ஆறு ஆஸ்கர் விருதுகளை அள்ளிய DUNE!

ஆறு ஆஸ்கர் விருதுகளை அள்ளிய DUNE!


94வது ஆஸ்கர் விருதுகள் விழாவில் ஆறு விருதுகளை வென்று DUNE திரைப்படம் வரலாறு படைத்துள்ளது.

94வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா வண்ணமயமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.மொத்தம் உள்ள 23 பிரிவுகளில், ஒவ்வொன்றாக ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை ஆறு ஆஸ்கர் விருதுகளை குவித்து DUNE திரைப்படம் சாதனை புரிந்துள்ளது. சிறந்த காட்சியமைப்பு, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலிக்கலவை, சிறந்த ஒரிஜினல் ஸ்கோர், சிறந்த எடிட்டிங், சிறந்த புரோக்‌ஷன் டிசைன் என பிரிவுகளில் விருதுகளை வாரிக் குவித்தது DUNE.

Dune (2021) - IMDb

சிறந்து துணை நடிகருக்கான விருது ட்ராய் கோட்சர்க்கு வழங்கப்பட்டது. கோடா (Coda) என்ற படத்தில் நடித்ததற்காக அந்த விருது ட்ராய் கோட்சர்க்கு வழங்கப்பட்டது. சிறந்த துணை நடிகைக்கான அரியானா டிபோஸ்க்கு வழங்கப்பட்டது. வெஸ்ட் சைட் ஸ்டோரி படத்தில் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியமைக்காக இந்த விருதை வென்றார் அரியான டிபோஸ். சிறந்த திரைக்கதைக்கான விருதை பெல்பாஸ்ட் படத்திற்காக கென்னத் ப்ரனாக் வென்று அசத்தியுள்ளார். 

Troy Kotsur Wins Historic Best-Supporting-Actor Prize for 'CODA' at Oscars  2022 | Vanity Fair

சிறந்த அனிமேஷன் திரைப்படமாக டிஸ்னியின் என்காண்டோ (Encanto) தேர்வாகியுள்ளது. சிறந்த அனிமேஷன் குறும்படமாக தி விண்ட்ஷீல்ட் வைபர் தேர்வாகியுள்ளது. சிறந்த குறு ஆவணப்படமாக பென் ப்ரவுட்புட் இயக்கிய தி குயின் ஆஃப் பேஸ்கட்பால் தேர்வாகியுள்ளது. சிறந்த ஆவணப்படமாக ரிஷ் அகமது மற்றும் அனைல் கரியா இயக்கிய தி லாங் குட்பாய் தேர்வாகியுள்ளது.

Encanto | Disney Movies

சிறந்த சிகை மற்றும் ஒப்பனை அலங்காரத்துக்கான ஆஸ்கர் விருதை தி ஐஸ் ஆஃப் டேம்மி ஃபேய் (The eyes of tammy faye) வென்றுள்ளது. இந்த விருது லிண்டா டவுட்ஸ், ஸ்டெபைன் இங்ராம் மற்றும் ஜஸ்டின் ரலெய்ன் ஆகிய மூவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது. சிறந்த அயல்நாட்டு திரைப்படமாக ஜப்பான் நாட்டின் டிரைவ் மை கார் (Drive my automobile) தேர்வாகியுள்ளது. சிறந்த ஆடை அலங்காரத்துக்கான விருதை க்ருயெல்லா திரைப்படம் தட்டிச் சென்றுள்ளது. மிகச் சிறந்த முறையில் நாயகிக்கு உடைத் தேர்வு செய்தமைக்காக ஜென்னி பீவன் இந்த விருதை வென்றார்.

undefined

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COMSource link

Leave a Reply

Your email address will not be published.

Live Updates COVID-19