நீட்: “9,19,400-வது தரவரிசை பெற்றவருக்கு MBBS சீட்; பணமே காரணம்!" – ராமதாஸ் காட்டம்

இந்திய நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வாக இருந்து வருகிறது நீட் (NEET). 2021 – 2022-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு நடைபெற்று முடிந்த நிலையில், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான மருத்துவ சேர்க்கை முடிவுறும் நிலையில் உள்ளது. இந்த நிலையில், மருத்துவ இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, தரவரிசை பட்டியல் அடிப்படையில் நடத்தப்படாமல், பல்வேறு இடங்களில் பணத்தை பெற்றுக் கொண்டே நிரப்பட்டிருப்பதாகவும்; தரவரிசை பட்டியலில் இடம் பிடித்த போதும்… படிக்க வசதி இல்லாத ஏழை, நடுத்தர குடும்ப மாணவர்களுக்கான இடங்களை கோடிகளில் வைத்திருப்பவர்கள் பறித்து கொள்வதாகவும் குற்றம் சாட்டியிருக்கும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ், அதற்கான புள்ளி விவரங்களை குறிப்பிட்டு முகநூல் மூலம் கண்டனம்

2,000 ஆண்டுகள் பழைமையான சங்க கால ஊர்களின் தடயங்கள் கண்டுபிடிப்பு; அகழாய்வு செய்ய கோரிக்கை! |article about Archaeological team survey at ramanathapuram

அகநானூறு, புறநானூறு, நற்றிணை ஆகிய சங்க இலக்கியங்கள், மருங்கூர்பட்டினம், ஊணூர் என்ற அருகருகே இருந்த இரு சங்ககால ஊர்களைக் குறிப்பிடுகின்றன. மருங்கூர்பட்டினம் கடற்கரையின் அருகில் கடற்கரைச்சோலை, உப்பங்கழி, நவமணிகள் விற்கும் கடைவீதிகளுடன் இருந்துள்ளது. ஊணூர் கடலின் ஓசை கேட்கும் தொலைவில், பழைமையான பலவகை நெல் விளையும் செம்மண் பூமியாக, வழுதுணைத் தழும்பன் என்பவனின் கோட்டை மதில்களுடன் இருந்துள்ளது. அழகன்குளம்தான் இவ்வூர்கள் எனச் சொல்லப்படுவது பொருத்தமானதாக இல்லை. இந்நிலையில் பெயர் ஒற்றுமை கொண்டு தொண்டி அருகே மருங்கூர் மற்றும் ஓரியூரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த வே.ராஜகுரு, வை.வெற்றிவேல், வே.சேர்மராஜ் ஆகியோர் கள மேற்பரப்பாய்வு செய்தனர். தீர்த்தாண்டதானம் கடற்கரையிலிருந்து மருங்கூர் 2 கி.மீ. தூரத்திலும், நேர்வழியில்

“காங்கிரஸ் கட்சியை எங்கும் காணமுடியவில்லை” – மத்திய அமைச்சர் அமித் ஷா | Poll Victory Shows People’s Trust In PM, Not Congress: Amit Shah

குஜராத்தில் உள்ள போயன் மோதி கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர், “இந்தியாவை பாதுகாப்பான, வளமான மற்றும் சக்திவாய்ந்ததாக மாற்ற பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட கொள்கைகள் மற்றும் திட்டங்களை மக்கள் ஏற்றுகொண்டனர். நான்கு மாநிலங்களில் பாஜகவிற்கு கிடத்த “மகத்தான” வெற்றியே இதற்கு சாட்சி.பிரதமர் மோடி குஜராத்தின் வளர்ச்சிக்காக நிறைய உழைத்திருக்கிறார்” என்றார். சோனியா – ராகுல் 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து பேசுகையில், “இந்த நான்கு மாநிலங்களிலும் காங்கிரஸின் கதை முடிந்துவிட்டது. தற்போது காங்கிரஸ் கட்சியை எங்கும் காணமுடியவில்லை. ஏழை,எளிய மக்களின் ஆரோக்கியத்தில் மோடி மிகுந்த அக்கறை வைத்திருக்கிறார். ஆயுஷ்மான் பாரத் யோஜனா

`லெதர் ஜாக்கெட், சன்கிளாஸ்’ – புதிய தோற்றத்தில் கிம் ஜாங் உன்… பிரமாண்ட ஏவுகணை சோதனை! | North Korea completed the missile test in front of Kim Jong Un

