்து ஏதேனும் விவாதிக்கின்றார்களா என்றால் அப்படி எதுவும் இல்லை. எப்படி பொய்யான வாக்குறுதிகளை அளித்து தேர்தல்களில் வெற்றி பெற்றார்களோ அதுபோல் குறுக்கு வழியில் வெற்றி பெறவே முயற்சிக்கின்றனர். மேலும் எப்படியாவது புதுச்சேரி வழியாக தமிழகம் செல்ல வேண்டும் என்றும் பா.ஜ.க நினைக்கிறது. அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது. நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க அதிக இடங்களில் வெற்றி பெற்று அவர்களின் எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சபாநாயகர் என்பவர் பொதுவானவராக இருக்க

15 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை – இளைஞருக்கு 21 ஆண்டுகள் சிறை!

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியைச் சேர்ந்தவர் தாமரைச் செல்வன் (31). இவர் புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே வார்ப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை, திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தைகள் கூறி, ஆம்னி வேனில் கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் பொன்னமராவதி போலீஸார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்தனர். கடந்த 2019 ஏப்ரல் மாதம் நடைபெற்ற இந்தச் சம்பவம் குறித்த வழக்கு, கடந்த மூன்று ஆண்டுகளாக புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில், தற்போது அதில் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. மகிளா நீதிமன்றம் வழக்கை விசாரித்த நீதிபதி முனைவர் சத்யா, 363 சட்டப்பிரிவின்படி, தாமரைச் செல்வனுக்கு

வீங்கிய கால்கள்; குடும்பத்தைக் காக்க 26 வருட பயணம்; சிகிச்சைக்கு பணமின்றித் தவிக்கும் முத்துமாரி!

பேராவூரணியைச் சேர்ந்த குடும்பத் தலைவியான பெண் ஒருவர் கூலி வேலைக்குச் சென்று குடும்பத்தை நடத்தி வந்த நிலையில், அந்தப் பெண் இரண்டு கால்களும் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். மகள்கள் மற்றும் கணவரைக் காப்பதற்காக 26 ஆண்டுகளாக வீங்கிய காலுடன் பயணித்தவர் இருபது நாள்களாக நடக்க முடியாமல், எழுந்து நிற்க முடியாமல் தவழ்கிற நிலைக்குத் தள்ளப்பட்டு முடங்கிவிட்டார். ”நான் எழுந்தால் என் குடும்பம் நிமிரும். என் சிகிச்சைக்கு யாராவது உதவி செய்வார்களா..?” என அந்தப் பெண் கண்ணீர் சிந்துவது அந்தப் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. யானை கால் நோயால் பாதிக்கப்பட்ட முத்துமாரி குடும்பத்தினருடன் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி, சேது சாலையில்

மதுரை : 700 ஆண்டு பழைமையான ஐயனார் சிற்பம், நடுகல் கண்டுபிடிப்பு!

தொல்லியல் அடையாளங்களின் சுரங்கமான மதுரை மாவட்டத்தில் பல தொல்லியல் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டும், அறியப்பட்டும் வரும் சூழலில், சமீபத்தில் பழைமையான ஐயனார் சிற்பமும் நடுகல்லும் கண்டறியப்பட்டுள்ளது, வில்லூர் பகுதி மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. து.முனீஸ்வரன் வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியரும், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளருமான முனைவர் து. முனீஸ்வரன் தலைமையில் அனந்தகுமரன், சிவசுப்பிரமணியன் ஆகியோர் மதுரை மாவட்டம் வில்லூர் அருகே சித்தூரில் இப்பகுதியை மேற்பரப்புக் கள ஆய்வு செய்தபோது கண்மாய்கரையில் பாதி புதைந்த நிலையில் கி.பி 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஐயனார் சிற்பத்தையும் கி.பி 16 – ம் நூற்றாண்டு கால நடுகல்லையும் கண்டறிந்தனர். இது குறித்து து.முனீஸ்வரன் கூறும்போது, “பாண்டியர்

