Surya and Bala movie heroine announcement – தமிழ் News

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் பாலா இயக்கும் ’சூர்யா 41’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியதாக சூர்யா அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம் . மேலும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருப்பதாகவும் பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்ய இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் நாயகி கீர்த்தி ஷெட்டி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யாவுடன் நடிகை கீர்த்திஷெட்டி முதன்முதலாக இணைகிறார். ஏற்கனவே இவர் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி வரும் ’தி வாரியர்’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் என்பதும் இந்த படம் வரும் ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது என்பது

ஆறு ஆஸ்கர் விருதுகளை அள்ளிய DUNE!

94வது ஆஸ்கர் விருதுகள் விழாவில் ஆறு விருதுகளை வென்று DUNE திரைப்படம் வரலாறு படைத்துள்ளது. 94வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா வண்ணமயமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.மொத்தம் உள்ள 23 பிரிவுகளில், ஒவ்வொன்றாக ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை ஆறு ஆஸ்கர் விருதுகளை குவித்து DUNE திரைப்படம் சாதனை புரிந்துள்ளது. சிறந்த காட்சியமைப்பு, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலிக்கலவை, சிறந்த ஒரிஜினல் ஸ்கோர், சிறந்த எடிட்டிங், சிறந்த புரோக்‌ஷன் டிசைன் என பிரிவுகளில் விருதுகளை வாரிக் குவித்தது DUNE. சிறந்து துணை நடிகருக்கான விருது ட்ராய் கோட்சர்க்கு வழங்கப்பட்டது. கோடா (Coda) என்ற படத்தில் நடித்ததற்காக அந்த விருது ட்ராய் கோட்சர்க்கு வழங்கப்பட்டது.

Ajith Valimai Movie Creates Record Breaking Views On Zee 5 OTT | ஓடிடி-யில் யாராலும் தொடமுடியாத புதிய சாதனை படைத்த வலிமை

சமீபத்தில் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான மிகப்பிரம்மாண்டமான படமான வலிமை ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது.  கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்ததோடு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வெற்றியை பெற்றது.  ஜீ ஸ்டுடியோவுடன் இணைந்து போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தில் ஹுமா குரேஷி மற்றும் கார்த்திகேயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.  யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் படிக்க | ‘ரஜினி-169’ படத்தின் டைட்டில் இதுவா?! இப்படத்தை திரையில் பார்த்து ரசித்த ரசிகர்கள் ஓடிடியில் எப்போது வெளியாகும்

அச்சமற்ற நடிகனாக அடித்தளம் தந்தது வீதி நாடகங்கள்தான்: ஆயுஷ்மான் குரானா பெருமிதம் | World Theatre Day: Ayushmann Khurrana opens up about theatres role in his life

மும்பை: அச்சமற்ற நடிகனாக உருவாவதற்கு எனக்கு அடித்தளம் தந்தது வீதி நாடகங்கள்தான் என்று ஆயுஷ்மான் குரானா பெருமிதம் தெரிவித்துள்ளார். விக்கி டோனர் படத்தின் வாயிலாக 2012 பாலிவுட்டில் அடிஎடுத்து வைத்தவர் ஆயுஷ்குமான் குரானா. தொடர்ந்து சுப்மங்கள் சாவ்தான், அந்தாதூன், ஆர்டிகிள் 15, உள்ளிட்ட ஏராளமான வெற்றிப் படங்களின் நாயகனாக வலம்வருபவர். ஐந்து வருடங்கள் தொடர்ந்து நாடகங்களில் நடித்து கடும் பயிற்சி பெற்றவர். கல்லூரி நாட்களில், சிம்லாவில் உள்ள கெய்ட்டி தியேட்டரிலும் பல நாடகங்களில் ஆயுஷ்மான் நடித்துள்ளது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சண்டிகரில் இயங்கிவரும் நாடகக் குழுக்களான DAV கல்லூரியின் ஆகாஸ் மற்றும் மஞ்ச்தந்திராவின் நிறுவன உறுப்பினராகவும் அவர் இருந்துள்ளார். இன்று மார்ச் 17ல் உலக நாடக

ஆஸ்கர் 2022: “தங்கத்தை வீட்டிற்குக் கொண்டு வாருங்கள்”- தெற்காசிய கலைஞர்களுக்கு பிரியங்கா சோப்ரா வாழ்த்து | Oscars 2022: Ahead Of The Academy Awards, Priyanka Chopra Hosts a party honoring South Asian Nominees

வரும் மார்ச் 27-ல் இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதற்கு முன்னர் மார்ச் 24-ல் தெற்கு ஆசியாவிலிருந்து ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் கலைஞர்களுக்கான விருந்து நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆஸ்கர் ரேசிலிருக்கும் 10 தெற்காசிய கலைஞர்கள் பங்குகொண்டனர். பிரியங்கா சோப்ரா அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரியங்கா சோப்ரா, தெற்காசிய திரைத்துறை இந்த அளவிற்கு வளர்ந்திருப்பதை பார்க்கையில் தான் பெருமை கொள்வதாகவும் இதுபோன்று திரைக்குப் பின்னால் அயராது உழைப்பவர்களை கௌரவிக்கும் ஆஸ்கர் அகாடமிக்கு தான் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார். மேலும் “இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி” என்றும் தெரிவித்திருந்தார். பிரியங்கா சோப்ரா இது பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட

"கிறிஸ்டோபர் நோலன் படங்கள் என்றாலே நான் ஓடிவிடுவேன்…" – 'Scam 1992' இயக்குநர் ஹன்சல் மேத்தா!

