`நீங்க கவுன்சிலர் பதவிக்கான தகுதியை இழந்துட்டீங்க’ – தஞ்சாவூர் ஆணையர் நோட்டீஸ்; அதிர்ச்சியில் திமுக | tanjore commissioner action against DMK councilor

தஞ்சாவூர் மாநகராட்சியில் திமுக கவுன்சிலர் ஒருவர், அரசு பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்து வரும் தன் தம்பி குறித்த விவரங்களை வேட்புமனுவில் மறைத்து விட்டதாகவும், அதனால் தன்னியல்பாகவே கவுன்சிலராக பதவி வகிக்கும் தகுதியை இழந்து விட்டதாக கூறி குறிப்பிட்ட அந்த கவுன்சிலருக்கு மாநகராட்சி ஆணையர் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். கவுன்சிலர் பதவியை இழந்ததால், அந்த கவுன்சிலர் முதல் மாமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது எனவும் கூறப்படுவது தஞ்சை திமுக மட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியின் திமுக எம்.எல்.ஏ, டி.கே.ஜி நீலமேகம். இவரின் அக்கா மகன் அண்ணா.பிரகாஷ் தஞ்சாவூர் மாநகராட்சி 16-வது வார்டு திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி

நூல்நோக்கு: இளைஞர்களின் அவலக் குரல்

தமிழ்ப் பேராசிரியரும் மாநிலக் கல்லூரியின் முதல்வருமான கல்யாணராமன், தி.ஜானகிராமனின் ஆராதகர் என்றே அறியப்படுபவர். தி.ஜா. நூற்றாண்டு விழாவையொட்டி அவரது படைப்புலகம் குறித்த 100-க்கும் மேற்பட்ட கட்டுரைகளின் பெருந்தொகுப்பான ‘ஜானகிராமம்’ அவரது சமீபத்திய பங்களிப்பு. கல்லூரி முதல்வராகப் பொறுப்பேற்றதிலிருந்து மாநிலக் கல்லூரி வளாகத்தில் வாரந்தோறும் துறைவாரியாகக் கருத்தரங்குகளையும் சிறப்பு சொற்பொழிவுகளையும் ஒருங்கிணைத்துவருகிறார். இவர், கவிஞரும் சிறுகதை எழுத்தாளரும்கூட. 90-களின் தொடக்கத்தில் சுபமங்களா உள்ளிட்ட இதழ்களிலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2018-2019 ஆண்டுகளில் ‘பேசும் புதிய சக்தி’, ‘காலச்சுவடு’ உள்ளிட்ட இதழ்களிலும் அவர் எழுதிய 15 சிறுகதைகள் ‘விபரீத ராஜயோகம்’ என்ற தலைப்பில் தொகுப்பாகியுள்ளன. Source link

இப்போது படிப்பதும் இப்போது எழுதுவதும் | Book Reading

Revealed : 26 Mar 2022 07:25 am Up to date : 26 Mar 2022 12:40 pm   Revealed : 26 Mar 2022 07:25 AM Final Up to date : 26 Mar 2022 12:40 PM குமாரசெல்வா பேருந்து பயணத்தில் வாசித்து முடிக்கக்கூடிய சிறிய புத்தகம் சீர்ஷேந்து முகோபாத்யாயவின் ‘அத்தைக்கு மரணமில்லை’ நாவல் (தமிழில் தி.அ.ஸ்ரீனிவாஸன், காலச்சுவடு வெளியீடு). முன்பு கிழக்கு வங்காளத்தில் ஜமீன்தார்களாக வாழ்ந்த குடும்பம். வேலை எதுவும் செய்யாமல் நகை, சொத்துக்களை விற்றுத் தின்று ஆடம்பரங்களில் அழியும் இறுதித் தருணம். ஏழைக் குடும்பத்திலிருந்து வந்து வாழ்க்கைப்பட்ட சோமலதாவின் பார்வையில் கதை நகர்கிறது.

