“அனுபவங்கள் நம்மைச் செழுமைப்படுத்தும்” – எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி வாழ்க்கை சொல்லும் பாடங்கள்!|lessons we need to learn from the life of Maxim Gorky

இலக்கிய வாசிப்புகள் சிந்தனையைக் கூராக்கும்: கார்க்கி ஒருமுறை கப்பலில் பயணம் செய்தார். அந்தக் கப்பலில் சமையல்காரராக இருந்தவர் புத்தகங்கள் படிப்பதற்கு கார்க்கிக்கு ஆர்வம் ஊட்டினார். இதன் காரணமாக நிறைய புத்தகங்களைக் கார்க்கி படிக்கத் தொடங்கினார். முக்கியமாக ரஷ்ய எழுத்தாளர்கள். அலெக்சாண்டர் டூமாஸ், தஸ்தயேவ்ஸ்கி, லியோ டால்ஸ்டாய், ஆன்டன் செக்கோவ் ஆகியோரின் படைப்புகள் கார்க்கியின் சிந்தனைகளை விரிவுபடுத்தின. பல மொழியாற்றல் பல விதங்களில் உதவும் கார்க்கி தனது பள்ளிப் படிப்பை முடிக்கவில்லை. காரணம் குடும்ப வறுமை. என்றாலும் வேலை செய்துகொண்டே முயன்று கல்வி கற்றார். அதுமட்டுமல்ல ரஷ்ய மொழி, பிரெஞ்சு, ஆங்கிலம், ஜெர்மனி ஆகிய மொழிகளையும் நன்கு கற்றுக்கொண்டார். இவை தன் எழுத்துத் திறமைக்கும் பயன்பட்டன என்று

களிமண் கொண்டு உயிர்களை உருவாக்கிய குழந்தைகள்; ஆச்சர்யப்படுத்திய நிகழ்ச்சி!

சென்னை வேளச்சேரியில் உள்ள பயிலகம் அரங்கில் `சுட்டியானை’ இதழின் குழந்தைகளுக்கான களிமண் பயிற்சி முகாம் நடைபெற்றது. சென்னையின் பல பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் ஆர்வத்துடன் இந்த முகாமில் கலந்துகொண்டனர். இயல் வாகை பதிப்பகத்தின் குழந்தைகளுக்கான இதழ் `சுட்டியானை’. இயற்கை சார்ந்து குழந்தைகள் சாரந்த பல நிகழ்வுகளை ஒருங்கிணைக்கிறது. தற்போது குழந்தைகள் களிமண்ணைக் கொண்டு பொம்மை செய்யும் பயிற்சியை ஒருங்கிணைத்தது. நிகழ்வை ஒருங்கிணைத்த சசிகலாவிடம் பேசினோம். “இயல்வாகை பதிப்பகம் சுற்றுச்சூழல் சார்ந்து பல முன்னெடுப்புகளை எடுத்துவருகிறது. இயல்வாகையின் சுட்டிக்குழந்தைதான் `சுட்டியானை’, குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட இதழ். குழந்தைகளுக்கென தனி இதழ் தேவையா என்றால் அதற்கான அவசியம் அதிகமா இருக்கு. பெரியவர்களைவிட குழந்தைகளுக்குத்தான் கிரியேட்டிவிட்டி அதிகம். அவர்கள்தான் நம் அடுத்த

கே.டானியல்: இலங்கையில் கம்யூனிசப் பணி; தமிழ் தலித் இலக்கியத்தின் முன்னோடி; பிறந்ததினப் பகிர்வு!

