IPL 2022: தோனி, ரெய்னா, ஜடேஜா… சி.எஸ்.கே-வின் ஆல்-டைம் 11-ல் யாருக்கெல்லாம் இடம்?

ஒவ்வொரு ஐ.பி.எல் தொடர் நெருங்கும்போதும் அத்தொடர் பற்றியான பேச்சுகள் ஒரு பக்கம் அதிகரிக்க தங்களது கடந்தகால பெருமைகளைப் பேசுவதும் ஒவ்வொரு அணி ரசிகர்களின் வழக்கம். ஐ.பி.எல் தொடங்கிய காலத்தில் இருந்து இன்றுவரை இத்தொடரின் மிக சிறந்த அணிகளுள் ஒன்றாக சென்னை சூப்பர் கிங்ஸை சந்தேகமில்லாமல் கூறிவிடலாம். சுமார் 14 வருடங்களாக தோனி என்னும் ஒற்றை கேப்டனுக்குக் கீழ் செயல்பட்டு வரும் இந்த மஞ்சள் படை பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு விதமாக தன்னை பரிணமித்து கொண்டிருக்கிறது. சரி, சி.எஸ்.கே அணிக்கு ஆல்-டைம் 11 என்று ஒன்று இருந்தால் அது எப்படி இருக்கும் என்று யோசித்தோம். CSK அணியின் முதல் வீரரைத் தேர்ந்தெடுக்க சிறு துளி யோசனையும் தேவை

23 நிமிடத்தில் ஹாட்ரிக் அடித்து அசத்திய லெவண்டோஸ்கி; சாம்பியன்ஸ் லீக் காலிறுதியில் பேயர்ன் மூனிச்!

சாம்பியன்ஸ் லீக் ரவுண்ட் ஆஃப் 16 போட்டியில் ஆர்.பி.சால்ஸ்பெர்க் அணியை 7-1 என வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது பேயர்ன் மூனிச். போட்டி தொடங்கிய 23 நிமிடங்களிலேயே மூன்று கோல்கள் அடித்து, சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் விரைவில் ஹாட்ரிக் கோல் அடித்தவர் என்ற சாதனையப் படைத்தார் ராபர்ட் லெவண்டோஸ்கி. ரெட் புல் அரீனாவில் நடந்த முதல் சுற்றில் இரண்டு அணிகளும் 1 கோல் அடித்து சமநிலையில் இருந்தன. ஜூலியன் நகில்ஸ்மேன் பலமான அணியைக் களமிறக்கியிருந்தாலும், சால்ஸ்பெர்க் அணி மிகச் சிறப்பாக விளையாடி அவர்களை கட்டுக்குள் வைத்தது. சொல்லப்போனால் 90-வது நிமிடம் வரை அந்த அணிதான் முன்னிலை வகித்தது. கிங்ஸ்லி கோமன் அடித்த கடைசி நிமிட கோலால் தான்

பாகிஸ்தான் கேப்டனின் குழந்தையைக் கொஞ்சிய இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள்; வைரலாகும் புகைப்படம்! | photo of indian cricket women playing with pakistan captain- s daughter goes viral

பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பிஸ்மா மரூப் மற்றும் அவரின் கைக்குழந்தையுடன் இந்திய கிரிக்கெட் அணியின் வீராங்கனைகள் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை மவுன்ட் மவுங்கானுவில் நடந்த 2022 ஐசிசி மகளிர் உலகக் கோப்பையில் இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வெற்றி கண்டது. இந்தியாவின் வெற்றிக்குப் பிறகு, பாகிஸ்தான் கேப்டன் பிஸ்மா மரூப் மற்றும் அவரின் கைக்குழந்தையுடன் இந்திய கிரிக்கெட் அணியின் வீராங்கனைகள் குழுவாகப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மேலும் அவர்கள் பிஸ்மா மரூப்பின் குழந்தையுடன் கொஞ்சி விளையாடினர். பிஸ்மா மரூப் -இந்திய அணியின் வீராங்கனைகள்Twitter Photograph இந்திய வீராங்கனைகள் குழந்தையை நோக்கிச் செய்யும் விளையாட்டுத்தனமான சைகைகள்,

ஆஸ்திரேலிய சுழல்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே மரணம் – மாரடைப்பு காரணம் எனத் தகவல்! | Former Australian Cricketer Shane Warne dies of suspected heart attack

