“காரை நிறுத்துப்பா… திருமணத்துல கலந்துக்குவோம்!” – நாடோடி சமூக மக்களை நெகிழ வைத்த அமைச்சர் | tn tourism minister attends tribal people’s marriage function unexpectedly and wished them

“காரை நிறுத்துப்பா… திருமணத்துல கலந்துக்குவோம்!” – நாடோடி சமூக மக்களை நெகிழ வைத்த அமைச்சர் | tn tourism minister attends tribal people’s marriage function unexpectedly and wished them


புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் – கரம்பக்காடு முத்துமாரியம்மன் கோயிலில் வைகாசி 26-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், கோயிலுக்கு நேரடியாகச் சென்ற தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்களிடம் திருப்பணிக்காக நிதி வழங்கினார். அமைச்சர் கோயில் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு கீரமங்கலம் நோக்கி வந்துகொண்டிருந்தார். அப்போது, கீரமங்கலம் அறிவொளி நகர், நாடோடி பழங்குடிகள் காலனி குடியிருப்புப் பகுதி அருகே கார் வந்து கொண்டிருந்தபோது, தன் புகைப்படத்துடன் கூடிய திருமண வரவேற்பு பதாகையை அமைச்சர் மெய்யநாதன் கண்டுள்ளார். உடனே காரை நிறுத்த சொல்லி விட்டு கீழே இறங்கிய அமைச்சர், அந்தத் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார்.

விழாவில் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்த அமைச்சர் மெய்யநாதன், பரிசுகளும் வழங்கினார். மணமக்கள் மற்றும் பழங்குடி மக்களுடன் சேர்ந்து அமைச்சர் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

மணமக்களை வாழ்த்திய அமைச்சர்

மணமக்களை வாழ்த்திய அமைச்சர்

தொடர்ந்து, அவர்களின் குறைகளைக் கேட்டுக்கொண்ட அமைச்சர், கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார். நாடோடி பழங்குடி மக்களின் திருமண விழாவுக்கு அழைப்பிதழே கொடுக்காத நிலையிலும், வீடு தேடி வந்து மணமக்களை வாழ்த்திய அமைச்சரின் செயலால் அந்தப் பகுதி மக்கள் அனைவரும் நெகிழ்ந்து போயிருக்கின்றனர்.

இதுபற்றி நாடோடி பழங்குடி மக்களிடம் கேட்டபோது, “எங்கப் பகுதியில இருக்க பேரூராட்சி தலைவரு, எங்களுக்குத் தேவையான சில வசதிகளை செஞ்சிக்கொடுத்திருக்காரு. அதே மாதிரி அமைச்சர் எம்.எல்.ஏ-வாக இருக்கும் போதே எங்களுக்கு சில உதவிகளும் செஞ்சிருக்கார். அமைச்சர் இப்போ பல வேலைகளில் இருக்கிறார். அதோடு, இப்ப நாம எல்லாம் கூப்பிட்டா, வருவாரோ என்னமோன்னு நாங்க கூப்பிடலை. அதனால, வரவேற்று பேனர் மட்டும் வச்சோம். ஆனா, நாங்க யாரும் எதிர்பார்க்காத வகையில எங்க வீட்டு கல்யாணத்துக்கு வந்துட்டாரு. எங்களுக்கு கையும் ஓடலை. காலும் ஓடலை. சில கோரிக்கைகளை வச்சோம். செய்திறதா சொல்லியிருக்காரு. அவர் வந்ததுல எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்” என்றனர்.Source link

Leave a Reply

Your email address will not be published.

Live Updates COVID-19