நீராவி முருகன் என்கவுன்டர்: மாஜிஸ்திரேட் விசாரணை… உடலைப் பெற வந்த சகோதரி | judicial magistrate enquired about the encounter of Neeravi Murugan

என்கவுன்டர் சம்பவம் தொடர்பாக நாங்குநேரி காவல் நிலையத்தில் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நடந்த சம்பவம் குறித்து நாங்குநெரி ஜுடிசியல் மாஜிஸ்திரேட் ராம்கிஷோர் விசாரணை நடத்தினார். நீராவி முருகனின் உடலை மாஜிஸ்திரேட் ராம்கிஷோர் பார்வையிட்டதைத் தொடர்ந்து உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. நீராவி முருகனின் சகோதரி மாரியம்மாள் நீராவி முருகனின் உடலைப் பெற்றுக் கொள்வதற்காக அவரது சகோதரி மாரியம்மாள் தன் கணவர் ஆறுமுகத்துடன் வந்திருந்தார். உடற்கூறு ஆய்வு முடியும் வரையிலும் இருவரும் பிணவறையின் முன்பாக சோகத்துடன் அமர்ந்திருந்தனர். நீராவி முருகனின் உறவினர்களை செய்தியாளர்கள் சந்திக்க காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. அவர்களை யாரிடமும் பேச விடாமல் காவல்துறையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். Source link

ஆடு மேய்க்கச் சென்ற பெண் பாலியல் வன்கொடுமை! – 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த மகிளா நீதிமன்றம் | 45-year-old woman sexually harassed; 20-year-old jailed for 10 years

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகேயுள்ள மேலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேந்தர் (20). இவர், அதே பகுதியில், கண்மாய் அருகே ஆடு மேய்க்கச் சென்ற 45 வயது பெண்ணை வற்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இது குறித்து, அந்தப் பெண் அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து சுரேந்தரைக் கைதுசெய்தனர். கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சம்பவம் குறித்த வழக்கு, புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சத்யா, “பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக சுரேந்தருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராதத்தைக் கட்டத் தவறினால் மேலும்

சிலம்ப வீச்சில் உலக சாதனை; தமிழர் வீரக்கலையில் கலக்கும் 5 வயது சிறுவன் ஜெனோ ஃபிராங்க்ளின்! | 5 years old boy from tirupattur creates world record in silambam martial arts

திருப்பத்தூர் சகாயம் நகரைச் சேர்ந்தவர் ஆஷா. இவரின் 5 வயது மகன் ஜெனோ ஃபிராங்க்ளின், தனியார் பள்ளியில் யூ.கே.ஜி படிக்கிறார். தமிழர்களின் தற்காப்பு வீரக்கலைகளில் ஒன்றான சிலம்பக் கலையில் ஆர்வம் மிகுந்து காணப்படும் ஜெனோ ஃபிராங்க்ளின் `பாரத் குரூப் ஆஃப் இன்ஸ்டிட்யூஷன்ஸ்’ என்ற வீர விளையாட்டுக் கலைக்கூடத்தில் இரண்டரை வயதிலிருந்து பயிற்சி எடுக்கிறார். கடும் பயிற்சி, விடா முயற்சியால் ஜெனோ ஃபிராங்க்ளின் சிலம்பப் போட்டிகளில் தொடர்ந்து பல்வேறு சாதனைகளைக் குவித்து வருகிறார். சிலம்பம் சுற்றும்போது… சில மாதங்களுக்கு முன்பு 12 பானைகள் மீது நின்றபடி தொடர்ந்து 20 நிமிடங்கள் சிலம்பம் சுற்றி சாதனைப் படைத்தார். அவரது திறமையை `நோபல் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ்’ அமைப்பு, 5 வயதிற்கு

நீடாமங்கலம் மறைமுக தேர்தல் சர்ச்சை: திமுக-வினரின் நூதன குறியீடு? -வழக்கு தொடுக்கிறதா அதிமுக?! | will admk file complaint against the needamangalam election result