52 வயதான ஷேன் வார்னே தாய்லாந்தில் இருக்கும் தன் வீட்டில் எந்த சுயநினைவும் இல்லாமல் இருக்கவே குடும்பத்தினர் மருத்துவ உதவியை நாடியிருக்கிறார்கள். ஆனால், மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றும், அவரை மீட்க முடியவில்லை. மாரடைப்பால் இந்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஷேன் வார்னே சுழற்பந்து என்றதும் நம் நினைவுக்கு வருபவர்களில் முக்கியமானவர் ஷேன் வார்னே. ஆஸ்திரேலியாவுக்காக 145 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 708 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார் ஷேன் வார்னே. சர்வதேச அளவில் 1001 விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடங்கிய காலத்தில் ராஜஸ்தான் ராயலஸ் அணியை வழிநடத்தி முதல் தொடரிலேயே கோப்பையையும் வெல்ல வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பல பிரபலங்கள் ஷேன் வார்னேவின்

கெவின் ஓ பிரையனை மறக்க முடியுமா? உலக கிரிக்கெட்டைத் திரும்பிப் பார்க்க வைத்த அந்த ஒற்றை இன்னிங்ஸ்! | Kevin O’Brien – the hero of Irish cricketing history

“அது அவ்ளோ தான்… டைம் முடிஞ்சுது” என எழ நினைத்த என்னை, “என்ன செய்றாங்கனு பாத்துட்டாச்சு போலாம்” என புதுப்பேட்டை திரைப்பட பாணியில் சமாதானம் சொல்லி அமர வைத்தது மனது. அப்படி எத்தனை பேர் என்னுடன் அமர்ந்து அந்த ஆட்டத்தைப் பார்த்தார்களோ, அனைவரும் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். இனி நிச்சயம் இப்படி ஒரு ஆட்டத்தைக் காண முடியாது யாராலும். சரி கதைக்கு வருவோம். இன்னமும் 222 ரன்கள் தேவை 166 பந்துகளில். தலையில் வித்தியாசமான ஆரஞ்சு நிற டை அடித்து வாட்டசாட்டமான ஆள் ஒருவர் புதிதாகக் களமிறங்கினார். கெவின் ஓ பிரையன் என இவரது பெயரை வர்ணனையில் கூறினார்கள். கெவின் ஓ பிரையன் புது வீரர் வந்ததும் ஸ்லிப்

Australian open – 2022 : ஜோகோவிச்சின் பஞ்சாயத்து முதல் நடாலின் அசாதாரணம் வரை.

2022-ம் ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் தொடர் டென்னிஸ் வரலாற்றின் மாபெரும் சாதனையோடு நிறைவு பெற்றிருக்கிறது. இந்த ஆஸ்திரேலிய ஓபன் தொடரை வென்றதன் மூலம் 21-வது கிராண்ட் ஸ்லாமை தொட்ட முதல் வீரனாய் உயர்ந்திருக்கிறார் ராஃபேல் நடால். Nadal மெத்வதேவுக்கு எதிராக நடால் நிகழ்த்திய 5 மணி நேரத்திற்கும் மேலான அந்த போராட்டம், மெல்போர்ன் மைதானத்தில் நேரடி சாட்சியாய் கண்டுகளித்தவரை மட்டுமல்ல உலகின் மற்றோரு ஓரத்தில் இருந்த கடைசி டென்னிஸ் ரசிகனையும் உச்சிமுகர செய்தது. ஆஸ்திரேலியன் ஓப்பனின் இந்த பரபரப்பு இறுதியாட்டத்தில் மட்டுமல்ல அந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பே தொடங்கிவிட்டது என்று தான் கூறவேண்டும். ஆம், ஜோகோவிச்சை ஆஸ்திரேலிய அரசு வலுக்கட்டாயமாக வெளியேற்றியதிலிருந்து இத்தொடரில் நடந்த

“நம் பேட்ஸ்மேன்கள் எப்படி ரன் எடுப்பது என்பதையே மறந்துவிட்டனர்!” – ஹர்பஜன் சிங் காட்டம் | former indian cricketer harbajan singh reaction on Ravi shastri s statement

டெஸ்ட் மேட்ச் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகுவதாக சமீபத்தில் அறிவித்தது இந்தியளவில் பேசுபொருளானது. கோலியின் விலகல் குறித்து இரண்டு தினங்களுக்கு முன்பு முன்னாள் இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்த்ரி தெரிவித்துள்ள கருத்துக்கு ஹர்பஜன் சிங்க் பதிலளித்துள்ளார். ரவி சாஸ்திரி: “இன்னும் இரண்டு ஆண்டுகள் இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி இருந்திருந்தால் சொந்த மண்ணில் இந்தியா விளையாடவிருந்த 50 முதல் 60 போட்டிகளில் வெற்றியைப் பெற்றிருப்பார். ஹோலி தன் கேப்டன்சியைத் தொடர்வதை சிலரால் ஜீரணிக்க முடியவில்லை. இருப்பினும் நீண்ட காலமாக அணியை வெற்றிகரமாக வழிநடத்தியதால் டெஸ்ட் போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து விலகும் அவரின் முடிவை மதிக்க வேண்டும்” எனத் தெரிவித்து

