cuddalore bank strike: இந்த வாரத்தில் 2 நாள் மட்டுமே வங்கி சேவை… வெளியான ஷாக் நியூஸ்! – banking services will available only two days this week due to strike by bank employees in cuddalore

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கக்கூடாது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், வங்கிகளிலுள்ள வாராக்கடன்களை வசூலிக்க வேண்டும், ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர் சங்கங்கள் சார்பில் இன்று மற்றும் நாளை, இரண்டு நாட்கள் பொது வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள பொதுத்துறை வங்கி முன்பு கடலூர் மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டு நாள் பாரத் பந்த்: கடலூரிலிருந்து வெளியூர் பேருந்துகள் கிடைக்குமா? மேலும் இந்த வேலைநிறுத்தம் காரணமாக இந்த வாரத்தில் 30, 31ஆம்

ugc: கல்லூரி மாணவர் சேர்க்கை… மாநிலங்களுக்கு யுஜிசி செக்! – university grants commission advice to all state universities over common eligibility test for student admission in ug courses

மத்தியப் பல்கலைகழகங்கள் அனைத்திலும் பொது நுழைவுத் தேர்வு (CUET) மூலம் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெறும் என யுஜிசி அண்மையில் அறிவித்திருந்தது. தேசிய தேர்வு முகமை இந்த தேர்வை நடத்தும் எனவும் தெரிவிக்க்பபட்டுள்ளது.இந்த நிலையில், மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களும், பொது நுழைவுத்தேர்வு தரவரிசைப பட்டியலின் அடிப்படையிலேயே வரும் கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. மாணவர்களுக்கு சம வாய்ப்பு அளிக்க ஏதுவாக இந்த பொது நுழைவுத் தேர்வை நடத்த உயர் கல்வி நிறுவனங்கள் முன்வர வேணடும் என்று யுஜிசி கேட்டு கொண்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், கல்லூரிகளின்

tn budget for environment: தமிழக பட்ஜெட்டில் சுற்றுச்சூழல் சார்ந்த அறிவிப்புகள் என்னென்ன? – list of announcements for environment, climate change, forest in tn budget 2022-23 by minister palanivel thiagarajan

தமிழக பட்ஜெட் 2022-23ஐ சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். அதில் பல்வேறு துறை சார்ந்த அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனம் தொடர்பாக 7 முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அதாவது,1 – பல்லுயிரினங்களின் இருப்பிடங்களாக, பொதுமக்களின் பொழுதுபோக்கு மையங்களாக தாவரவியல் பூங்காக்கள் திகழ்கின்றன. இதனை கருத்தில் கொண்டு லண்டன் க்யூ பூங்கா (Kew Gardens) அமைப்புடன் இணைந்து 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னைக்கு அருகில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படும். இதற்கான விரிவான திட்ட அறிக்கை நடப்பாண்டு தயாரிக்கப்படும். 2 – காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும், இடர் தணிக்கும் திட்டங்கள் மற்றும் பசுமையாக்கும் திட்டங்களுக்கு போதிய

cryptocurrency news today: Cryptocurrency Latest Update: டாப் லிஸ்டில் 600% மேல் உயர்ந்த எலோ இனு காயின்!! – cryptocurrency news today 27-03-22 – elo inu coin top performer of the day

கிரிப்டோகரன்சி மார்க்கெட்டில், இன்று காலை நிலவரப்படி பிட்காயின் மற்றும் மற்ற ஆல்ட்காயின்களும் 1.64% உயர்வுடன் காணப்படுகின்றன. கிரிப்டோவின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பானது 2.02 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கிரிப்டோவின் மொத்த மதிப்பு 61.89 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. டாப் 5 காயின்கள்!1. எலோ இனு (Elo Inu) – 0.00000009619 டாலர் (627.00%)2. மூன்சீர் (Moonseer) – 0.0001981 டாலர் (367.52%)3. கிரிப்டோ டேக்ஸ் டோக்கன் (CTAX) – 0.007236 டாலர் (207.56%)4. ஜிக் டாக் (Zik speak) – 0.02642 டாலர் (202.60%)5. கேமர்ஸ் (Gamerse) – 0.0009141 டாலர் (191.78%) கடைசி 5 காயின்கள்! 1. டிபிகே

mgnrega budget: 100 நாள் வேலை திட்டம்.. பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீடு! – rupees 2800 crore allocated for mgnrega scheme in tamil nadu budget