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் பேரூராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் ராம்ராஜ், அ.தி.மு.க. சார்பில் பரிமளா செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர் போட்டியிட்டனர். இங்கு மொத்தம் 15 கவுன்சிலர்கள். இதில் ராம்ராஜ் 8 வாக்குகள் பெற்றிருந்தார். பரிமளா செந்தமிழ்ச்செல்வன் 7 வாக்குகள் பெற்றிருந்தார். ஒரு வாக்கு வித்தியாசத்தில் ராம்ராஜ் வெற்றி பெற்றதாக தேர்தல் அலுவலர் ராஜசேகர் அறிவித்தார். ராம்ராஜூக்கு வாக்களித்த கவுன்சிலர்கள், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை கடைப்பிடிக்கவில்லை எனவும், அந்த வாக்குகளை செல்லாத வாக்குகளாக அறிவிக்க வேண்டும் எனவும் அதிமுக-வினர் குற்றம்சாட்டினார்கள். நீடாமங்கலம் பேரூராட்சித் தலைவராக, ராம்ராஜ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை வாபஸ் பெற வேண்டும் என அதிமுக-வின் வேட்பாளர் பரிமளா செந்தமிழ்ச்செல்வன் தேர்தல் அலுவலரிடம் முறையிட்டார்.

“நான் பாதிக்கப்பட்டவள் அல்ல; வாழ்க்கையில் மீண்டு வந்தவள்!” – மனம்திறந்த நடிகை பாவனா | actress bhavana opens up for the first time about her struggles

பிரபல நடிகை பாவனா தனக்கு நேர்ந்த அநீதி பற்றியும், அதன் பிறகு தனக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் முதன் முறையாக மனம் திறந்து பேசியிருக்கிறார். உலக மகளிர் தினத்தை முன்னிட்டு `வி த வுமன் ஆஃப் ஆசியா’ கூட்டமைப்பு நடத்திய `குளோபல் டெளன்ஹால்’ என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாவனா, தனக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி வெளிப்படையாகப் பேசியுள்ளார். மூத்த பத்திரிகையாளர் பர்கா தத் கேட்ட கேள்விகளுக்கு நடிகை பாவனா அளித்த பதில்கள், அவரது உறுதித்தன்மையை காட்டுவதாக வெளிப்பட்டுள்ளன. “என் வாழ்க்கையை தலைகீழாக மாற்றிய சம்பவங்கள் நடந்தன. மிகவும் கடினமான பயணத்தை நான் மேற்கொண்டு வருகிறேன். நான் பாதிக்கப்பட்டவள் அல்ல, வாழ்க்கையில் மீண்டு வந்தவள். இதற்கு முடிவு

திருச்செந்தூர்: சசிகலாவுடன் ஓ.பி.எஸ் சகோதரர் ஓ.ராஜா சந்திப்பு!

சசிகலா இன்று காலை நெல்லை மாவட்டம், கூடங்குளம் அருகே உள்ள விஜயாபதி, விஸ்வாமித்திரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். சசிகலா அதைத் தொடர்ந்து, நெல்லையிலிருந்து திருச்செந்தூர் முருகன் கோயிலில் சசிகலா சுவாமி தரிசனம் செய்யத் திட்டமிட்டிருந்தார். அதன்படி, சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக திருச்செந்தூரிலுள்ள தனியார் ஹோட்டலில் சசிகலா தங்கியிருந்திருக்கிறார். ஓ.ராஜா அப்போது, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா, சசிகலா கோயிலுக்குக் கிளம்பவிருந்த நேரத்தில் அவரை ஹோட்டலுக்குச் சென்று சந்தித்துப் பேசினார். ஓ.ராஜா ஓ.ராஜா அதிமுக-வில் சசிகலா மீண்டும் இணைவது தொடர்பாக அவரிடம் பேசியதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே, தேனியில் சசிகலாவை அதிமுக-வில் இணைப்பது தொடர்பான தீர்மானத்துக்கு ஓ.ராஜா ஆதரவு

1 2 3 11
Live Updates COVID-19