பாலிவுட் இயக்குநர் ஹன்சல் மேத்தா, கிறிஸ்டோபர் நோலனின் படங்கள் தனக்குப் பிடிப்பதில்லை என சமீபத்தில் எடுக்கப்பட்ட நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருக்கிறார். ஹன்சல் மேத்தா 1993 சின்னத்திரை நிகழ்ச்சிகளை இயக்கியதன் மூலம் சினிமா துறைக்குள் நுழைந்தார். ஆரம்ப காலத்தில் Amrita, Freeway, Lakshya, Neeti உள்ளிட்ட படங்களை இயக்கினார். 2013-ல் ராஜ்குமார் ராவ்வை வைத்து இயக்கிய ‘சாஹித்’ படம் தான் ஹன்சல் மேத்தாவைப் பிரபலப்படுத்தியது. 2020ல் ஹர்சத் மேத்தாவின் வாழ்வை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘Rip-off 1992’ வெப் சிரீஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 2020-ல் ஹன்சல் மேத்தா இயக்கத்தில் ‘Rip-off 1992’ வெப் சிரீஸ் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது

"மன்மத லீலை பார்த்துட்டு கல்யாணத்துக்குப் பொண்ணு கொடுப்பாங்களானு தெரியல!" – அசோக் செல்வன்

“லாக்டௌன் போயிட்டு இருந்தப்போ வெங்கட் பிரபு சார்கிட்ட இருந்து போன் வந்தது. ‘ப்ரீயா இருக்கீயா, மீட் பண்ணலாமானு’னார். சரிண்ணேனு சொல்லிட்டு போய் பார்த்தேன். ‘என்னோட வழக்கமான ஸ்டைல் பசங்க இல்லமா படம் பண்ணலாம்னு’ இருக்கேன்னு சொன்னார். உடனே ஓகே சொல்லிட்டேன். ஏன்னா, நான் வெங்கட் பிரபு சாருடைய பெரிய பேன். வழக்கமான சினிமா இல்லாம க்ரியேட்டிவா படம் பண்ற டைரக்டர். ‘சென்னை 28’, ‘மங்கத்தா’, ‘மாநாடு’ மாதிரியான வித்தியாசமான படங்கள் கொடுத்துக்கிட்டே இருக்கார். பத்து நிமிஷம் கதை சொன்னார். ரொம்ப ஃபன்னா இருந்தது. ஒரு பெரிய கிக் இவர்கூட படம் பண்றதுல இருந்தது. காமெடி ஜானர் பண்ணி பார்க்கணும்னு ஆசைப்பட்டேன். இதெல்லாம் ‘மன்மதலீலை’ படத்துல நடந்திருச்சு”

Tamil actress engagement images viral in social media – தமிழ் News

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்த நடிகை ஒருவர் தனது திருமண அறிவிப்பை அதிகாரபூர்வமாக அறிவித்து நிச்சயதார்த்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நடிகராக அறிமுகமான ’டார்லிங்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி. அதன் பின்னர் இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என பல திரைப்படங்களில் நடித்தார் . இந்த நிலையில் யாகாவாராயினும் நாகாக்க’ ‘மரகத நாணயம்’ உள்ளிட்ட படங்களில் தன்னுடன் நடித்த நடிகர் ஆதியை நிக்கி கல்ராணி காதலித்து வருவதாகவும் இருவருக்கும் விரைவில் திருமணம் என்றும் செய்திகள் வெளியானது. இந்த செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் நிக்கிகல்ராணி தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை பதிவு

வசூலில் முதல் நாளிலேயே சாதனை செய்த 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் – வெளியான தகவல்

ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே ரூ.257 கோடி வசூலாகி சாதனை செய்துள்ளது. தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநரான ராஜமௌலி, ‘பாகுபலி’ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படத்தை மெகா பட்ஜெட்டில் 3டி மற்றும் 2டி தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக உருவாக்கியிருந்தார்.  1920-ம் ஆண்டு காலக்கட்டத்தில், ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய தெலுங்கு சுதந்திரப் போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட உருவான கற்பனைக் கதைதான் ‘ரத்தம் ரணம் ரௌத்தரம்’ எனப்படும் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம். இந்தப் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன், ரே ஸ்டீவன்சன், ஒலிவியா மோரிஸ், சமுத்திரகனி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கொரேனா

Netflix Bought The RRR Movie OTT Rights | RRR படத்தின் ஓடிடி உரிமையை வாங்கியது இந்த நிறுவனமா

பிரம்மாண்ட திரைப்படமான பாகுபலி படத்தின் வெற்றிக்கு பின்னர் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் கழித்து தற்போது எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் திரையரங்கில் மார்ச்-25ம் தேதி வெளியாகியுள்ள திரைப்படம் ‘ஆர்ஆர்ஆர்‘.  இப்படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண், அலியா பட் மற்றும் அஜய் தேவ்கன் ஆகியோர் நடித்துள்ளனர்.  சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாற்று கதையை ரசிகர்களுக்கு கமர்ஷியலாக இப்படம் கொடுத்துள்ளது, இப்படத்தின் காட்சிகள் அனைத்தும் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது.  ரசிகர்கள் நினைத்தது போல் அவர்களின் எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்திருக்கிறது. மேலும் படிக்க | ராஜமௌலி, ஜூனியர் என்டிஆர், ராம் சரணுக்கு வெற்றி மகுடம் சூட்டியதா?- RRR விமர்சனம் இந்நிலையில் இப்படத்தை ஓடிடியிலும் கண்டு மகிழ ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர். 

1 2 3 81
Live Updates COVID-19