CSK vs KKR: ஜடேஜா vs ஸ்ரேயாஸ் – புதிய அணி, புதிய கேப்டன்கள், புதிய சவால்கள்… வெல்லப்போவது யார்? | New Captains; New Challenges CSK Vs KKR facing each other on IPL 2022 Season Opener

மொயின் அலி 2020 சீசனில் சென்னை அணிக்கு ஓப்பனிங், மிடில், டெத் என எங்கேயுமே பேட்டிங்கில் ஒரு மொமண்டம் கிடைக்கவே இல்லை. ஆனால், கடந்த சீசனில் ஓப்பனிங்கில் ருதுராஜ் + டூப்ளெஸ்சிஸ் கலக்க அந்த மொமண்டமை அப்படியே கீழே விடாமல் மொயின் அலி வெளுத்தெடுப்பார். அவரிடமிருந்து அப்படியே ஜடேஜாவிற்கு சென்று அவர் ஆட்டங்களைச் சிறப்பாக முடித்து வைத்தார். மொயின் அலி இல்லாதது இந்த தொடர் சங்கிலியில் ஒரு கண்ணி அறுந்ததைப் போலவே இருக்கும். பெளலிங்கிலும் ஜடேஜாவோடு சேர்ந்து சிறப்பாக வீசினார். ஆல்ரவுண்டராக ஆறாவது பௌலிங் ஆப்சனாக இருந்ததால் தோனிக்குப் பெரும் உறுதுணையாக இருந்தார். அவர் இல்லாதது ஸ்பின் பௌலிங்கிலும் ஒரு பின்னடைவையே கொடுக்கும். வருண் சக்கரவர்த்திKKR

சென்னை சூப்பர் கிங்ஸின் புதிய கேப்டன் ஜடேஜாவுக்கு இருக்கும் சவால்கள் என்னென்ன? | Various challenges for Chennai Super Kings new captain Ravindra Jadeja

ஜடேஜா 13 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாட்டின் மிக உயர்ந்த மட்டத்தில், முக்கிய வீரராகத் தொடர்ந்து இருந்து வருகிறார். ஆனால் அவர் தான் விளையாடிய எந்த அணிகளின் தலைமைக் குழுவிலும் ஒரு பகுதியாக இருந்ததில்லை. அதற்காக ஜடேஜா சிறந்த கேப்டன் ஆகமாட்டார் என்று அர்த்தமில்லை. என்ன இருந்தாலும், அவருடைய அனுபவமும், ஆற்றலும் அணிக்கு பெரும் பங்களிப்பாக இருக்கும். ஐபிஎல் என்பது திறமைகளை கண்டறியும் ஒரு தளம்தான். இங்கு சிறந்த தலைவர்களும் உருவாகியுள்ள வரலாறு உண்டு. அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு ரோஹித் ஷர்மா. ரோஹித் தவிர, இளம் வயதிலேயே அணியின் தலைமை என்ற பொறுப்பை ஏற்று ஷ்ரேயாஸ், ரிஷப் பண்ட் என அனைவரும் மெருகேறும் ஒரு பயிற்சிக்கூடமாக ஐபிஎல்

IPL 2022: கேப்டன் ஜடேஜா, பும்ரா, ஃபாஃப் – சாதிக்கக் காத்திருக்கும் டாப் 10 சீனியர் வீரர்கள்!

டாப் 10 இளம் வீரர்கள் குறித்த கட்டுரை… IPL 2022: சாய் கிஷோர், ஓடியன் ஸ்மித், ஹங்கர்கேகர்… சாதிக்கக் காத்திருக்கும் டாப் 10 இளம் வீரர்கள்! கோப்பைக்கான படையெடுப்பு என்பதற்கும் அப்பால், ஐபிஎல்லுக்கு மேலும் சுவை சேர்க்கும் இன்னுமொரு கூறு, ரிலே போல கைமாறிக் கொண்டே இருக்கும் பர்ப்பிள், ஆரஞ்சுக் கேப்புகளுக்கான போட்டி. அந்தப் பந்தயத்தில் முந்தி முத்திரை பதிக்கப் போகின்றவர்கள் யார்? தனது சாலச்சிறந்த ஐபிஎல்லாக இந்த சீசனை மாற்றிக் கொள்ளப் போகும் சீனியர்கள் யார் யார்?! ரஷித் கான் – குஜராத் ரஷித் கான் டி20-ல் விக்கெட் வீழ்த்துவது எவ்வளவு முக்கியமோ, அதேஅளவு முக்கியத்துவம் மிக்கது ரன்களுக்குக் கடிவாளமிடுவது. அதனால்தான் 76 ஐபிஎல்

