'அவர் எங்கிருந்தாலும் அரசன்தான்!' – கேப்டன் தோனிக்கு ஓய்வுண்டு, ஆனால் தலைவனுக்கு இல்லை!

கோப்பைகளின் கோமகன், ஐபிஎல் கேப்டன்களின் பிதாமகன், கேப்டன் பணிக்கு பிரியாவிடை கொடுத்து ஓய்வுபெற்றுள்ளார். ஐந்தாவது கோப்பையை தோனி வெல்வார்; தனது போட்டியாளர் மும்பையின் சாதனையை சிஎஸ்கே சமமாக்கும்; கோப்பை, கொண்டாட்டங்களுடன் தோனியின் பிரிவு உபச்சாரம் நடக்கும் என்ற கனவிலிருந்த ரசிகர்களுக்கு, இடியாக வந்து இறங்கியுள்ளது தோனி தன் கேப்டன் பதவியை, ஜடேஜாவிடம் அளித்துள்ள துக்க செய்தி. ஐபிஎல் அதிகாரத்தில் 12 சீசன்களில் சிஎஸ்கே ஆடிவிட்டது. அதில், 11 முறை பிளேஆஃபிற்கு முன்னேறி வேறு எந்த அணியும் செய்யாத சாதனையையும் நிகழ்த்திவிட்டது. அங்கிருந்து 9 முறை இறுதிப்போட்டியை எட்டி, நான்கு முறை சாம்பியன் மகுடமும் தரித்துவிட்டது. ஆனால், இந்த 12 ஆண்டுகளில் இத்தனை போட்டிகளுக்கும் சிஎஸ்கேயின் கேப்டனாக

IPL 2022 – LSG Starting 11: பலமான அணி, எக்கச்சக்க ஆப்ஷன்கள்… சாதிக்குமா ராகுலின் படை?

குஜராத் டைட்டன்ஸுடன் இவ்வருட ஐ.பி.எல் தொடரில் புதிதாக இணைந்திருக்கும் மற்றுமொரு அணி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ். குஜராத் அணியை போல் அல்லாமல் லக்னோ அணி ஓரளவு பலமாகவே காட்சியளிக்கிறது. சரி, இப்போது ஸ்டார்டிங்-11ஐ பார்த்துவிடுவோம். KL Rahul | கே.எல்.ராகுல் ஒப்பனிங் ஸ்லாட்டில் சந்தேகமே இல்லாமல் கே.எல்.ராகுல் மற்றும் டி காக்தான் ஆடப்போகிறார்கள். ஐ.பி.எல் தொடரின் சமீப சீசன்களில் தன் பேட்டால் தொடர்ந்து நிரூபித்து வருபவர் டி காக். கேப்டன் ராகுல் உடனான இவரது கூட்டணி அணியின் பேட்டிங் யூனிட்டிற்கு இன்றியமையாததாக இருக்கப்போகிறது. ராகுலைப் பற்றிச் சொல்லத் தேவை இல்லை. தற்போதைய தேதியில் ஐ.பி.எல் தொடரின் கன்சிஸ்டன்ட் பேட்டராக இவரை எளிதில் கை காட்டிவிடலாம். பஞ்சாப்

IPL 2022: சாய் கிஷோர், ஓடியன் ஸ்மித், ஹங்கர்கேகர்… சாதிக்கக் காத்திருக்கும் டாப் 10 இளம் வீரர்கள்!

