கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணையைச் சோதித்த வடகொரியா – கூடுதல் பொருளாதாரத் தடை விதித்த அமெரிக்கா! U.S. imposes sanctions targeting North Korea’s missile program

கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணையைச் சோதித்த வடகொரியா – கூடுதல் பொருளாதாரத் தடை விதித்த அமெரிக்கா! U.S. imposes sanctions targeting North Korea’s missile program


அமெரிக்கா ஏற்கெனவே வட கொரியா மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளது. அதன் காரணமாக வட கொரியாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதற்கிடையே கொரோனா தொற்றுப் பரவல் அந்நாட்டின் பொருளாதார நிலையை மேலும் மோசமாக்கியுள்ளது. இந்நிலையில், ‘ஹவாசங்-17’ என்ற கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வட கொரியா வியாழக்கிழமை பரிசோதித்தது. வட கொரியாவின் ஆயுதத்திறனை உலகுக்குக் காட்டவே அடிக்கடி ஏவுகணை பரிசோதனை நடத்துவதாகக் கூறப்படுகிறது. கடந்த 2017-ம் ஆண்டுக்குப் பிறகு வட கொரியா பரிசோதனை நடத்திய மிகவும் சக்திவாய்ந்த ஏவுகணை இது எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வட கொரியாவின் ஏவுகணைத் திட்டத்துக்குத் தேவையான மூலப்பொருள்களை வழங்கிய ஐந்து நிறுவனங்கள், தனிநபா்கள் மீது அமெரிக்கா கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளதாக அமெரிக்கா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Source link

Leave a Reply

Your email address will not be published.

Live Updates COVID-19