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2022-23 நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். இதில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. மிக முக்கியமாக, ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 100 நாள் வேலைத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடும் இருந்தது. 100 நாள் வேலைத் திட்டம் என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு ரூ.2,800 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது அத்திட்டத்தின் ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 100 நாள் வேலைத் திட்டத்தில் சம்பளப் பிரச்சினை பரவலாக இருப்பதால் அதைச் சரிசெய்யும் வகையில் இந்த நிதி ஒதுக்கீடு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில்

tv actress bairavi: பாலியல் தொழில் செய்ய சொல்கிறார்… தாலிக்கட்டிய தயாரிப்பாளர் மீது டிவி நடிகை பகீர் புகார்! – tv actress complaint on a producer

சின்னத்திரை நடிகை பரமேஸ்வரி என்கிற பைரவி. இவர் பன்னாட்டு பெண்கள் அமைப்பு தலைவர் செங்கொடி பாலகிருஷ்ணன் உதவியுடன் சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில் தான் கணவர் இல்லாமல் குழந்தைகளுடன் வசித்து வரும் தான் சின்னத்திரையில் நடிகையாக இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் தனக்கு வேலூரை சேர்ந்த ராஜதேசிங் என்கிற சுப்பிரமணி தயாரிப்பாளர் என அறிமுகமானதாகவும், தன்னையும் தயாரிப்பாளர் ஆக்குவதாக ஆசைக்காட்டி கோவிலில் வைத்து கட்டாய தாலி கட்டி மனைவியாக்கிக் கொண்டதாகவும் கூறியுள்ளார். மேலும் தன்னை மிரட்டி பலமுறை உறவு கொண்டதாகவும் கூறியுள்ளார். என்ன ஒரு எமோஷனல் மாஸ் எண்டெர்டெய்னர்.. ஆர்ஆர்ஆர் படத்தை பாராட்டிய தள்ளிய விஜய் பட இயக்குநர்! தற்போது கட்டிய மனைவி என்றும்

start up budget: ஸ்டார்ட் அப் நிறுவனங்களை வளர்க்கும் தமிழக பட்ஜெட்! – special announcements for tamil nadu startup companies in tn budget today 18th march

இன்று தாக்கல் செய்யப்பட்ட 2022-23 நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் ஸ்டார்ட் அப் (புத்தொழில்) நிறுவனங்களுக்கான சிறப்பு அறிவிப்புகள்: >> ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தமிழகத்தில் தழைத்தோங்க ஒரு விரிவான கொள்கையை தமிழக அரசு வகுத்துள்ளது. >> தமிழ்நாட்டைச் சார்ந்த புத்தொழில் நிறுவனங்களில் பங்கு முதலீடு செய்வதற்கு 50 கோடி ரூபாயை வளர்ந்து வரும் தொழில்களுக்கான தொடக்க நிதிக்கு அரசு வழங்கும். >> தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் (TANSIM) வாயிலாக ஈரோடு, மதுரை, திருநெல்வேலியில் புதிய மண்டல அளவிலான புத்தொழில் மையங்கள் ஏற்படுத்தப்படும். >> சென்னை நந்தம்பாக்கத்தில் ரூ.75 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன்கூடிய மாநில புத்தொழில் நிறுவன மையம் ஒன்று அமைக்கப்படும். அரசு

tirunelveli dog grave: நாய்க்கு கட்டப்பட்ட கல்லறை; தாயை இழந்து தவிக்கும் குட்டி! – owners have built a grave for a dead dog in tirunelveli

