பொருளாதார சிக்கல் -இலங்கை நிதியமைச்சருடன் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு

இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்சேவை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். கொழும்பில் நடந்த இந்த சந்திப்பு குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜெய்சங்கர், இலங்கையின் பொருளாதார நிலவரம் குறித்து பசில் ராஜபக்சவுடன் விவாதித்ததாக தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது இலங்கைக்கு இந்தியா செய்து வரும் உதவிகள் குறித்தும் பேசப்பட்டதாக ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மேலும், நட்புறவில் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற வெளியுறவுக் கொள்கையை இந்தியா தொடர்ந்து பின்பற்றும் என்றும் அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். இப்பயணத்தின்போது இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரிஸ், எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆகியோரையும் ஜெய்சங்கர் சந்திக்க உள்ளார். தமிழர் கட்சிகளின் தலைவர்களையும் ஜெய்சங்கர் சந்திப்பார் என்று தெரிகிறது. இலங்கையில் பிம்ஸ்டெக் நாடுகளின் கூட்டம்

தமிழக அரசு தாராள மனதை காட்ட வேண்டும்: தமிழிசை வலியுறுத்தல்..!

புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்திற்கு தமிழக அரசு தாராளமாக நிலம் வழங்க வேண்டும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.  Source link

‘உள்ளூர் பொருட்களை உலகம் முழுவதும் கொண்டு செல்வோம்’ – மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வேண்டுகோள் | Mann ki Baat | PM Modi pitches for ‘local for global’ in the 87th edition

புதுடெல்லி: உள்ளூர் பொருட்களை உலகம் முழுவதும் கொண்டு செல்வோம், நமது உற்பத்திகளின் செல்வாக்கை மேலும் அதிகரிப்போம் என்று அறைகூவல் விடுத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. பிரதமர் நரேந்திர மோடி அகில இந்திய வானொலியில், ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமையில், ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சி வழியே மக்களுடன் உரையாடி வருகிறார். அதன்படி, 87 வது முறையாக அவர் இன்று நாட்டு மக்களுடன் உரையாடினார். அந்த உரையில் அவர், “கடந்த வாரத்தில் நாம் ஒரு சாதனையைப் படைத்திருக்கிறோம். இந்தியா கடந்த வாரத்தில் 400 பில்லியன் டாலர், அதாவது, 30 இலட்சம் கோடி ரூபாய் என்ற ஏற்றுமதி இலக்கை எட்டியிருக்கிறது. முதன்முறையாகக் கேள்விப்படும் போது இது ஏதோ

“பாஜக முஸ்லிம் சமூகம் மீது அன்பைப் பொழிகிறது..!” – யோகி 2.0-வின் இஸ்லாம் அமைச்சர் பேட்டி | BJP is getting love of Muslim society now: Muslim minister in UP govt

உத்தரப்பிரதேசத்தில் நடந்த முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றிபெற்ற பா.ஜ.க., இரண்டாவது முறையாக யோகி ஆதித்நாத் தலைமையில் ஆட்சி அமைத்திருக்கிறது. இந்தமுறை யோகி அமைச்சரவையில் முஸ்லிம்களின் முகமாக இருந்த அமைச்சர் மகசின் ராஜாவுக்கு பதிலாக டேனிஷ் ஆசாத் அன்சாரி என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆசாத் அன்சாரி சட்டமன்றத் தேர்தலில் தீவிரமாக பணியாற்றிய பிறகு முசோரியில் ஓய்வில் இருந்த 33 வயதான டேனிஷ் ஆசாத் அன்சாரி, லக்னோ திரும்பி வந்த பிறகு எந்த தகவலும் இல்லாமல் திடீரென யோகி ஆதித்யநாத் தலைமையிலான புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார். இவருக்கு மாநில சிறுபான்மையினத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. 2011-ல் அவர் ஆர்.எஸ்.எஸ்-ஸின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்

பள்ளி மாணவர்களுக்கு இடையே தகராறு! உதவிக்கு வந்த இளைஞர் சுட்டுக்கொலை!

டெல்லியில் இரு பள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவனுக்கு உதவியாக வந்த இளைஞர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். தென்மேற்கு டெல்லியின் துவாரகா பகுதியில் உல்ள 16ஏ பிரிவில் உள்ள பள்ளிக்கு வெளியே இரு மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சண்டையிட்டு கொண்டிருந்த ஒரு மாணவன், உதவிக்கு அவனது நண்பனை அழைத்துள்ளார். அவரும் சண்டைக்குள் நுழைய மற்றொரு மாணவன் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து உதவிக்கு வந்த இளைஞனை சுட்டுள்ளார். ரத்தம் வெளியேறியபடி இளைஞர் சுருண்டுவிழ, சண்டையிட்ட இருவரும் தப்பி ஓடிவிட்டனர். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் இளைஞரை ஆம்புலன்சில் அனுப்பி வைத்துவிட்டு, காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். தாரக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இளைஞர் ஏற்கனவே

பாலியல் தொல்லை கொடுத்து குழந்தையைக் கொன்ற பெரியப்பா கைது | Bangalore 2yr Old Child Been Raped By Relative