டிம் டேவிட் – மும்பை டிம் டேவிட் கேமியோக்களின் ரோமியோவான டிம் டேவிட்டை, தனது கூடாரத்துக்குள் கொண்டு வந்து அதிரடி ஃபினிஷர் அவதாரமெடுக்க வைக்க மும்பை முயன்றுள்ளது. வேகப்பந்து வீச்சினை நன்முறையில் கவனிக்கும் பவர் ஹிட்டரான டிம் டேவிட், ஸ்பின் பந்துகளைச் சமாளிப்பதிலும் சமர்த்தர்தான் என்பதால் மிடில் ஓவராக இருந்தாலும், இறுதித் தருணங்களாக இருந்தாலும் சிக்ஸர்கள் சிதறலாம். போதாக்குறைக்கு இவரது ஆஃப் பிரேக் பௌலிங்கும், ஆறாவது பௌலிங் ஆப்சனாக இவருக்குக் கூடுதல் மதிப்பூட்டியதால் சற்றும் தயக்கமின்றி ஜோஃப்ரா ஆர்ச்சருக்குச் செலவழித்ததைவிட 25 லட்சம் அதிகம் கொடுத்தே மும்பை இவரை வாங்கியுள்ளது. பல டி20 லீக்குகளைப் பார்த்தவர் என்பதும், பொல்லார்டின் பிரதியாக இவர் இருப்பார் என்பதும் மும்பை

IND vs SL: ஒரே நாளில் 16 விக்கெட்டுகள்… இன்றே முடிந்துவிடுமா பிங்க் பால் டெஸ்ட்?

டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி ஆல்-அவுட், அடுத்த களமிறங்கிய இலங்கை பேட்டர்களில் பாதி பேர் பெவிலியனில். இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான பிங்க்-பால் டெஸ்ட் போட்டி முதல் நாளின் முடிவிலேயே மூன்றாவது நாள் போல மாறியிருக்கிறது. Shreyas Iyer முதல் ஓவரின் ஐந்தாவது பந்தை அகர்வாலுக்கு ஃபுல்லராக அவுட்சைட் ஆஃபில் வீசினார் லக்மல். பந்து பிட்சான இடத்தில் புழுதி நன்றாக எழும்பியது. அந்த ஒற்றை பந்தே ஆட்டத்தின் மொத்த போக்கையும் தெளிவாகக் கூறிவிட்டது. சென்ற ஆண்டு பிப்ரவரில் அகமதாபாத் மைதானத்தில் இங்கிலாந்திற்கு எதிராக பகலிரவு டெஸ்ட் போட்டியை இரண்டே நாள்களில் வென்றது இந்திய அணி. அதற்கு சிறிதும் வித்தியாசம் இல்லாமல் நடைபெற்று

FIFA 2022: பெயர் மற்றும் தேசியக் கொடிக்குத் தடை… கால்பந்தில் ரஷ்யாவைப் புறக்கணிக்கும் உலக நாடுகள்!

உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு உலகம் முழுவதும் பல அதிர்வலைகளை ஏற்படுத்திவரும் நிலையில் இந்த விவகாரம் விளையாட்டு அரங்கிலும் வெளிப்பட்டு வருகிறது. போரை நிறுத்தக்கோரி பல்வேறு நாடுகளைச் சார்ந்த பல விளையாட்டு வீரர்களும் தங்களது கருத்துகளை வெளிப்படுத்துவருகின்றனர். மறுபுறம் ரஷ்யாவின் இந்த படையெடுப்புக்கு எதிராக பல்வேறு கால்பந்து கிளப்களும் ரஷ்யாவில் நடக்கவிருக்கும் போட்டிகளை ரத்துசெய்துள்ளன. FIFA இந்நிலையில் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான FIFA இனி ரஷ்யா நாட்டில் எந்த சர்வதேச போட்டிகளும் நடைபெறாது என அறிவித்திருக்கிறது. மேலும் 2022 ஆண்டிற்கான உலகக்கோப்பை கால்பந்து தொடரில் விளையாட ரஷ்ய தேசிய அணிக்கு தடை விதித்துள்ளது. அதற்கு பதில் ரஷ்ய கால்பந்து யூனியன் என்ற பெயரில் அந்த

Premier League: தொடரும் ஆலிசன் பெக்கரின் தவறுகள்… வெற்றியைத் தவறவிட்ட லிவர்பூல்! | Liverpool & Chelsea dropped points in the Premier League title race