சமீப காலங்களில் வட கொரியா ஏவுகணை சோதனை நடத்துவது சர்வ சாதாரண விசயமாகிப்போனது. உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்தாலும் அவர்கள் ஏவுகணை சோதனையைத் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். சமீபத்தில் நடந்த ஏவுகணை சோதனை சற்று வித்தியாசமானது. இந்த சோதனையை அந்த நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் முன்னின்று நடத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏவுகணை சோதனை – கிம் ஜாங் உன் லெதர் ஜாக்கெட், சன்கிளாஸ் என்று முற்றிலும் புதிய தோற்றத்தில் காட்சியளித்திருக்கிறார் கிம். அவர் வெளியில் வருவது முதல் ஏவுகணை சோதனை முடிவும் வரை மொத்த வீடியோவையும் சினிமா பாணியில் எடுத்து வெளியிட்டு இருக்கிறார்கள். “Hwasong-17″ என்பது கண்டம் விட்டு கண்டம்

காஷ்மீர் ஃபைல்ஸ் முதல் சாவர்க்கர் பயோபிக் வரை… அன்றைய திராவிட யுக்தியை பின்பற்றுகிறதா இன்றைய பாஜக? | From Kashmir Files to Savarkar biopic : Is BJP following the Dravidian model of Cinema Campaign

தமிழகத்தில் அன்றைய திராவிட அரசியல்வாதிகள் ஆட்சியைப் பிடிப்பதற்காக, திரைப்படங்கள் மூலம் மக்களிடையே கருத்துப் பிர சாரம் செய்த உத்தியை, இன்றைய இந்துத்துவ சக்திகள் ஒட்டுமொத்த இந்திய மக்களிடையே தங்களுடை சிந்தாந்தங்களை கொண்டுசேர்க்க திரைத்துறையை பயன்படுத்தத் தொடங்கியிருப்பதாக பேச்சுகள் எழுந்திருக்கின்றன. தற்போது காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தைத் தொடர்ந்து, பழம்பெரும் இந்துத்துவத் தலைவர் சாவர்க்கரின் வாழ்க்கை வரலாற்றை இந்துத்துவ, பா.ஜ.க ஆதரவு தயாரிப்பாளர்கள் திரைப்படமாக எடுக்கவிருக்கின்றனர். The Kashmir Information | தி காஷ்மீர் ஃபைல்ஸ் திராவிட அரசியலும், தமிழக திரைத்துறையும்: திரைப்படங்கள் மூலம் தனது இயக்கத்தின் கொள்கைகளையும், கருத்தியல் சித்தாங்களையும் மக்கள் மனதில் ஆழ வேறூன்ற விதைத்தது திராவிட இயக்கங்கள். அன்றைய காலகட்டத்தில் மேடை நாடகங்களும், திரைப்படங்களும்தான்

வேலை கிடைக்காத விரக்தி; தற்கொலை செய்துகொண்ட கபடி வீராங்கனை – தொடரும் சோகம், என்னதான் தீர்வு? | kabaddi player in Chennai ends her life due to lack of a job

தொடர்ந்து பேசியவர், “தமிழகத்தில், சுகாதாரத்துறை, வருவாய்த் துறை, கல்வி மற்றும் உயர்கல்வித்துறை, சமூக நலத்துறை, சுற்றுச்சூழல் துறை எனப் பல்வேறு துறைகளில் விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரவேண்டும் என்றும், ஆண்டுக்கு 500 முதல் 600 தமிழக விளையாட்டு வீரர்களுக்கு அவர்களின் திறமைக்கு ஏற்றாற்போல வேலைவாய்ப்பு வழங்கவேண்டும் என்றும் தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். கோரிக்கையைக் கேட்ட முதல்வர் விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க ஒரு குழு அமைக்கப்படும் என்று கூறியுள்ளார். தமிழக அரசு அதற்கான பூர்வாங்க பணிகளும் தொடங்கிவிட்டன. கண்டிப்பாக இனி மாநில மற்றும் தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற எந்த தமிழக வீரரும் வேறு எங்கும் வேலைக்குச் செல்ல வேண்டிய

“இந்தியச் சிறைகளில் 4,926 வெளிநாட்டுக் கைதிகள் உள்ளனர்!” – நாடாளுமன்றத்தில் அஜய் மிஸ்ரா தகவல் | union minister ajay mishra about foreign prisoners in indian jails

