bharat bandh: 2 நாள் ‘பாரத் பந்த்’: பேருந்து இயங்காததால் மக்கள் அவதி! – two days nationwide strike bharat bandh start people suffering in koyambedu bus stand

மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் நடத்தும் 2 நாள் வேலைநிறுத்த போராட்டம் இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது. இதில், சி.ஐ.டி.யு, எச்.எம்.எஸ், ஐ.என்.டி.யு.சி,எல்.பி.எப், ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட தொழிற் சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கிறது. நாடு முழுவதும் சுமார் 20 கோடி அமைப்புசாரா தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்பார்கள் என கூறப்பட்டுள்ளது.பொதுத்துறை நிறுவனங்களை தனியார் வசம் ஒப்படைக்கக்கூடாது, வருமானவரி செலுத்தாத அனைத்து குடும்பத்திற்கு மாதம் ரூ.7500, பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வரி குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படுகிறது. வங்கிகள், மின்சாரம், காப்பீடு, நிலக்கரி, ஸ்டீல், தொலைதொடர்பு, தபால், எண்ணெய், வருமான வரித்துறை என பல்வேறு துறைகளில் செயல்பட்டு வரும்

Dhanush:தனுஷ், ஐஸ்வர்யாவை சேர்த்து வைக்க களத்தில் இறங்கிய ‘வி.ஐ.பி.’ – a vip tries his level best to bring dhanush, aishwarya rajinikanth together

தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். 18 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த அவர்கள், தாங்கள் பிரிவதாக ஜனவரி மாதம் 17ம் தேதி அறிவிப்பு வெளியிட்டனர்.இதையடுத்து தனுஷையும், ஐஸ்வர்யாவையும் சேர்த்து வைக்க இரு வீட்டாரும், நண்பர்களும் முயற்சி செய்தார்கள். ஆனால் அவர்களின் முயற்சி தோல்வி அடைந்துவிட்டது. இந்நிலையில் எங்க அப்பா, அம்மாவை நான் சேர்த்து வைக்கிறேன் என்று களத்தில் குதித்துள்ளாராம் மூத்த மகன் யாத்ரா. அவருக்கு 15 வயது தான் என்றாலும், ரொம்ப தெளிவாக, மெச்சூராக பேசுவாராம். நேரம் கிடைக்கும்போது எல்லாம் அப்பா தனுஷ் பற்றியே அம்மாவிடம் பேசிக் கொண்டிருக்கிறாராம் யாத்ரா. ஆனால் தனுஷ் பற்றி யாத்ரா பேச்சு எடுக்கும்போது எல்லாம் அவரின் கவனத்தை

Chennai airport: காஞ்சியில் இரண்டு ஆண்டுகளுக்கு பின் தொடங்கிய பன்னாட்டு சேவை! – international service at chennai airport was fully operational after two years

உலகத்தில் கொரோனா தொற்று பரவியதை தொடர்ந்து கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தியாவில் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமான சேவை முடக்கப்பட்டது. பின்னர் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களை அழைத்து வர வந்தே பாரத் திட்டத்தில் விமான சேவைகள் இருந்தன. பின்னர் 2020ம் ஆண்டு மே மாதம் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட்டது. ஆனால் தினமும் 100க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்பட்ட பன்னாட்டு சேவைக்கு அனுமதி வழங்கப்படவில்லை. சிறப்பு விமானங்கள் சிங்கப்பூர், லண்டன், துபாய், குவைத், கொழும்பு, சார்ஜா, அபுதாபி போன்ற நகரங்களுக்கு 30 விமான சேவைகள் இருந்தன. 3 வது அலையும் முடிந்த நிலையில் மார்ச் 26ந் தேதி பிறகு கொரோனா கட்டுபாட்டு

PTR Palanivel Thiagarajan: பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் பதவிக்கு ஆபத்து? – ஆளுநருக்கு பறக்கும் ரிப்போர்ட்! – sources says tn bjp president k annamalai planning to give complaint to governor ravi about dmk ministers