ஆஸ்டன் விலா, லெஸ்டர் போன்ற அணிகளிலும் நிறையப் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இந்நிலையில், இந்த வாரம் நடக்கவிருந்த 6 போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. அவ்வப்போது தவறு செய்துகொண்டிருக்கும் லிவர்பூல் கோல்கீப்பர் ஆலிசன் பெக்கர் நேற்றும் ஒரு மிகப்பெரிய தவறு செய்ய, டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிக்கெதிரான போட்டியில் வெற்றி வாய்ப்பைத் தவறவிட்டிருக்கிறது லிவர்பூல். போட்டி 2-2 என டிரா ஆனதால், இப்போது டைட்டில் ரேஸில் 3 புள்ளிகள் பின்தங்கியிருக்கிறது. செல்சீயும் வெற்றி பெறத் தவறியதால், மான்செஸ்டர் சிட்டியைவிட 6 புள்ளிகள் குறைவாகப் பெற்று மூன்றாம் இடத்தில் நீடிக்கிறது. உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க VIKATAN DEALS ஓமைக்ரன் பரவுவதால் மீண்டும்

T20 World Cup Final: வின்டேஜ் வில்லியம்சன்; வதம் செய்த வார்னர்; நிரூபித்த ஆஸ்திரேலியா! | NZ v AUS | Match Report on ICC T20 World Cup Final Match Between Australia and New Zealand

வதம் செய்த வார்னர்: “நான் குறைத்து மதிப்பிடப்படுகிறேன்”, என குறைபட்டுக் கொண்டிருந்த ஜம்பா, பந்துவீச்சில் பலங்காட்டி இருந்ததைப் போல, தன்னை உதாசீனம் செய்த சன்ரைசர்ஸுக்கும், தன்னை நிருபிப்பதைப் போன்ற தொடக்கத்தை, வார்னர் கொடுத்திருந்தார். கேப்டன் ஃபின்ச் விரைவில் ஆட்டமிழந்தாலும், அதன் பிறகு மார்ஷுக்குத் துணையாக நின்று இலக்கைத் துரத்தினார் வார்னர். பந்துகளையும் வீணடிக்காமல், சரியான பந்துகள் கிடைத்தபோது, பெரிய ஷாட்டுகள் ஆடி, தனது ரன் ரேட்டோடு அணியின் ரன் ரேட்டையும் சீராக வைத்திருக்க உதவினார். ஸ்லாட்டில் விழுந்த நீஷம் வீசிய பந்தை, லாங் ஆனில் சிக்ஸருக்குத் தூக்கி அரைசதத்தைக் கடந்தார். அரபு மண்ணில் குறைந்தது பத்து டி20 போட்டிகளிலாவது ஆடியுள்ள பேட்ஸ்மேன்களின் வரிசையில், இரண்டாவது சிறந்த

mariyappan thangavelu: பாரா ஒலிம்பிக் 2020: இன்று துவக்கம்…தேசியக் கொடி ஏந்திச் செல்லும் தமிழர்: பதக்கம் வெல்லுமா இந்தியா? – mariyappan thangavelu para high jumper to be india s flag bearer at tokyo paralympics 2020

மாற்றுத் திறனாளிகளுக்கு என நடத்தப்படும் பாரா ஒலிம்பிக் தொடர், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று துவங்கி, செப்டம்பர் 5 வரை நடைபெறவுள்ளது. மொத்தம் 160 நாடுகளைச் சேர்ந்த 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். இது 16ஆவது பாரா ஒலிம்பிக் தொடராகும். மொத்தம் 54 பேர்:இந்தியாவிலிருந்து 54 வீரர், வீராங்கனைகள் தடகளம், வில்வித்தை பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ் என மொத்தம் 9 வகையான விளையாட்டுகளில் பங்கேற்கவுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த உயரம் தாண்டுதல் வீரர் மாரியப்பன் தங்கவேலு, டோக்கியோ பாரா ஒலிம்பிக் துவக்க விழாவில் நமது தாய்நாட்டின் தேசியக் கொடியை ஏந்திச் செல்லவுள்ளார். 2016-ல் நடைபெற்ற ரியோடி ஜெனிவா பாரா ஒலிம்பிக்கில் மாரியப்பன் தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 2 3 7
Live Updates COVID-19