அஜய் மிஸ்ரா அளித்த பதில் இதோ… எவ்வளவு கைதிகள்! தற்போது இந்தியச் சிறையில் வெளிநாட்டைச் சேர்ந்த 3,467 பேர் விசாரணை கைதிகளாக உள்ளனர். இவர்களில் அதிகபட்சமாக 1,630 பேர் வங்காள தேசத்தைச் சேர்ந்தவர்கள். 615 பேர் நைஜீரியாவைச் சேர்ந்தவர்கள். மேலும், நேபாளத்தைச் சேர்ந்த 463 பேர், மியான்மாரைச் சேர்ந்த 152 பேர், நைஜீரியாவைத் தவிர ஆப்பிரிக்காவிலிருந்து 114 பேர் மற்றும் பாகிஸ்தானிலிருந்து 107 பேர். இவர்களோடு, கனடா மற்றும் சீனாவிலிருந்து தலா 14 பேர் விசாரணை கைதிகளாக உள்ளனர். இந்தியாவில் மொத்தம் 4,926 வெளிநாட்டுக் கைதிகள் உள்ளனர். இவர்களில் 1,140 பேருக்குத் தண்டனை கிடைத்துள்ளது. மேலும், 3,467 பேர் விசாரணை கைதிகளாக உள்ளனர். இந்த கைதிகளில்

சென்னை – சேலம் எட்டு வழிச்சாலை… திமுக அரசின் நிலைப்பாடும் சர்ச்சையும்!

சென்னை தாம்பரத்தை அடுத்த படப்பையிலிருந்து சேலத்துக்கு 277 கி.மீ நீளத்துக்கு எட்டு வழிச் சாலை அமைக்கும் திட்டத்தை 2018-ம் ஆண்டு மத்திய பாஜக அரசு அறிவித்தது. அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில், அப்போதை அதிமுக அரசு ஆர்வம் காட்டியது. எட்டு வழிச் சாலைக்காக சுமார் 7,000 விவசாயிகளிடமிருந்து 6,978 ஏக்கர் நிலங்களை அதிமுக அரசு கையகப்படுத்தியது. எட்டு வழிச் சாலை அதனை தொடர்ந்து இந்தத் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. விவசாயிகள் பாதிக்கப்படுவதாக, இந்தத் திட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. எட்டு வழிச் சாலைத் திட்டத்தை ரத்துசெய்யக் கோரி பா.ம.க இளைஞரணி செயலாளர் அன்புமணி உள்பட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்குகளை

`தி காஷ்மீர் ஃபைல்ஸ்’: “மக்கள் மேலும் எங்களை வெறுப்பதற்கே இந்த வரிச்சலுகை” – ஃபரூக் அப்துல்லா | Govt made The Kashmir Files tax free to make people hate us to the extreme: Farooq Abdullah

பாலிவுட் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரியின் இயக்கத்தில் கடந்த 11-ம் தேதி வெளியாகி, திரையரங்கங்களில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ். காஷ்மீரை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு நாடு முழுவதும் ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர வந்துகொண்டிருக்கிறது. இதில், அனுபம் கெர், பல்லவி ஜோஷ், பாஷா சும்ப்லி, தர்ஷன் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். உத்தரப்பிரதேசம், திரிபுரா, கோவா, ஹரியானா, உத்தரகாண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்தப் படத்திற்குக் கேளிக்கை வரிவிலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 90-களில் காஷ்மீரைச் சேர்ந்த இந்து மக்கள் எதிர்கொண்ட சம்பவங்களை அப்படியே கண்முன்னே கொண்டு வந்துள்ளது எனச் சிலர் கூறி வருகின்றனர். இது குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கருத்துகளை முன்வைத்துவருகின்றனர்.

மயிலாடுதுறை: இடிந்து விழும் நிலையில் பள்ளிக்கட்டடம் – அச்சத்தில் மாணவர்கள் சாலை மறியல் போராட்டம்! | school students hold protest demanding renovation of school building

இதனால் பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப அச்சமடைந்த பெற்றோர்கள், இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். “எந்நேரமும் மேற்கூரை இடிந்து விழுந்து அசம்பாவிதம் ஏற்படலாம் என்ற அச்சம் உள்ளது. அதனால் உடனடியாக கட்டடத்தை சீரமைக்க வேண்டும்” என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர். ஆனால், அரசு அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளியின் வாயிலில் அமர்ந்து கட்டடத்தை சீரமைக்க வலியுறுத்தி மாணவர்கள் கோஷங்களை எழுப்பினர். இடிந்து விழும் நிலையில் பள்ளிக்கட்டடம் அதையடுத்து, தகவலறிந்து உடனடியாக  சம்பவ இடத்துக்கு விரைந்த மணல்மேடு போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், `உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு

1 2 3 37
Live Updates COVID-19