நல்வரவு | இப்படித்தான் ஜெயித்தார்கள்: ஒரு பத்திரிகையாளனின் நேர்காணல்கள்

பத்திரிகையாளர் மோ.கணேசன் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகளிடம் மேற்கொண்ட நேர்காணல்களின் தொகுப்பு இது. விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, நீதியரசர் கே.சந்துரு, அமுதா ஐ.ஏ.எஸ், ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், வீணை காயத்ரி, வானிலை ஆய்வாளர் ரமணன், எழுத்தாளர் ராஜேஷ்குமார், பேராசிரியர் சாலமன் பாப்பையா, சேலம் ஆர்.ஆர்.பிரியாணி நிறுவனர் ரா.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 20 ஆளுமைகளின் வெற்றிக் கதைகள் இந்த நேர்காணல்கள் வழியாக பதிவாகியுள்ளன. இப்படித்தான் ஜெயித்தார்கள்: ஒரு பத்திரிகையாளனின் நேர்காணல்கள் மோ.கணேசன் வெளியீடு: இளையோர் இலக்கியம், விற்பனை உரிமை: பாரதி புத்தகாலயம், சென்னை – 18 விலை: ரூ.230, தொடர்புக்கு: 044-24332424 Source link

வேலூர்: இரவில் திடீரென வெடித்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! – தந்தை, மகள் பலியான சோகம் | electric scooter explodes – father, daughter died – vellore

வேலூர், சின்ன அல்லாபுரம் பலராமன் தெருவைச் சேர்ந்தவர் துரைவர்மா. இவர், போட்டோ ஸ்டுடியோ வைத்து தொழில் செய்கிறார். இவரின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த நிலையில்,13 வயதாகும் மகள் மோகன ப்ரீத்தியுடன் துரைவர்மா வசித்துவந்தார். சமீபத்தில் புதிதாக எலெக்ட்ரிக் பேட்டரி ஸ்கூட்டர் ஒன்றை வாங்கியிருக்கிறார் அவர். சிறிய வீடு என்பதால் வெளியில் நிற்க வைத்து, ஸ்கூட்டரின் பேட்டரிக்கு சார்ஜ் போடும் வசதியில்லை. உயிரிழந்த தந்தை, மகள் இதனால், வீட்டு ஹாலை ஒட்டிய முன்புறப் பகுதியில் வண்டியை நிறுத்தி சார்ஜ் போட்டுள்ளார். நேற்று இரவும் வழக்கம்போல், அதேப் பகுதியில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நிறுத்தி சார்ஜ் போட்டுவிட்டு, மகளுடன் படுத்து தூங்கியிருக்கிறார். இன்று அதிகாலை எலெக்ட்ரிக்

சிற்றிதழ்தாசன் | Books – hindutamil.in

இலக்கியம், இசை, இதழியல் துறைகளுக்கும் புதுக்கோட்டைக்கும் எப்போதுமே நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது. 1947-ல் புதுக்கோட்டையிலிருந்து முருகு.சுப்பிரமணியன், அரு.பெரியண்ணன் இணைந்து ‘பொன்னி’ எனும் மாத இதழை நடத்தினார்கள். 1953 வரை வெளிவந்த இந்த இதழ் பாரதிதாசன் கவிதைப் பரம்பரையை அறிமுகப்படுத்தியது. இதே காலகட்டத்தில் புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த ‘தலைவன்’, ‘குயில்’ மாத இதழ்களும் நல்ல வரவேற்பைப் பெற்றன. ‘தலைவன்’ இதழின் துணையாசிரியராக உவமைக்கவிஞர் சுரதா பணியாற்றினார். 1953-ல் ‘டிங்டாங்’ எனும் சிறார் இதழும் வெளிவந்து பாராட்டைப் பெற்றது. அந்த தொடர் மரபின் நீட்சியில் வெளிவந்த இதழே எஸ்.விஜயகுமார் நடத்திய ‘ஏழைதாசன்’. 1980-களின் இறுதியில் நண்பர்கள் சிலரோடு சேர்ந்து, நான் நடத்திய ‘விடியல்’ எனும் உருட்டச்சு (ரோனியோ) இதழுக்கு அழகான,

`உ.பி-யால் முடிகிறது; ஏன் தமிழகத்தில் முடியவில்லை?’ – கேள்வி எழுப்பும் கரும்பு விவசாயிகள் | farmers requests tn govt to rise the sugarcane procurement price

இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழக காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன், “2021-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது, திமுக தலைவரும், தற்போதைய தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், தாங்கள் வெற்றிப் பெற்று ஆட்சிக்கு வந்தால், கரும்புக்கு டன்னுக்கு 4,000 ரூபாய் வழங்கப்படும் என வாக்குறுதி கொடுத்தார். திமுக தேர்தல் அறிக்கையிலும் இது முதன்மைப்படுத்தப்படுத்தப்பட்டது. இதுபோன்ற இன்னும் சில முக்கியமான வாக்குறுதிகளை நம்பிதான் விவசாயிகள் திமுக-விற்கு வாக்களித்து ஆட்சி கட்டிலில் அமர்த்தினார்கள். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்ததும், வேளாண்மைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து விவசாயிகள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. குறிப்பாக,