மீண்டும் ரத்தான விசா; ஆஸ்திரேலியாவிற்குள் நுழைய மூன்றாண்டுகள் தடை? என்ன செய்யப்போகிறார் ஜோகோவிச்? | Australian Government cancels Djokovic visa for the second time

நாட்டிற்குள் நுழையும் போது விண்ணப்பப் படிவத்தில் செய்த பிழை, சொந்த நாட்டில் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றாதது ஆகியவையே இதற்கான காரணங்களாக முன்வைக்கப்பட்டன. இந்நிலையில் ஆஸ்திரேலியா ஓப்பன் தொடர் தொடங்க வெறும் மூன்றே நாள்கள் மீதமிருக்க அவரின் விசாவை ரத்து செய்தார் வெளியுறவுத் துறை அமைச்சர் அலெக்ஸ் ஹாக்கே. இதனால் ஆஸ்திரேலிய ஓப்பன் தொடரை இதற்கு முன்னர் ஒன்பது முறை வென்றவரான ஜோகோவிச்சால் இவ்வருடத்திற்கான தொடரில் பங்கேற்கமுடியாது என்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. மேலும் விசா ரத்தானது மட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய நாட்டிற்குள் ஜோகோவிச் மீண்டும் நுழைய மூன்று ஆண்டுகள் வரை தடைவிதிக்கப்படலாம் என்ற செய்திகளும் வெளியாகி வருகின்றன. வேறு வழியில்லாமல் ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறுவதா அல்லது நீதிமன்ற வாசலை

கோல் அடிக்கத் தவறும் சென்னையின் FC; அட்டாக்கில் சொதப்பி கோவாவிற்கு எதிராகத் தோல்வி! |Chennaiyin FC lost to FC Goa by 0-1 lack of unity in attack cost them a match

இந்தியன் சூப்பர் லீக் சீசன் 8 – ன் 54 வது போட்டியில் சென்னையின் FC யும் FC கோவாவும் நேற்று மோதியிருந்தன. சென்னை மற்றும் கோவா வீரர்கள்ISL புள்ளிப்பட்டியலில் சென்னை அணி 6 வது இடத்தில் இருந்தது. கோவா 9 வது இடத்தில் இருந்தது. மேலும், கோவா கடைசியாக ஆடி 5 போட்டியில் ஒன்றில் மட்டுமே வென்றிருந்தது. கோவாக்கு எதிராக அதிக கோல்களை அடித்த அணியாகவும் சென்னையே இருக்கிறது. இதையெல்லாம் வைத்து இந்த போட்டியை சென்னை எளிதாக வென்றுவிடும் என்றே கணிக்கப்பட்டது. ஆனால், களத்தில் நடந்தது வேறு. 3-4-3 என்ற ஃபார்மேஷனோடு கோவா களமிறங்க, 3-5-2 என்ற ஃபார்மேஷனோடு சென்னை களமிறங்கியிருந்தது. சென்னை அணியின்

Paul stirling: ஐசிசி விருதுப் பரிந்துரையில் இடம்பெற்றிருக்கும் அயர்லாந்து வீரரைப் பற்றித் தெரியுமா?

கிரிக்கேட் என்றாலே 10 நாடுகளின் விளையாட்டு என்றுதான் கருதப்பட்ட காலம் உண்டு. ஏன் 2019 உலகக் கோப்பையிலும் 10 நாடுகள் மட்டும்தானே விளையாடின. இப்படிபட்ட நிலையில், அஷோசியேட் அணி வீரர் ஒருவர் இந்தாண்டு ஐசிசி ஒருநாள் கிரிக்கெட்டர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்! யார் அவர்? அயர்லாந்தில் உள்ள ஒரு விளையாட்டு குடும்பம். தந்தை சர்வதேச ரக்பி நடுவராகவும் அண்ணன் கிரிக்கேட் வீரராகவும் வலம் வந்த வீட்டில் கடைக்குட்டியாக பிறந்தவர் அவர். அந்த சின்ன குடும்பத்தில் பிறந்தவர் தான் இன்று மிகப்பெரிய கிரிக்கேட் குடும்பத்தில் தன் பெயரை பதியவைத்திருக்கிறார். அவர் பால் ராபர்ட் ஸ்டர்லிங்! 1990-ல் பிறந்த பால் ஸ்டர்லிங், 2008-ம் ஆண்டு தனது 17 வயதில் நியூசிலாந்துக்கு

Live Updates COVID-19