IPL 2022 – LSG Starting 11: பலமான அணி, எக்கச்சக்க ஆப்ஷன்கள்… சாதிக்குமா ராகுலின் படை?

IPL 2022 – LSG Starting 11: பலமான அணி, எக்கச்சக்க ஆப்ஷன்கள்… சாதிக்குமா ராகுலின் படை?


குஜராத் டைட்டன்ஸுடன் இவ்வருட ஐ.பி.எல் தொடரில் புதிதாக இணைந்திருக்கும் மற்றுமொரு அணி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ். குஜராத் அணியை போல் அல்லாமல் லக்னோ அணி ஓரளவு பலமாகவே காட்சியளிக்கிறது. சரி, இப்போது ஸ்டார்டிங்-11ஐ பார்த்துவிடுவோம்.

KL Rahul | கே.எல்.ராகுல்

ஒப்பனிங் ஸ்லாட்டில் சந்தேகமே இல்லாமல் கே.எல்.ராகுல் மற்றும் டி காக்தான் ஆடப்போகிறார்கள். ஐ.பி.எல் தொடரின் சமீப சீசன்களில் தன் பேட்டால் தொடர்ந்து நிரூபித்து வருபவர் டி காக். கேப்டன் ராகுல் உடனான இவரது கூட்டணி அணியின் பேட்டிங் யூனிட்டிற்கு இன்றியமையாததாக இருக்கப்போகிறது. ராகுலைப் பற்றிச் சொல்லத் தேவை இல்லை. தற்போதைய தேதியில் ஐ.பி.எல் தொடரின் கன்சிஸ்டன்ட் பேட்டராக இவரை எளிதில் கை காட்டிவிடலாம். பஞ்சாப் அணியின் வெற்றிக்கு அவர் எந்தளவுக்கு பங்களித்தார் என்பதைத் தாண்டி அவரிடம் இருந்து ரன்கள் வந்துக்கொண்டே இருக்கும் என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லிவிடலாம்.

ஒன்-டவுனிற்கான இடத்தில் இவான் லீவிஸின் பெயரை கருதினாலும், அவரைத்தாண்டி மனிஷ் பாண்டேதான் சரியான தேர்வாக இருப்பார். என்னதான் அவர் ஐ.பி.எல்-லில் அத்தனை சிறப்பான ஆட்டத்தை சமீப ஆண்டுகளில் வெளிப்படுத்தவில்லை என்றாலும் கர்நாடகா அணியை வழிநடத்தி செல்லும் அனுபவம், ஒன்-டவுன் பொசிஷனில் அவருக்கு இருக்கும் எண்கள் ஆகிவை மனீஷின் இடத்தை உறுதி செய்கின்றன.

லக்னோ அணியில் இதற்கடுத்ததாக வரும் வீரர்கள் அனைவருமே ஆல்-ரவுண்டர்கள்தான். அவர்களில் ஜேசன் ஹோல்டரை தவிர மீதமுள்ளவர்கள் அனைவரும் நான்கு ஓவர்களையும் வீசக்கூடியவர்களா என்பது சந்தேகமே. இப்படி இருக்க ஒரு முழுமையான பௌலரை அணியில் சேர்ப்பதே நல்லது. மார்க் வுட் தொடரில் இருந்து விலகியுள்ளதால் அவரின் இடத்திற்குத் தற்போது சமீரா பொருத்தமானவராக இருப்பார். மூன்றாவது இடத்தில் இவான் லீவிஸ் இடம்பெறும்பட்சத்தில் சமீராவின் இடம் கேள்விகுறியாகிவிடும். அதனால் எந்த வகையில் பார்த்தாலும் மனீஷ் பாண்டேதான் பொருத்தமாக இருக்கக்கூடியவர்.

இவருக்கு அடுத்ததாக சுமார் ஐந்து ஆல்-ரவுண்டர்கள் தொடர்ச்சியாக வருகிறார்கள். தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டாய்னிஸ், க்ருனால் பாண்டியா, கே.கெளதம், ஜேசன் ஹோல்டர். இதுதான் பட்டியல். இதில் ஒரு முழுமையான பேட்டர் அல்லது பௌலர் யாரேனும் அணியில் சேர்க்கப்பட வேண்டுமென்றால் கெளதம் தன் இடத்தை விட்டு இழக்க வேண்டி வரும். மனீஷ் பாண்டேவும் சிறப்பாக ஆடாத பட்சத்தில் வேறொரு ஆப்ஷனை அணி நிர்வாகம் யோசிக்கக்கூடும். மற்றபடி மீதமுள்ள அனைவருமே தங்களை நிரூபித்தவர்கள்.

எனவே, தற்போதைக்கு எட்டு வீரர்கள் முடிவாகி விட்டது. சமீராயோடு சேர்த்து இந்த எண்ணிக்கை 9-ஆகிறது. மீதமுள்ள இரண்டு இடங்களும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டவைதான். ஒருவர் அணியால் டிராஃப்ட் செய்யப்பட்ட ரவி பிஷ்னாய், இன்னொருவர் சுமார் 10 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ஆவேஷ் கான். இவ்வாறாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஸ்டார்ட்டிங்-11 முடிவுக்கு வருகிறது.

Krunal Pandya

இதில் கெளதம், சமீரா கூடுதலாக மனிஷ் பாண்டே, ஆன்ட்ரூ டை இந்த நால்வரின் இடங்களும் தங்களின் பெர்ஃபார்மன்ஸ், அணியின் காம்பினேஷன் ஆகிவற்றை பொறுத்து மாற்றப்படலாம். மேலும் வீரர்கள் ஃபிட்னெஸும் லக்னோ அணிக்கு பின்னடைவாக அமையலாம். குறிப்பாக அணிக்கு அத்தனை பலம் சேர்க்கக்கூடியவராக விளங்கும் ஸ்டானிஸ் போன்றோர் எளிதில் காயமடைந்துவிட கூடுவர் என்பதால் அதையும் அணி நிர்வாகம் கருத்தில் கொள்ள வேண்டும்.

மற்றபடி ஒரு அணியாக பார்க்கையில் நல்ல பலத்துடன் இருக்கும் லக்னோ அணி களத்தில் எப்படி செயல்பட போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

LSG – Beginning 11: கே.எல்.ராகுல் (c), குவின்டன் டி காக் (wk), மனிஷ் பாண்டே, தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டாய்னிஸ், க்ருனால் பாண்டியா, ஜேசன் ஹோல்டர், கே.கெளதம், ரவி பிஷ்னாய், சமீரா, ஆவேஷ் கான்.Source link

Leave a Reply

Your email address will not be published.

Live Updates COVID-19