“பாஜக முஸ்லிம் சமூகம் மீது அன்பைப் பொழிகிறது..!” – யோகி 2.0-வின் இஸ்லாம் அமைச்சர் பேட்டி | BJP is getting love of Muslim society now: Muslim minister in UP govt

“பாஜக முஸ்லிம் சமூகம் மீது அன்பைப் பொழிகிறது..!” – யோகி 2.0-வின் இஸ்லாம் அமைச்சர் பேட்டி | BJP is getting love of Muslim society now: Muslim minister in UP govt


உத்தரப்பிரதேசத்தில் நடந்த முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றிபெற்ற பா.ஜ.க., இரண்டாவது முறையாக யோகி ஆதித்நாத் தலைமையில் ஆட்சி அமைத்திருக்கிறது. இந்தமுறை யோகி அமைச்சரவையில் முஸ்லிம்களின் முகமாக இருந்த அமைச்சர் மகசின் ராஜாவுக்கு பதிலாக டேனிஷ் ஆசாத் அன்சாரி என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஆசாத் அன்சாரி

ஆசாத் அன்சாரி

சட்டமன்றத் தேர்தலில் தீவிரமாக பணியாற்றிய பிறகு முசோரியில் ஓய்வில் இருந்த 33 வயதான டேனிஷ் ஆசாத் அன்சாரி, லக்னோ திரும்பி வந்த பிறகு எந்த தகவலும் இல்லாமல் திடீரென யோகி ஆதித்யநாத் தலைமையிலான புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார். இவருக்கு மாநில சிறுபான்மையினத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. 2011-ல் அவர் ஆர்.எஸ்.எஸ்-ஸின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி) -ல் உறுப்பினராக சேர்ந்தார்.

2018 வரை ஏ.பி.வி.பி-யின் லக்னோ மகாநகர் பிரிவில் பல்வேறு நிறுவன பதவிகளை வகித்தார். அதன்பின்னர், 2018 முதல் உருது மொழி குழுவில் உறுப்பினராக இருந்தார். அதைத் தொடர்ந்து, அன்சாரி முந்தைய ஆட்சியில் உத்தரப்பிரதேசத்தின் சிறுபான்மை பிரிவு பொதுச் செயலாளராக இருந்தார்.

இந்த நிலையில், ஓ.பி.சி வகுப்பைச் சேர்ந்த அவருக்கு ஓ.பி.சி முஸ்லிம் வாக்காளர்களை கவர அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆசாத் அன்சாரி கூறுகையில், “பா.ஜ.க முஸ்லிம்களுக்கு எதிரான கட்சி எனும் சன்னி முஸ்லிம்களின் கருத்து எப்போதோ மாறிவிட்டது. யோகி அரசு முஸ்லிம் சமூகத்திற்கான அனைத்து பணிகளையும் திறம்பட செய்துள்ளது.

மோடி, யோகி

மோடி, யோகி

ரேஷன், வீடுகள், ஆயுஷ்மான் அட்டைக்கான திட்டங்கள் மூலம் அனைத்து பிரிவினரும் பயனடைந்துள்ளனர். முஸ்லிம்களும் அதைப் புரிந்து கொண்டு பா.ஜ.க, மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் அவர்களை நேசிக்கிறார்கள். பா.ஜ.க இப்போது முஸ்லிம் சமூகத்தின் மீது அன்பைப் பொழிகிறது. பிரதமர் மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் மீதான முஸ்லிம்களின் அன்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது” என்று கூறியுள்ளார்.Source link

Leave a Reply

Your email address will not be published.

Live Updates COVID-19