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு, சிதம்பரபுரம் நாராயணசுவாமி கோயில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகநயினார் (56). லாரி டிரைவர். இவரது மனைவி பாக்கிய லட்சுமி. தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். பக்கத்தில் இருந்தவரை கூட மறந்து விட்டேன்; ஆர் ஆர் ஆர் குறித்து பெண் ரசிகர்! இந்த தம்பதி வீட்டில் கிளி, புறா உள்ளிட்ட பறவைகள், மீன்கள் வளர்த்து வருகின்றனர். கேரளாவில் இருந்து வந்த பொமோரியன் வகை நாய் ஒன்றையும் கடந்த 2009ம் ஆண்டு முதல் தம்பதி குடும்பத்தில் ஒருவரை போல வளர்த்து வந்தனர். இந்த நாய்க்கு பொம்மி என்ற பெயர் சூட்டி கடந்த 13 ஆண்டுகளாக பராமரித்து வந்தனர். போதையில் தினமும் நுழையும் கும்பல்; 2 மாதமாக..

Future Capital டு IDFC First bank; உருவாகக் காரணமாக இருந்த அந்த ஓர் விமானப் பயணம்! – 4 | how did vaidyanathan turn future groups into IDFC first bank through his gritty moves

நிறுவனங்களில் வளர்ச்சிப் பாதையில் நடக்கும் சில சம்பவங்கள் அதற்கு திருப்புமுனையாக அமைவது போல, சில தனிமனிதர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களும் சில நிறுவனங்களுக்குத் திருப்புமுனையாக அமைந்துவிடுகின்றன. அப்படிப்பட்ட தனிமனிதர்தான் வி.வைத்தியநாதன். அவர் ஆரம்பித்த ஃப்யூச்சர் கேப்பிடல் நிறுவனம், கேப்பிடல் ஃபர்ஸ்ட் நிறுவனமாக மாறிய திருப்புமுனை கதையை இந்த வாரம் பார்ப்போம். கடந்த சில ஆண்டுகளாகவே அடிக்கடி செய்திகளில் அடிபடுபவர் வி.வைத்தியநாதன். ஐ.டி.எஃப்.சி பர்ஸ்ட் வங்கியின் நிர்வாக இயக்குநர். கடந்த பிப்ரவரியில் இவருடைய ஐந்து பணியாளர்களுக்கு 9 லட்சம் பங்குகளைப் பரிசாக வழங்கி ஆச்சர்யப்படுத்தினார். கடந்த ஆண்டு மே மாதம் 4.5 லட்சம் பங்குகளை மூவருக்கு வழங்கி மீண்டும் மீடியாவின் கவனத்தை இழுத்தார். 2020-ம் ஆண்டு தன்னுடைய

tn budget for business: தொழில்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு? பட்ஜெட்டில் பிடிஆர் அறிவிப்பு! – budgetary allocation and announcements for industries and businesses in tn budget 2022-23

2022-23ஆம் நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட் அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் தொழில்கள் சார்ந்த முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார். நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் பட்ஜெட் உரையில், “2030 ஆம் ஆண்டில் 100 பில்லியன் டாலர் என்ற ஏற்றுமதி இலக்கை தமிழ்நாடு அடைய, முதலமைச்சர் அவர்களால் செப்டம்பர் 2021 இல் தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கை வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் பொருட்டு, தமிழ்நாட்டில் ஏற்றுமதி நிறுவனங்களுக்குத் தேவையான பொதுக் கட்டமைப்புகளை உருவாக்க 100 கோடி ரூபாய் சிறப்பு நிதி உருவாக்கப்படும்.தொழிற்சாலைகள், தொழில் கூட்டமைப்பினர் பங்களிப்புடன், திறன்சார்ந்த மையங்கள், பரிசோதனை மையங்கள், ஏற்றுமதி கிடங்குகள், உள்நாட்டுக்

1 2 3 33
Live Updates COVID-19