PBKS vs RCB: டு ப்ளெஸ்ஸி அதிரடி வீண்… ஆர்சிபி தவறவிட்ட கேட்சால் கேமையே மாற்றிய ஓடியன் ஸ்மித்! | IPL 2022: Despite Du Plessis heroics RCB loses PBKS in a high scoring match

ஆனால் டு ப்ளெஸ்ஸ்யின் அதிரடி அவரை அச்சம்கொள்ள வைக்க, மீண்டும் பந்து ராகுல் சஹாரிடம் சென்றது. அவர் வீசிய 15வது ஓவரில் 6 ரன்கள் மட்டுமே வந்தன. ஆனால், அடுத்த அர்ஷ்தீப் ஓவரில் மீண்டும் 2 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார் டு ப்ளெஸ்ஸி. ஆர்சிபி அசால்ட்டாக 150 ரன்களைக் கடந்தது. அதே கோபத்தில் தன் அடுத்த ஓவரில் அர்ஷ்தீப் ஃபாஃபின் விக்கெட்டைத் தூக்கினார். சதமடிப்பார் என பெங்களூர் ரசிகர்களைவிட சென்னை ரசிகர்கள் காத்துக் கிடக்க, 88 ரன்களில் ஷாருக்கானிடம் லாங்க் ஆஃபில் கேட்ச் கொடுத்து அவுட்டானார் கேப்டன் ஃபென்டாஸ்டிக். ஃபாஃப் டு ளெஸ்ஸி | PBKS vs RCB கண்டம் முடிந்தது என பஞ்சாப் ரசிகர்களின் பதற்றம்

IPL 2022 – DC Starting 11: இருமுறை தவறவிட்டதை இம்முறை பிடிப்பாரா ரிஷப் பண்ட்? | here is the starting 11 of delhi capitals for ipl 2022

புள்ளிப் பட்டியலின் ஆழத்தில் தேங்கிக் கிடப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கும் அணி டெல்லி கேப்பிடல்ஸ் கடந்த சில சீசன்களுக்குள்ளேயே சென்னை, மும்பைக்கு அடுத்தபடியாக ஐ.பி.எல் அரங்கில் உயர்ந்து காட்சியளிக்கிறது. நிர்வாகத்தின் தெளிவான திட்டமிடல், அனுபவமுள்ள பயிற்சிபட்டறை அதை அப்படியே பிரதிபலிக்கும் இளம் படை என அவர்களின் வெற்றிக்கான காரணத்தைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். மேலும் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கப்போகும் இந்திய கோர் யூனிட்டை அட்டகாசமாக அமைத்திருந்தது டெல்லி. அதை தக்கவைப்பதே இந்தாண்டின் மெகா ஏலம் அந்த அணிக்கான மிகப்பெரிய சவாலாகவும் அமைந்தது. ஆனால் அதை வெற்றிகரமாக சமாளித்து மீண்டுமொரு பலம்பொருந்திய படை டெல்லிக்கு வாய்த்திருக்கிறது. சரி, இப்போது ஸ்டார்டிங்-11ஐ பார்த்துவிடுவோம். Delhi CapitalsSandeep Shetty சத்தமே இல்லாமல்

IPL 2022 – CSK Starting 11: சிஎஸ்கே-வின் புதிய அத்தியாயம்… தோனியின் இடத்தை நிரப்புவாரா ஜடேஜா?

முதல் ஓப்பனராக சந்தேகமே இல்லாமல் ருதுராஜ் கெய்க்வாட். அவரின் புதிய பார்ட்னராக டேவான் கான்வே. 2, 3, 4 எந்த பொஷிஷனிலும் ஆடக்கூடிய திறன், பயிற்சியாளர் ஃபிளெமிங் உடனான பிணைப்பு என சி.எஸ்.கே-விற்கு அனைத்து விதத்திலும் பொருந்திப்போகக்கூடிய கான்வே டூப்ளஸிக்கு எந்த விதத்திலும் குறைவில்லாதவர். மூன்றாவது இடத்தில் விளையாடப்போகும் வீரரையும் யோசனையே இல்லாமல் சொல்லிவிடலாம். மொயின் அலி. 2020-யில் சரித்துப்போயிருந்த அணியை இந்த ஒற்றை வீரரின் வரவு எப்படி மாற்றியது என்பதை நாம் கடந்த ஐ.பி.எல்-யில் கண்கூடாக பார்த்திருப்போம். இன்றைய முதல் ஆட்டத்தில் விளையாடவில்லை என்றாலும் மீதமுள்ள அனைத்து ஆட்டங்களிலும் நிச்சயம் விளையாடுவார் அலி. சி.எஸ்.கே-விற்கு சிறப்பான பங்களிப்பைத் தொடர்ந்து அளித்து வரும் ராயுடுவை பற்றி

IPL 2022 – RR Starting 11: தவறுகளைத் திருத்திக்கொண்ட ராயல்ஸ்… இரண்டாவது கோப்பையை வெல்லுமா?