புத்தகத் திருவிழா 2022 | கட்சித் தொண்டரல்ல எழுத்தாளர்: சி.சரவணகார்த்திகேயன் பேட்டி | Interview with C. Saravanakarthikeyan

இன்றைய இளைய தலைமுறை எழுத்தாளர்களில் நாவல், சிறுகதை, குறுங்கதை, கவிதை, கட்டுரை எனப் பல தளங்களில் தொடர்ச்சியாக இயங்கிவருகிறவர் சி.சரவணகார்த்திகேயன். இதுவரை இவர் எழுதிய 25 அச்சு நூல்கள் வெளியாகியுள்ளன. சென்னை புத்தகக் கண்காட்சியை ஒட்டி புதியவையும் மறுபதிப்புகளும் சேர்ந்து சரவணகார்த்திகேயனின் 10 நூல்கள் வெளியாகியுள்ள சூழலில் அவரிடம் உரையாடியதிலிருந்து… முழு நேர ஐடி பணியில் இருந்துகொண்டே இத்தனை நூல்களை எழுதியிருக்கிறீர்கள். ஃபேஸ்புக்கிலும் நிறைய விஷயங்களைப் பற்றி எழுதுகிறீர்கள். நேரத்தை எப்படிக் கையாள்கிறீர்கள்? நேர மேலாண்மை பற்றிக் கொஞ்சம் பிரக்ஞைபூர்வ அணுகுமுறை உண்டு. ஒரு வேலையை எடுத்தால் மற்றொன்று பின்வரிசைக்குச் சென்றாக வேண்டும் என்ற எதார்த்தத்தை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். செய்ய வேண்டிய வேலைகள் பத்து,

புத்தகத் திருவிழா 2022 | நம் வெளியீடு: பாதி நீதியும் நீதி பாதியும் | Our publication

Revealed : 05 Mar 2022 07:09 am Up to date : 05 Mar 2022 13:08 pm   Revealed : 05 Mar 2022 07:09 AM Final Up to date : 05 Mar 2022 01:08 PM சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றியபோது, தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்கவும் சமூகநீதியை நிலைநாட்டவும் அர்ப்பணிப்போடு செயல்பட்டவர் நீதிநாயகம் கே.சந்துரு. நீதிபதியாகத் தனது பதவிக் காலத்தில் காலனியாதிக்க மரபுகளை உறுதியாகத் தவிர்த்து முன்னுதாரணத்தை உருவாக்கியவர் இவர். சட்டம் மற்றும் நீதித் துறை சார்ந்து கே.சந்துரு எழுதிய இந்தக் கட்டுரைகள் மிக முக்கியமான ஆவணங்களாகக் கருதத்தக்கவை. இந்த நூல்களைப் புத்தகக்காட்சியில்

“ரெண்டு பேரையும் நான்தான் கொன்னேன்…” -தாய், தந்தையை கொன்று அருகிலேயே அமர்ந்திருந்த மகன் | Young man killed father and mother in family issue

இதுகுறித்து, மண்டையூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீஸார் விசாரணையில் தாய், தந்தை இருவரையும், மகனே படுகொலை செய்தது தெரிய வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தாய், தந்தையை படுகொலை செய்துவிட்டு தலைமறைவாகாத பாலசுந்தர், “நான் தான் ரெண்டு பேரையும் கொன்னேன், அதுக்க என்ன இப்ப என்ன வேணும்னாலும் பண்ணிக்கோங்கன்னு” கூறி போலீஸாருக்கே அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். போலீஸார் விசாரணையில், “ரெங்கசாமியும்-வள்ளியும் விவசாய வேலை செய்து வந்திருக்கின்றனர். பாலசுந்தரை கேட்டரிங் படிக்க வைத்திருக்கின்றனர். ஆனாலும், சரியான வேலை கிடைக்காகததால், வீட்டிலேயே இருந்திருக்கிறார். வீட்டு வேலைகளை இழுத்துப் போட்டு செய்தாலும், தாய், தந்தை தன்னை மதிப்பதில்லை என்றிருக்கிறார். மேலும் தன்னை இருவரும் சேர்ந்து தனிமைப்படுத்திவிட்டனர். எனக்கு உரிய

1 2 3 36
Live Updates COVID-19