தமிழில் தலித் இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரான ஈழத்து எழுத்தாளர் கே.டானியலின் பிறந்தநாள் இன்று. இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் நிலவும் தீண்டாமைக் கொடுமைகள் பற்றியும், தாழ்த்தப்பட்ட மக்களின் அவல நிலையையும், சாதிப் பிரச்னைகளையும் எழுத்தில் படைத்த டானியல், யாழ்ப்பாணத்துக்கு அருகிலுள்ள ஆனைக்கோட்டையில் 1926 மார்ச் 25 அன்று பிறந்தார். சிறுகதை, குறுநாவல், நாவல் எனப் பல வடிவங்களில் இயங்கிய கே.டானியலின் நாவல்களான ‘பஞ்சமர்’, ‘கோவிந்தன்’, ‘போராளிகள் காத்திருக்கின்றனர்’, ‘அடிமைகள்’, ‘கானல்’, ‘தண்ணீர்’ ஆகியவை தமிழ் தலித் இலக்கியத்தின் உருவாக்கத்துக்கும் வளர்ச்சிக்கும் முதன்மையான பங்களிப்பை வழங்கியிருக்கின்றன. கே.டானியல் குடும்பத்தின் வறுமைச் சூழல் காரணமாக ஆறாம் வகுப்புக்கு மேல் டானியலால் பள்ளிக் கல்வியைத் தொடரமுடியவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்

6 டன் எடையுள்ள பாறையில் SPB-ன் முகத்தை வடித்த கலைஞர்; நினைவு இல்லத்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட சிற்பம்

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கடந்த 2020 -ல் காலமானார். அப்போது அவருக்கு வயது 74. உலகெங்கும் வாழும் இசை ரசிகர்கள் பலரும் அவரின் குரலுக்கு ரசிகர்கள். அவரது உடல் காஞ்சிபுரத்திலுள்ள தாமரைப்பாக்கம் சர்வேஸ்வரா நகரிலுள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது பண்ணை வீட்டில் எஸ்.பி.பிக்கு நினைவு இல்லத்தை அவரது மகன் எஸ்.பி. சரண் அமைத்து உருவாக்கி வருகிறார். ஓராண்டாக நடக்கும் இப்பணி அங்கு நிறைவடையவுள்ளது. இங்கு அமையும் சிலைகள் பாண்டிச்சேரி ஆரோவில் சஞ்சீவி நகர் பகுதியில் சிற்பக்கூடத்தில் உருவாகியுள்ளன. எஸ்.பி.பி உருவம் இதுபற்றி சிற்பக்கூடத்தினர் கூறுகையில், “தாமரைப்பாக்கத்தில் எஸ்.பி.பி நினைவில்லத்தில் ஓராண்டாக பணி நடந்துவருகிறது. அங்கு ஏராளமான சிலைகள் வடிவமைத்துள்ளோம். அங்கு

ஊசிப்புட்டான் | “இந்தப் பக்கம் வச்சு நீ யார வேணாலும் என்ன வேணாலும் பண்ணு” | அத்தியாயம் – 27 | story of a boy nicknamed as oosipputtan part 26

அதன்பிறகு ஒவ்வொரு நாளும் பள்ளி முடிந்ததும், முத்தையாவைப் பார்க்க அப்படியே நடந்து நேசமணி நகர் போலீஸ் ஸ்டேஷன் வரை செல்ல ஆரம்பித்தான். டதி ஸ்கூல் முடிந்து பெண்களும் அந்த நேரத்தில் வெளியே வருவார்கள் என்பதால் ஒருசில நாட்கள் முத்தையா பள்ளி அருகில் நின்று போக்குவரத்தை ஒழுங்குப்படுத்திக் கொண்டிருப்பார். அந்த நேரங்களில் முத்தையாவோடு ரவியும் நின்றுக் கொண்டு போக்குவரத்தை ஒழுங்குப் படுத்த உதவுவான். இதில் அவனுக்கு இரண்டு அனுகூலங்கள் இருந்தது. ஒன்று டதி ஸ்கூலில் படிக்கும் பெண்களைப் போலீஸின் துணையோடு எந்தவிதமான பயமுமின்றி ஆசைத் தீரப் பார்ப்பதும், அவர்களைப் பற்றிய வர்ணனைகளையும் தைரியமாகப் பேச முடிந்தது. மற்றொன்று தனக்கு ரௌடிகளோடு மட்டுமல்ல, போலீஸாரோடும் நெருக்கமான நட்புறவு இருக்கிறதென்று