ஐபிஎல் தொடரின் கடந்த சில சீசன்களில் மிக சுமாரான ஆட்டத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் அணியாக ராஜஸ்தான் ராயல்ஸை சொல்லலாம். ஒவ்வொரு ஐ.பி.எல் அணிக்கும் அதற்கென்று கட்டமைக்கப்பட்ட ஒரு அடையாளம் இருக்கும். அதுதான் அந்த அணியின் பலமாகவும் இருக்கும். ஆனால் அப்படியொரு அடையாளம்தான் ராஜஸ்தான் ராயல்ஸின் பின்னடைவிற்கான காரணமாக தோன்றுகிறது. ஆம், புதுப்புது இளம் திறமைகளை கண்டெடுத்து அதை வளர்த்தெடுப்பதுதான் அந்த அணியின் இத்தனை ஆண்டு கால அடையாமளாக இருந்துவருகிறது. அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறது. ஆனால் போக போக அந்த அடையாளமே அவர்களின் அணி தேர்விலும் காம்பினேஷனிலும் பல்வேறு குழப்பங்களுக்கு வித்திட்டது. Sanju Samson அதை இந்த மெகா ஏலத்தில் மிகச்சிறப்பாக உடைத்தெறிந்திருக்கிறது அந்த

சென்னை சூப்பர் கிங்ஸ்: ஒரு யுகத்துக்கான மாவீரன் – ‘கேப்டன் தோனி’ இல்லாத சிஎஸ்கே இனி எப்படி? | How Chennai Super Kings will fare without Dhoni acting as its Captain?

MS Dhoni | தோனிKBPHOTOGRAPHY தோனியின் இந்த கேப்டன்சி விலகல் அறிவிப்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் இது சிலகாலமாகவே எதிர்பார்க்கப்பட்டதுதான். அதற்கான அறிகுறிகளையும் தோனியே ஆங்காங்கே வெளிப்படுத்திக் கொண்டேதான் வந்திருந்தார். 2020 ஐ.பி.எல் சீசனின் போது பல வீரர்களும் தோனியின் ஜெர்சியை அவரின் கையொப்பத்தோடு நினைவுப்பரிசாக வாங்கி சென்றனர். அப்போது ஒரு போட்டிக்கு பிறகான பேட்டியில், “எல்லாரும் என் ஜெர்சியை வாங்கி செல்கிறார்கள். நான் ஓய்வுபெறப்போகிறேன் என நினைக்கிறார்களோ என்னவோ” என அதற்கெல்லாம் வாய்ப்பில்ல ராஜா என்கிற தொனியில் பேசியிருப்பார். அதே சீசனில்தான் ஓய்வு பற்றிய கேள்விக்கு ‘Undoubtedly not’ என்றும் பதிலளித்திருப்பார். அந்த வார்த்தைகள் அப்போது வைரல் டிரெண்டாகின. ஒய்வு தற்போதைக்கு இல்லை என

“உக்ரைன் குழந்தைகள் மீண்டும் கல்வி பெற…”- ஆதரவு கரம் நீட்டும் ரோஜர் பெடரர்! | Roger Federer to Donate 500,000 dollars to support Ukrainian Children education

உக்ரைனின் போர்க் காட்சிகள் தன்னையும் குடும்பத்தையும் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்குவதாக டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் வருந்தி ட்விட் செய்துள்ளார். எப்போதுமே இயற்கை பேரிடர் என்று வரும் போதெல்லாம் உதவி கரம் நீட்டும் முதல் நபராக இருக்கும் பெடரர், தற்போது உக்ரைனில் 6 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் தாக்கத்தில் இருந்து மீண்டு வர 5 லட்சம் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளார். அவரது ட்விட்டின் தமிழாக்கம் இதோ, “உக்ரைனில் இருந்து வருகிற காட்சிகளால் நானும் என் குடும்பமும் மிகவும் அதிர்ச்சி அடைந்திருக்கிறோம். கடுமையாக பாதிக்கப்படுகிற அப்பாவி மக்களைப் பார்க்கும் போது மனசு உடைந்து போகிறது. அமைதிக்கு துணை நிற்போம். உக்ரைனில் 6 மில்லியனுக்கு அதிகமான குழந்தைகள்

அல்டிமேட் பௌலிங், அசாத்திய ஃபீல்டிங், அய்யோ பாவமான பேட்டிங்… இங்கிலாந்திடம் வீழ்ந்த இந்தியா! | India’s sloppy batting earns defeat against England on World Cup league match