கர்நாடகாவிலுள்ள பெங்களூரு புறநகர் மாவட்டமான அத்திபள்ளி அமைந்துள்ளது. அத்திபள்ளி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நெரலூர் கேட் பகுதியில் தீபு என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தீபுவின் உடன் பிறந்த தம்பி தொட்டபள்ளாப்புராவில் வசித்து வந்துள்ளார். தீபுவின் தம்பிக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது.  இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தொட்டபள்ளாப்புராவுக்கு வந்த தீபு, தனது தம்பியின் குழந்தையை நெரலூர் கேட்டிலுள்ள தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.  மேலும் படிக்க | விருதுநகர் பாலியல் வழக்கு: இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்-சீமான்! அப்போது அந்த குழந்தையை தீபு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அந்த பாலியல் வன்புறுத்தலின்போது குழந்தை பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 

மார்ச் 31 முற்பகல் 11 மணிக்கு வீடுகளில் மணியோசை எழுப்புங்கள்: புதிய வகை போராட்டத்துக்கு காங்கிரஸ் அழைப்பு | Ring Bells, Drums At 11 am This Thursday: Congress’s New Campaign

புதுடெல்லி: தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மார்ச் 31-ம் தேதி, வீடுகளிலும் வீதிகளிலும் 11 மணியளவில் மேளம், மணிகள் முழங்கும் புதிய வகைப் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து ஆளும் பாஜக அரசை காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது. மேலும், வரும் வியாழக்கிழமை பெட்ரோல், விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜோவாலா கூறியது: “எரிபொருள்கள் விலை உயர்வால் அவதிப்படும் மக்களின் அவல நிலைமை மாற்றப்பட வேண்டும். மத்திய பாஜக அரசு, கடந்த 8 ஆண்டுகளில் பெட்ரோலுக்கான

`இயற்கை வேளாண்மையில் சிறந்த கிராமம்’ விருது; கேரளாவின் கொட்டுவள்ளி சாதித்தது எப்படி? | Kottuvally village chosen as the best organic farming panchayat in kerala

இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க கிராமத்தில் உள்ள அனைவரையும் வேளாண்மைத் துறை அலுவலர்கள் மற்றும் இதர அலுவலர்கள் பொக்காலி நெல் சாகுபடி செய்வதை ஊக்குவித்துள்ளனர். அதேபோன்று காய்கறிகளை வீட்டுத்தோட்டத்தில் வளர்ப்பதையும் ஊக்குவித்துள்ளனர். விவசாயிகள், அரசு வேளாண்மை துறையினர், கிராம மக்கள் என அனைவரும் இயற்கை  விவசாயத்தை மேம்படுத்த ஒருங்கிணைந்த அணுகுமுறைகளை மேற்கொண்டனர். தொடர்ந்து இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும், இயற்கை விவசாயத்தில் விளைந்த பொருட்களைச் சந்தைப்படுத்தவும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.  இயற்கை விவசாயம் (File Pic) மாவட்டத்தில் காய்கறி சாகுபடியில் சிறந்த முறைகளை கடைப்பிடித்த சிறந்த தனியார் நிறுவனமாக  கூனம்மாவு செயின்ட் ஜோசப் ஆண்கள் விடுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது. காய்கறிகளை பயிரிடும் சிறந்த கல்வி நிறுவனமாக சாவர தர்ஷன்

2014-க்கு பிறகு ஆயுதங்கள் ஏற்றுமதி 6 மடங்கு அதிகரிப்பு – இணையமைச்சர் அஜய் பட் தகவல்

இந்தியாவின் ஆயுதங்கள் ஏற்றுமதி 7 ஆண்டுகளுக்குப் பிறகு 6 மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு நடப்பு நிதியாண்டின் இதுவரை 11,607 கோடி ரூபாய் மதிப்பில் ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இதற்கு நடப்பு நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகளே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 2025ஆம் ஆண்டிற்குள் 36,500 கோடி ரூபாய் அளவுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM Source link

Inflation news, Prices of 800 essential medicines set to rise | பாராசிட்டமால் உட்பட 800 மருந்துகளின் விலை உயர்கிறது

புதுடெல்லி: பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டருக்கு அடுத்தபடியாக மருந்துகளின் விலையும் உயர்ந்துள்ளது. ஏப்ரல் முதல், 800க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை, 10 சதவீதம் வரை நேரடியாக உயர்த்தப்பட உள்ளது. காய்ச்சல், இதய நோய், உயர் இரத்த அழுத்தம், தோல் நோய்கள் மற்றும் இரத்த சோகை சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகளும் இதில் அடங்கும். உணவுப் பொருட்களின் விலையும் உயரும்!பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான நகரங்களில் பெட்ரோல் ஏற்கனவே 100ஐத் தாண்டிவிட்டதால், தொடர்ந்து அதிகரித்து வருவது சாமானியர்களுக்குப் பிரச்சனையாகிவிட்டது. தொடர்ந்து டீசல் விலை உயர்வால் உணவுப் பொருட்களின் விலையும் வரும் நாட்களில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், பணவீக்கம் மருந்து பொருட்களையும்

1 2 3 81
Live Updates COVID-19