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் பட்ஜெட்டை, தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை கடுமையாக விமர்சித்து உள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, அண்மையில், சட்டப்பேரவையில், தாக்கல் செய்த 2022 – 2023 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில், தமிழக பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. “மக்களை ஏமாற்றிய திமுக பட்ஜெட்” என்ற பெயரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை பேசியதாவது:மத்திய அரசின் திட்டங்களை பெயர் மாற்றி, அதுக்கு புதுசா ஒரு பெயரை வைத்து திமுக அரசு அறிவித்து கொண்டிருக்கிறது. இந்த பட்ஜெட்டை, தமிழக பட்ஜெட் என்று சொல்வதை

1 rupee gold: 1 ரூபாய்க்கு தங்கம் வாங்கலாம்.. அட்டகாசமான வாய்ப்பு! – chance to buy gold for even one rupee know this amazing gold buying facility in mobile apps

தங்கம் விலை உயர்வு என்பது இந்தியாவில் நீண்ட காலமாகவே பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை 38,000 ரூபாயைத் தாண்டிவிட்டது. வசதி படைத்தவர்கள் மட்டுமே தங்கம் வாங்க முடியும் என்ற நிலைமை வந்துவிட்டது. ஆனால் சாமானிய மக்கள் கூட தங்கத்தை வாங்க முடியும். அதற்கான சிறப்பு வசதி உள்ளது. அதிகம் செலவு செய்வது மொத்தமாக பெரிய விலை கொடுத்து, தங்கம் வாங்குவதற்குப் பதிலாக மிகச் சிறிய பணத்தில் தங்கம் வாங்கும் வசதி வாடிக்கையாளர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. தங்கத்தை பெரிய விலை கொடுத்து நேரடியாக வாங்குவது சாதாரண மக்களுக்கு கடினமான விஷயம்தானே. அதற்காகவே டிஜிட்டல் தங்கம் உள்ளது.இந்த வசதியைப் பயன்படுத்தி வெறும்

annamalai video: அண்ணாமலை வீடியோ?… பகீர் கிளப்பும் எழுத்தாளர்! – writer surya xavier told they have one video about tn bjp president annamalai

தமிழ் இலக்கிய வளர்ச்சி மற்றும் தமிழ்ச் சமூகத்திற்குத் தொண்டாற்றியவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கத்தில் அண்மையில் நடைபெற்றது.இதில், சொல்லின் செல்வர் விருது எழுத்தாளர் சூர்யா சேவியருக்கு வழங்கப்பட்டது.இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார், குறிப்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து அவர் பகீர் தகவலை தெரிவித்தார். திமுக பணிந்து போக வேண்டுமென்று அண்ணாமலை விரும்புவதாக தெரிகிறது. அது ஒருபோதும் நடக்காது. அண்ணாமலைதான் கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டும். அண்ணாமலை எதற்கும் பதில் சொல்லமாட்டார். மாறாக எதையாவது உளறிவிட்டு போவதை அவர் வாடிக்கையாக கொண்டுள்ளார். அரியலூர் மாணவி தற்கொலை குறித்து ட்விட்டரில் அண்ணாமலை சர்ச்சைப் பதிவு செய்தார். அவரது கருத்து

home loan: குறைந்த விலையில் சொந்த வீடு.. எஸ்பிஐ எடுத்த அஸ்திரம்! – sbi partners with housing finance companies to provide affordable home loans

குறைந்த விலையில் வீடு வாங்க திட்டமிட்டிருப்போருக்காகவே மலிவு விலை வீடுகளை விற்பனை செய்ய எஸ்பிஐ (State Financial institution of India) வங்கி ஐந்து ஹவுசிஸ் பைனான்ஸ் நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐக்கு 45 கோடிக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்நிலையில், மலிவு விலையில் வீடு விற்பனை செய்ய பிஎன்பி ஹவுசிஸ் பைனான்ஸ், ஐஐஎஃப்எல் ஹோம் பைனான்ஸ், ஸ்ரீராம் ஹவுசிங் பைனான்ஸ், கேப்ரி குளோபல் ஹவுசிங் பைனான்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் எஸ்பிஐ வங்கி கூட்டணி அமைத்துள்ளது.இதன்படி, குறைந்த விலையில் சிறு வீடுகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு உதவுவதற்காக இந்தக் கடன் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக எஸ்பிஐ வங்கியின் தலைவர் தினேஷ் குமார் காரா தெரிவித்துள்ளார்.

