ஆம்பூர்: இன்ஸ்டாகிராமில் மூழ்கிக்கிடந்த பள்ளி மாணவி! – பெற்றோர் கண்டித்ததால் தற்கொலை | school girl in Ambur commits suicide after her parents scold over mobile overuse

ஆம்பூர்: இன்ஸ்டாகிராமில் மூழ்கிக்கிடந்த பள்ளி மாணவி! – பெற்றோர் கண்டித்ததால் தற்கொலை | school girl in Ambur commits suicide after her parents scold over mobile overuse


ஷார்ட் வீடியோ பிளாட்ஃபார்ம்கள் நிறைய வந்துவிட்டதால், செல்போன்களிலேயே பலரும் மூழ்கிக் கிடக்கிறார்கள். அதிலும், இந்தியாவில் டிக்டாக் செயலி முடக்கப்பட்ட பின்பு, அங்கிருந்த கிரியேட்டர்களும், பார்வையாளர்களும் இன்ஸ்டா ‘ரீல்ஸ்’ பக்கம் திரும்பிவிட்டார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரீல் வீடியோக்களைப் பதிவிடுகிறார்கள். இப்படியான சமூக வலைதளப் பொழுதுபோக்கு அம்சங்களால், நிறைய ஆபத்துகளும் இருக்கத்தான் செய்கின்றன. அந்த வகையில், இன்ஸ்டாகிராமில் மூழ்கிக் கிடந்த மாணவியைக் கண்டிக்கும் வகையில் பெற்றோர் செல்போனைப் பிடுங்கியதால், மனமுடைந்த அந்த மாணவி தற்கொலைச் செய்துகொண்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகேயுள்ள உடையராஜபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன், ஆட்டோ ஓட்டுநர். இவர் மகள் மாதனூர் பகுதியிலிருக்கும் அரசு நிதியுதவிப் பெறும் பள்ளியில் 10-ம் வகுப்புப் படித்து வந்தார். இந்த நிலையில், அந்த மாணவி படிப்பில் கவனம் செலுத்தாமல், செல்போன் பயன்படுத்துவதிலேயே அதிக நேரத்தை செலவிட்டுவந்ததாகக் கூறப்படுகிறது.Source link

Leave a Reply

Your email address will not be published.

Live Updates COVID-19