`ஒரு தலைமுறைக்குத் தமிழ் சொல்லிக்கொடுக்கும்’; வைரமுத்துவின் பாட்டுத் தொடர் மீண்டும் ஆரம்பம்! |Article about Vairamuthu’s naatpadu theral album

கவிஞர் வைரமுத்துவின் நாட்படு தேறல் என்ற பாட்டுத் தொடர் மொத்தம் 100 பாடல்களை உள்ளடக்கியது. ஒவ்வொரு பாட்டுக்கும் ஓர் இசையமைப்பாளர் ஒரு பாடகர் ஓர் இயக்குநர் என்று 100 இசையமைப்பாளர்கள், 100 இயக்குநர்கள், 100 பாடகர்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது இந்த பாட்டுத் தொடர். வாரம் ஒரு பாடல் வீதம் நாட்படு தேறலின் முதல் பாகம் கலைஞர் டிவியில் ஒளிபரப்பானது. இதையடுத்து நாட்படு தேறல் இரண்டாம் பாகம் ஏப்ரல் 17 ஞாயிறு முதல், கலைஞர் தொலைக்காட்சி, இசையருவி மற்றும் வைரமுத்து யூடியூப் தளத்திலும் தொடர்ந்து 13 ஞாயிற்றுக்கிழமைகள் ஒளிபரப்பாகவிருக்கிறது. நாட்படு தேறல் இரண்டாம் பருவம் போஸ்டர் நாட்படு தேறல் இரண்டாம் பாகத்தில் வித்யாசாகர் – யுவன்சங்கர் ராஜா –

சென்னை தீவுத் திடலில் கோலாகலமாக நடந்த ‘நம்ம ஊரு திருவிழா’ – என்ன ஸ்பெஷல்? | Folk artists enthrall city at Namma Ooru Thiruvizha

மேலும் வீரத் தமிழ்க் கலைகளின் அணிவகுப்பாகச் சிலம்பாட்டம், புலியாட்டம், மான்கொம்பு ஆட்டம், காவடி ஆட்டம், மரக்கால் ஆட்டம், அம்மன் நிகழ்ச்சி, தீ விளையாட்டு முதலியனவும் மேடையேற்றப்பட்டிருந்தன. வீரம், மேளம் என அரங்கு ஆர்ப்பரிக்க மக்களைச் சற்று மெருகூட்டும் விதமாக நீலகிரி தோடர் நடனக்குழுவால் தோடர் நடனமும், சேர்வை ஆட்டமும் நிகழ்த்தப்பட்டன. நம்ம ஊரு திருவிழா’ ஆட்டங்களும் நடனங்களும் கண்களுக்கு வண்ணமயமாய் அமைய, செவிகளுக்கு விருந்தாய் நாட்டார் பாடல்களைப் பாட பல்வேறு குழுவினரும், தனிப்பட்ட பாடகர்களும் தங்கள் இசை நிகழ்ச்சியை இனிதாய் நிகழ்ந்தேறச் செய்தனர். நிகழ்ச்சியின் நிறைவாக நாட்டுப்புறக் கலைஞர்களின் நடனம் நிகழ்ந்தேற, தேசிய கீதத்துடன் முடிவுபெற்றது ‘நம்ம ஊரு திருவிழா.’ விழாவைத் தொடங்கிவைத்த சுற்றுலாத்துறை அமைச்சர்

செம்பா: “நான் சொன்னது சரி தான்… ஆபத்தே உன் அருகில் வர அஞ்சுகிறது” | பகுதி 27 | semba a historical series of tamil girl part 27