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பூஜாவும் ராணாவும் இணைந்து சாகச இன்னிங்ஸை ஆடி அணியை காப்பாற்றியிருந்தனர். நியூசிலாந்துக்கு எதிராக அந்த ரோலை ஹர்மன்ப்ரீத் கவுர் செய்து கௌரவமான தோல்வியை பெற்றுக் கொடுத்தார். வெஸ்ட் இண்டீஸிற்கு எதிராக ஹர்மன்ப்ரீத் கவுருடன் ஸ்மிருதி மந்தனாவும் இணைந்து கலக்கினார். யாரோ ஓரிருவர் அசாத்தியமான இன்னிங்ஸ்களை ஆடி மேஜிக்குகளை நிகழ்த்தினால் மட்டுமே இந்திய அணியின் பேட்டிங் வலுவானதாகத் தெரிகிறது. மேஜிக்குகள் ஒவ்வொரு முறையும் நிகழ்வதில்லையே. அந்த ஓரிருவரும் சொதப்பும்போது இந்திய அணி மொத்தமாக சொதப்பி விடுகிறது. இன்று இங்கிலாந்துக்கு எதிராகச் சொதப்பியிருப்பதை போல! 18 லிருந்து 28 ரன்களை எட்டுவதற்குள் யஸ்திகா, மிதாலி, தீப்தி என டாப் ஆர்டர் மொத்தமும் க்ளோஸ். 61

விளையாட்டு களத்திலேயே போருக்கு ஆதரவு தெரிவித்த ரஷ்ய வீரர்; நடவடிக்கை எடுக்கப்படுமா? gymnast supports Russia’s war on Ukraine in the sporting field

உலகமே ரஷ்யா- உக்ரைன் போரை தான் உற்றுநோக்கி வருகிறது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு உலகநாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்க சர்வதேச விளையாட்டு அரங்கிலும் இது குறித்தான நடவடிக்கைகள் பலவும் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் போருக்கு ஆதரவாக விளையாட்டு வீரர் ஒருவர் களத்திலேயே ஆதரவு தெரிவித்துள்ளது உலக அளவில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய வீரர் கத்தார் நாட்டின் தோகாவில் உலக கோப்பை நடைபெற்று நடைபெற்றன. இதில் உக்ரைன் நாட்டை சேர்ந்த இலியா கோவ்டுன் தங்கமும் கசாகஸ்தான் நாட்டை சேர்ந்த மிலாட் கரிமி வெள்ளியையும் வென்றார். மூன்றாம் இடம்பிடித்து வெண்கல பதக்கத்தை வென்றவர் ரஷ்யாவை சேர்ந்த குலியாக். போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்து பதக்கம் வழங்கும்

Ranji Trophy: உச்ச ஃபார்மில் சர்ஃபராஸ் கான்… இந்திய மிடில் ஆர்டருக்கான மற்றுமொரு சாய்ஸா? | Sarfaraz Khan: the rising star of Indian red ball cricket

Sarfaraz Khan | சர்ஃபராஸ் கான் அதன் பின்னர் 2014-ம் ஆண்டு விஜய் ஹசாரே தொடரில் மும்பை அணிக்கு விளையாடியது, 2014, 2016 என இரண்டு U19 உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட்டது எனப் பல்வேறு வாய்ப்புகள் சர்ஃபராஸை தேடி வந்தன. இரண்டு உலகக்கோப்பையையும் சேர்த்து சர்ஃபராஸ் அடித்துள்ள 7 அரைசதங்களே U-19 உலக கோப்பை வரலாற்றில் அடிக்கப்பட்ட அதிக எண்ணிக்கை. அதேபோல 2014-ம் ஆண்டிலிருந்து மும்பைக்காக ரஞ்சி கிரிக்கெட் தொடரிலும் ஆட தொடங்கினார் சர்ஃபராஸ். ஆனால் அதில் பெரிய அளவில் நிரூபிக்க இயலாமல் போக, அவர் தந்தை அளித்த அறிவுரையின் பெயரில் உத்திரப் பிரதேச அணிக்காக விளையாடச் சென்றார். Source link

IND vs SL: ஸ்பின்னர்களிடம் அடிபணிந்த இலங்கை; கேப்டன் ரோஹித் ஜடேஜாவை வைத்து போட்ட பிளான்! | India’s massive victory over Srilanka. Spinners made it too easy

இன்னொரு பக்கம் பேட்டிங்கில் 175 ரன்கள், இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து பௌலிங்கில் 9 விக்கெட்டுகள் என தன் டெஸ்ட் கரியரின் மிகச் சிறந்த போட்டியாக ஜடேஜாவிற்கு இந்த ஆட்டம் அமைந்தது. 2017-ம் ஆண்டிற்கு பிறகான ஜடேஜாவின் பேட்டிங் என்பது மேல் நோக்கியே பயணித்து வருகிறது. இதையே தான் கேப்டன் ரோஹித்தும் கூறினார். “ஒவ்வொரு போட்டியிலும் தன் ஆட்டத்தில் முன்னேற்றம் கண்டு வருகிறார் ஜடேஜா. வெற்றிக்கான தீர்க்கமுடியாத பசி அவரிடம் உள்ளது. அப்பசிதான் விளையாட்டு வீரர்களை முன் நகர்த்திச் செல்லும் ஒன்றாகும்” என்று கூறிய ரோஹித், ஜடேஜாவின் பேட்டிங்கால் அணிக்கு ஏற்படும் பேலன்ஸ் பற்றியும் பேசியுள்ளார். “டி20 தொடரின் போதும் பேட்டிங் ஆர்டரில் மேலே ஆடுகிறாயா என்று

1 2 3 9
Live Updates COVID-19