bsnl employees: மத்திய அரசு சொன்ன குட் நியூஸ்.. BSNL ஊழியர்கள் மகிழ்ச்சி! – bsnl employees are happy with govts comment on bsnl stake sale

நஷ்டத்தில் இயங்கி வரும் அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் இக்கட்டான நிலையில் இயங்கி கொண்டிருக்கிறது. இதைத் தனியார் வசம் ஒப்படைக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் பரவின. இதனால் அந்நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது. இந்நிலையில் பிஎஸ்என்எல் மீதான தனது நிலைப்பாட்டை மத்திய அரசு தற்போது வெளிப்படையாகத் தெரிவித்துள்ளது. பங்கு விற்பனைக்கான எந்தத் திட்டமும் அரசிடம் இல்லை எனவும், நிறுவனத்தின் பங்குகளை அரசு திரும்பப் பெறுவது குறித்து பரிசீலிக்கப்படவில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை தொலைத்தொடர்பு அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.மக்களவையில் இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, தொலைத்தொடர்புத் துறை இணை அமைச்சர் தேவுசின் சவுகான் பதிலளிக்கையில், பிஎஸ்என்எல் நிறுவனத்தின்

anbumani ramadoss: திருமா எழுப்பிய கேள்வி… மத்திய, மாநில அரசுகளுக்கு அன்புமணி வெயிட் கோரிக்கை! – anbumani ramadoss demands to central and state govt on tollgate count reduction in tamil nadu

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தற்போது நடைபெற்றது. இதில் ,சிதம்பரம் தொகுதி எம்பியான தொல். திருமாவளவன் மக்களவையில் அண்மையில் பேசியபோது, ‘தமிழகத்தில் விதிகளை மீறி சுங்கச்சாவடிகள் செயல்படுகின்றன’ என்று குற்றம்சாட்டினார்.அவரது குற்றச்சாட்டுக்கு மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அளித்த விளக்கத்தில் ‘தேசிய நெடுஞ்சாலை விதிகள் 2008 சட்டப்படி 60 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி இருக்கலாம். இதனால் தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கிலோ மீட்டர் தொலைவுக்கு குறைவாக செயல்படும் சுங்கச்சாவடிகள் மூடப்படும். மேலும், 60 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி மட்டுமே இயங்க அனுமதிக்கப்படும். அந்த தொலைவிற்குள் இன்னொரு சுங்கச்சாவடி இருந்தால் அவை அடுத்த மூன்று மாதங்களுக்குள் அகற்றப்படும்’ என்று

bank strike: வங்கி ஊழியர்கள் ஸ்ட்ரைக்.. வாடிக்கையாளர்களுக்கு அலர்ட்! – bank employees strike on march 28th and 29th services will be affected for 4 days

மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்து மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தவிருக்கின்றனர். இதனால் நான்கு நாட்களுக்கு தொடர்ந்து வங்கிகள் மூடப்பட்டிருக்கும். வங்கி சட்டங்கள் திருத்த மசோதா 2021 மற்றும் பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் திட்டத்தை எதிர்த்து மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தவிருப்பதாக வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் வங்கி ஊழியர்கள் ஸ்ட்ரைக் நடத்தினாலும், மார்ச் 26, 27 தேதிகளிலும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். மார்ச் 26ஆம் தேதி நான்காம் சனிக்கிழமைக்காக நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். மார்ச் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை

1 2 3 53
Live Updates COVID-19