நெடுங்கனவிலிருந்து திடீரென விழித்தவன் முகத்தில் முத்துக்களாய் வியர்வை திரண்டிருந்தது. உள்ளம் பதைபதைப்பிலிருந்து இன்னும் வெளிவரவில்லை. “கெட்ட கனவா சுரோ?” அசைவில் எழுந்திருந்த மாமன் மெல்லக்கேட்டார். “ம்ம்? தெரியவில்லை மாமா” என்ன கனவென்று அவர் கேட்கவில்லை. இப்போதெல்லாம் மருமகனுக்கு அடிக்கடி கனவு வருகிறது என்றெண்ணியபடி மீண்டும் துயிலில் ஆழ்ந்தார். சுரோவும் மெல்ல சாய்ந்துகொண்டுக் கண்மூடினான். உறக்கம் வர மறுத்தது. எப்போதும் ஒரே கனவு தான். அதில் அவள் மட்டும். அவளது முகத்தை உருவகப்படுத்த முயன்றான். உறக்கத்தில் தெளிவாய்த் தெரியும் அந்தத் திருமுகம் விழிப்பில் கலங்கலாகத்தான் தோன்றியது. கனவில்.. கிடந்த நிலையில் அவனுக்கு மேலே செம்மஞ்சள் பூத்த வைகறை வானம். சீழ்க்கையடிக்கும் காற்றோடு கைகோர்த்துக் கடலின் அலையோசை. மெல்ல

வாழ்க்கை என்பது… #MyVikatan

’நீர்க்குமிழி’ போன்றதுதான் இந்தப் பிறவி… எப்படி அது எப்போது உடையுமென்று எவருக்கும் தெரியாதோ, அதைப்போலவே ஒருவர் வாழ்வுக்கு எப்போது முடிவு வருமென்பதும் யாருக்கும் தெரியாது. மனித வாழ்க்கை மகத்தானது என்று எத்தனை முறை எவரெவர் சொன்னாலும், எல்லோருக்கும் அது அப்படி அமைந்து விடுவதில்லை என்பதே நிதர்சனம். வாழ்க்கை என்பது, ’பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட சிறுகாலம்’ என்று வேதாந்தம் பேசுபவர்களும் உண்டு; இந்த உலகந்தான் எவ்வளவு அருமையும் அற்புதங்களும் நிறைந்தது. மலைகள், கடல்கள், காடுகள், ஆறுகள் என்று எவ்வளவு அழகு. நீல வானமும், நிலவும், சூரியனும் அழகுக்கு அழகு சேர்க்கும் ஆயுதங்கள் அல்லவா! அதனை அங்குலம் அங்குலமாக ரசித்துச் சுவைத்து வாழ வேண்டாமா?’என்று கேள்வி கேட்பவர்களும் உண்டு.

A Land of Stories: சென்னை ஃபோட்டோ பினாலே-யின் புதிய முன்னெடுப்பு! | Student photographers capture Tamil Nadu and its stories on smartphones

‘குழந்தைகளுக்கு ஒன்றைக் கற்றுக்கொடுக்கும்போது, கற்றுக் கொண்டதிலிருந்து அவர்கள் உருவாக்குவதைக் காட்சிப்படுத்துவதை நான் தொடர்ந்து மேற்கொண்டிருக்கிறோம். அவர்களின் ஆர்வத்தை அங்கீகரிக்கும் விதமாக இதை நாங்கள் கடைபிடித்துவருகிறோம்,” என்கிறார் சென்னை ஃபோட்டோ பினாலேவின் ப்ரிஸம் குழுமத்தின் மேலாளர் உதய் ஞானதாசன். மாணவர்களைப் பயிற்றுவிக்கும் கல்வியாளர் ஹபீபா பேசும்போது, “புகைப்படக்கலையின் அடிப்படைகள் மட்டுமின்றி, ஒரு பொருளை எடுத்துக் கொண்டு அதன் அடிப்படையிலும் நாங்கள் கலையைக் கொண்டு சேர்க்க முயற்சிப்போம். உதாரணத்திற்கு நாங்கள் சமீபத்தில் கற்றுக்கொடுத்த ஒரு கரு ஆண்தன்மையை வெளிப்படுத்தும் விதமாகப் புகைப்படம் எடுத்தல்; இதன் ஓர் அங்கமாகப் பெண்கள் சார்ந்த பொருள்களை ஆண்கள் எப்படி அணுகிறார்கள் என்பதை அறிய மல்லிகைப் பூவை தலைப்பாகக் கொடுத்துப் புகைப்படங்கள் எடுக்கச் சொன்னோம்.

1 2 3 26
Live Updates COVID-19