நீரஜ் சோப்ரா: நீரஜ் சோப்ரா ரிட்டன்ஸ்: எனது அடுத்த டார்கெட் இதுதான்.. – neeraj chopra returns to india from usa light weight wrestling tokyo olympic

கடந்த ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் 2021 ல் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கத்தினை பெற்றுத் தந்தார். இந்தப் பயணம் இந்த தங்கப் பதக்கத்தோடு நின்று விடாமல் இருப்பதற்காக அமெரிக்காவிற்கு சென்று கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் பயிற்சியை முடித்துக் கொண்ட சோப்ரா, நேற்றைய முன்தினம் அமெரிக்காவிலிருந்து மும்பைக்கு விமானம் மூலம் வந்துள்ளார். நீரஜின் அடுத்த இலக்கு:மும்பை வந்திறங்கிய நீரஜ் சோப்ராவை வரவேற்க விமான நிலையத்தில் ரசிகர்கள் உட்பட ஊடகங்களும் கூடியிருந்தன. எனவே, அப்போது ஊடகங்களுக்கு பேட்டியளித்த நீரஜ் சோப்ரா, “டோக்கியோ ஒலிம்பிக்கில் நான் கொண்டிருந்த அதே வேகம் நிறைந்த விளையாட்டை இனி விளையாடவுள்ள அனைத்து இடங்களிலும் கொண்டு வருவதற்கு

El Clasico: ரியல் மாட்ரிட்டைப் பந்தாடிய பார்சிலோனா; தொடங்குகிறது புதிய அத்தியாயம்!

எல் கிளாசிகோ போட்டியில் 4 கோல்கள் வித்யாசத்தில் ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தி அசத்தியிருக்கிறது பார்சிலோனா. சமீப காலமாக எல் கிளாசிகோ போட்டிகளில் தொடர்ந்து சொதப்பிக்கொண்டிருந்த அந்த அணியின் இந்த செயல்பாட்டை திருவிழா போலக் கொண்டாடிக்கொண்டிருக்கின்றனர் பார்சா ரசிகர்கள்! எல் கிளாசிகோ – கால்பந்து உலகின் மிகப்பெரிய ரைவல்ரி. ரியல் மாட்ரிட், பார்சிலோனா அணிகள் மோதும் இந்தப் போட்டியை ஒட்டுமொத்த உலகமும் எதிர்பார்த்துக் காத்திருக்கும். சில ஆண்டுகள் முன்பு வரை மிகவும் பரபரப்பாக நடந்துகொண்டிருந்த போட்டி, கடந்த சில மாதங்களாக ஒருதலைப்பட்சமாக மாறியது. கடைசியாக நடந்த 5 எல் கிளாசிகோ போட்டிகளிலும் ரியல் மாட்ரிட்தான் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த ஆண்டு மெஸ்ஸியையும் இழந்தது பார்சிலோனா.

tamil news today: ‘தமிழகத்தில்’ சர்வதேச செஸ் போட்டி…43 வருட சரித்திரம் மாற்றியமைப்பு: முதல்வர் மகிழ்ச்சி ட்வீட்! – chennai to host world chess olympiad 2022

1927ஆம் ஆண்டுமுதல் சர்வதசே செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை 43 முறை இத்தொடர் நடைபெற்றுள்ள நிலையில், அதில் ஒரு சீசன் கூட இந்தியாவில் நடைபெற்றது கிடையாது. இந்நிலையில், முதல்முறையாக 2022ஆம் ஆண்டு சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, இந்தியாவில் அதுவும் நமது தமிழ்நாடு தலைநகர் சென்னையில் நடைபெறவுள்ளது. இத்தொடர் முதலில் ரஷ்யாவில்தான் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அங்கு நிலவும் போல் சூழல் காரணமாக மாற்று இடத்தில் நடத்த ஏலம் நடைபெற்றது. இந்நிலையில், அந்த ஏலத்தில் இந்தியா வெற்றிபெற்றாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்துதான், போட்டிகள் சென்னைக்கு இடமாறியுள்ளது.இந்த ஏலம் கோருவதற்கான கோரிக்கையுடன் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு, முதல்வர் அலுவலகத்தை அணுகிய ஒருசில மணி நேரத்திலேயே

IND vs SL: பரிதாப இலங்கை… தொடரும் பும்ராவின் துல்லியம், ஷ்ரேயாஸின் நேர்த்தி, பண்ட்டின் அதிரடி!

