ஆஸ்கர் 2022: “தங்கத்தை வீட்டிற்குக் கொண்டு வாருங்கள்”- தெற்காசிய கலைஞர்களுக்கு பிரியங்கா சோப்ரா வாழ்த்து | Oscars 2022: Ahead Of The Academy Awards, Priyanka Chopra Hosts a party honoring South Asian Nominees

ஆஸ்கர் 2022: “தங்கத்தை வீட்டிற்குக் கொண்டு வாருங்கள்”- தெற்காசிய கலைஞர்களுக்கு பிரியங்கா சோப்ரா வாழ்த்து | Oscars 2022: Ahead Of The Academy Awards, Priyanka Chopra Hosts a party honoring South Asian Nominees


வரும் மார்ச் 27-ல் இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதற்கு முன்னர் மார்ச் 24-ல் தெற்கு ஆசியாவிலிருந்து ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் கலைஞர்களுக்கான விருந்து நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆஸ்கர் ரேசிலிருக்கும் 10 தெற்காசிய கலைஞர்கள் பங்குகொண்டனர்.

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா

அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரியங்கா சோப்ரா, தெற்காசிய திரைத்துறை இந்த அளவிற்கு வளர்ந்திருப்பதை பார்க்கையில் தான் பெருமை கொள்வதாகவும் இதுபோன்று திரைக்குப் பின்னால் அயராது உழைப்பவர்களை கௌரவிக்கும் ஆஸ்கர் அகாடமிக்கு தான் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார். மேலும் “இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி” என்றும் தெரிவித்திருந்தார்.

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா

இது பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட பிரியங்கா, “இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் 10 தெற்காசிய கலைஞர்கள் மற்றும் இதையெல்லாம் சாத்தியமாக்க திரைக்குப் பின்னால் அயராது உழைக்கும் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்களை கௌரவிக்கும் ஆஸ்கர் விழா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தது எனக்கு ஒரு சிறப்பு மரியாதையாக இருந்தது. எங்கள் திரைத்துறை இவ்வளவு தூரம் வந்திருக்கிறது என்று நினைத்து பார்க்கையில் அது என்னை மிகவும் பெருமை கொள்ளச் செய்கிறது” என்று தெரிவித்திருந்தார்.

இறுதிக் குறிப்பாக, “பரிந்துரை செய்யப்பட்டவர்களுக்கு வாழ்த்துகள்! தங்கத்தை வீட்டிற்குக் கொண்டு வாருங்கள்” என்று வாழ்த்தியிருந்தார்.Source link

Leave a Reply

Your email address will not be published.

Live Updates COVID-19