27 நிமிடங்கள்… இலங்கை அணியின் மீதமிருந்த 4 விக்கெட்டுகளை வீழ்த்த நேற்றைய நாளின் தொடக்கத்தில் இந்திய பௌலர்களுக்கு இதுவே போதுமானதாய் இருந்தது. 6 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் என்ற நிலையில் களமிறங்கிய இலங்கையின் இன்னிங்ஸ் அடுத்த 35 பந்துகளில் முடிவுக்கு வந்தது (109/10). இந்திய மண்ணில் முதல் முறையாக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார் பும்ரா. Bumrah நாளின் தொடக்கத்தில் ஆட்டங்கண்ட இலங்கை அணிக்கு மீண்டுமொரு சவால் நாளின் கடைசி 35 நிமிடங்களில் அமைந்தது. ஆனால் இம்முறையும் தன் அதே துல்லியத்தை இம்மி பிசகாமல் காட்ட முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே திரிமனேவை ரன் ஏதும் இல்லாமல் பெவிலியனுக்கு அனுப்பினார் பும்ரா. 28/1 என்ற நிலையில்

ICC Women's World Cup 2022: கோப்பையை வெல்லுமா மித்தாலியின் படை? அணியின் ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்!

சுமார் 5 வருடங்களுக்குப் பிறகு துவங்கியுள்ளது மகளிர் உலகக் கோப்பை. கொரோனா தொற்று காரணமாக 9 வீராங்கனைகள் வைத்துக் கூட ஃபீல்ட் செய்ய அனுமதி, கடந்த முறையை விட 75% பரிசுத்தொகை உயர்வு என இந்த உலகக்கோப்பையில் பல்வேறு மாற்றங்களைச் செய்துள்ளது ஐசிசி. World cup 2022 1978-இல் இருந்து மகளிர் உலகக்கோப்பையில் விளையாடி வரும் இந்திய அணி இதுவரை இரண்டு முறை (2005 & 2017) இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதிலும் 2017-இல் இங்கிலாந்துக்கெதிரான இறுதிப் போட்டியில் வெறும் 9 ரன் வித்தியாசத்தில் கோப்பையை நழுவவிட்ட இந்திய அணி இம்முறை கோப்பையை எப்படியேனும் தவறவிட்டுவிடக்கூடாது என்று நிச்சயம் போராடும். இந்த உலகக்கோப்பைத் தொடரில் களமிறங்கப்போகும் இந்தியப்படை

அம்பேத்கர் வாழ்த்திய கிரிக்கெட் வீரர்… யார் இந்த பல்வாங்க்கர் பலூ? | Life history of Palwankar Baloo – the story of India’s first Dalit cricketer

பம்பாயில் உயர் சாதி ஆட்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ட முதல் ஆள் பலூதான். இதன் பின் பலூவின் சகோதரர்களும் அணியில் சேர்க்கப்பட்டனர். 1910 முதல் 1920 வரை ஒவ்வொரு ஆண்டும் பலூவை கேப்டன் ஆக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுப்பப்பட அதைத் தவிர்த்துக் கொண்டே வந்தனர் உயர் சாதி ஆட்டக்காரர்கள். பாய் என்னும் வீரர் 1913ல் கேப்டன் ஆக்கப்பட்டதும் பலூதான் கேப்டன் பதவிக்கு பொருத்தமானவர் என்று வெளிப்படையாகக் கூறினார். 1920ல் டியோதர் என்னும் ஒரு உயர்சாதி கேப்டன் வந்ததும் பலூவும் அவரது சகோதரர் வித்தலும் அணியிலிருந்து நீக்கப்பட்டனர். இது பெருத்த பிரச்சனையாக மாற பலூ துணைக் கேப்டனாக ஆக்கப்பட்டார். அப்போதுதான் இந்திய கிரிக்கெட்டில் ஒரு

Ind vs Pak : “இந்த முறையும் உங்களைத் தோற்கடிப்போம்” இந்தியாவுக்கு சவால்விடும் ஷோயப் அக்தர்.

2022-ம் ஆண்டிற்கான டி20 உலகக் கோப்பை வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இத்தொடருக்கான அட்டவணை கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்டது சர்வதேச கிரிக்கெட் வாரியம் அக்டோபர் 16-ம் தேதி தொடங்கி நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவின் சிட்னி, மெல்பர்ன், அடிலெய்ட் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் நடைபெற உள்ளது. Ind vs Pak விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியதையடுத்து இந்த முறை ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்க உள்ளது இந்திய அணி. இந்தியா இடம்பெற்றுள்ள குரூப் பி பிரிவில் பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வங்காளதேசம் ஆகிய அணிகள் உள்ளன. இந்த முறையும் பாகிஸ்தான் அணிக்கு எதிராகத்தான் முதல் ஆட்டத்தை விளையாடவுள்ளது இந்தியா.

1 2 3 6
Live Updates COVID-19